(Reading time: 21 - 42 minutes)

 

ன்னைக்கு கோக் எவ்வளோ ஃப்ரண்ட்லியா பேசினாங்க தெரியுமா? அவங்க பேச பேச  ‘நீ செய்தது கோகிலாவையும் பாதிக்கும்’ன்னு நீங்க சொன்னது வேற மனசை குடைஞ்சுகிட்டே இருந்தது ஆர்யா! அவங்க முகத்தை பார்த்து பேசவே முடியலை!”,

என்று சொல்லும் பொழுது அவள் குரல் தாழ்ந்து போனதே.. அதை உண்மை என்று காட்ட.... ‘உண்மையிலே இவளை  அண்டர் எஸ்டிமேட் செய்துட்டோமோ... எல்லாமே புரியும் சொல்ல முடியாதுன்னாலும்.. ஏதோ புரியதோ!!’, என்ற யோசனையுடனே அவன் நடக்க...

“சோ.. நான் செய்தது எல்லாத்தையும்.. ஈவன், அந்த போட்டோ எடுத்தது.. அதை டெலீட் செய்ய சொல்லி நீங்க கொடுத்த அட்வைஸ்... என்னோட கில்ட் ஃபீல்... இதை எல்லாத்தையும் சொல்லி ஸாரி கேட்டேன்!”

என்றதும் ப்ரேக் போட்டது போல நின்று விட்டான்.. “என்னது போட்டோ எடுத்ததை சொன்னியா?”, என்று திகைத்து வினவினான்.. அந்த சமயம் அவர்கள் லிஃப்ட் அருகே வந்திருக்க...

அவன் கேட்டதும் “ஷ்ஷ்.. நீங்க பேசுறது லிஃப்ட்ல உள்ளவங்களுக்கும் கேட்கும்!”, என்றாள் ரகசியக் குரலில்.

‘நான் சொன்னது எனக்கேவா???’, என்பது போல அவளைப் பார்க்க..

“சீக்கிரம் வாங்க ஆர்யா... லிஃப்ட் வந்திடுச்சு!”, எதுவும் நடவாதது போல சொல்லிச் சென்றவள்... லிப்ட்டில் தங்கள் ப்ராஜெக்ட் தளத்திற்கு வந்த பிறகு அவனிடம் மீண்டும்..

“நான் ஸாரி கேட்டேனா அதுக்கு கோக்..”, என்று ஆரம்பிக்க..,

இடையிட்டவன்...

“நான் யார்கிட்ட பேசினாலும் ரூமரா வந்திடும்! எனக்கு பழகிடுச்சு! நீங்களும் அப்படி தான் நினைச்சிருக்கீங்க! ஆர்வத்தில் தெரியாம தானே செய்தீங்க! அதான் ஆர்யமன் உங்களை சரியா கைட் பண்ணிட்டார்லே.. Don’t feel bad அப்படின்னு ஈஸியா உன்னை மன்னிச்சு விட்டு இருப்பாங்க!”

என்று அவன் சொல்லிக் கொண்டே நடக்க...

அதைக் கேட்டு, ‘என்ன கோக் சொன்னதையே சொல்றான்!!!’, என்று திகைப்பும், முழிப்புமாக அப்படியே நின்று விட்டாள்.... சில எட்டுகள் வைத்தவன் அவள் வராதது கண்டு திரும்பிப் பார்க்க...

அவனையே முறைத்த படி நின்றவள்,

“உண்மையைச் சொல்லுங்க ஆர்யா.. நாங்க பேசுறதை ஒட்டு கேட்டீங்க தானே?”, விரலை ஆட்டி தீவிரமாக முகத்தை வைத்து மிரட்டுவது போல கேட்க...

“ஒட்டு கேட்கிறதா???”, கன்னக்குழி விழ சிரித்துக் கொண்டே அவளருகில் வர..

அதை கண்கள் பள பளக்க பார்த்த அஞ்சனாவிடம்,

“கோக் பத்தி நல்லாவே தெரியும்! வெரி ஃப்ரண்ட்லி!  அதோட அவங்க நெகடிவ்வா பேசியிருந்தா நீயும் இப்படி இருக்க மாட்டே!”, என்றான்..

இவன் இப்படி சொல்லவும் இன்னுமே கோகிலாவை பிடித்து போக...

“எஸ் ஆர்யா!! அவங்க ரொம்ப நல்லவங்க! உங்களை மாதிரி தான்.. சிரிக்கிறப்போ அவ்வளோ சார்மிங்!!! அவங்களை பத்தி நான் யோசிக்காம போயிட்டேன்! என்னாலே அவங்க சங்கடப்பட்டுடக் கூடாது! நான் செய்ததாலே.. அவங்களுக்கு எதுவும் சிக்கல் வருமா ஆர்யா? வராதுல? ஐ பீல் கில்டி!!”

குன்றலுடன் கேட்டவள் முகத்தில் கவலை படர.. அவள் கண்களைப் பார்த்து,

“முடிஞ்சதை யோசிக்காதே! இனி செய்யக் கூடாது அவ்வளவு தான் மனசுலே வைக்கணும்!”, என்றான் கண்டிப்புடன்!!!

“ம்ம்ம்.. செய்ய மாட்டேன்“, தலையசைப்புடன் அதை ஏற்றுக் கொண்டாலும் இன்னும் கோகிலா மீதிருந்த குற்ற உணர்வு அகலாமல்... இரக்கம் அதிகமாகி...

“நீங்களும் அவங்களுக்கு லவ் ப்ரேக் அப் ஆகணும்ன்னு  நெகடிவ்வா நினைக்க வேண்டாமே! உங்க மேலே எவ்வளோ மரியாதை வைச்சிருக்காங்க தெரியுமா? ப்ளீஸ்!!!”, என்று அவளுக்காக பேச....

‘மால்ல எப்படி பேசினா! இன்னைக்கு எப்படி பேசுறா... She is Unpredictable!!!’, என்று எண்ணிக் கொண்டவன் அவள் கண்களை நோக்கி,

“நான் லவ் பண்ணா தானே, ப்ரேக் அப் ஆகணும்னு நினைக்க போறேன்!!!”, என்றான் நிதானமாக! தெளிவாக!

குழம்பிய அஞ்சனா,

“நேத்து பிக் அப்... ட்ராப்ன்னு சொன்னீங்க?”, என்பது போல புருவ முடிச்சிட அவனைப் பார்க்க...

“வேற வழி!! பிக் அப்... ட்ராப்ன்னு சொல்லலைன்னா, அடுத்து இன்னொரு பொண்ணோட சேர்த்து ஆரம்பிப்பே!”, என்றதுமே அஞ்சனாவால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை!!!

“பொய் சொல்றீங்க ஆர்யா!!!”, என்று உறுதியாக மறுத்தவள்,

“எத்தினிக் டேயில் கோக்கை பார்த்தப்போ இருந்த உங்க முகமும்.. இப்போ  கோக்கை பார்த்தப்போ இருந்த உங்க முகமும் ஆறு இல்லை அறுபதாயிரம் வித்தியாசத்தை காட்டுது! யு ஆர் டீப்லி ஹர்ட்! அதான் இப்படி பேசுறீங்க!”

என்று அவன் முகத்தை படித்து விட்டு.. மனதை படித்த மாமேதை போல.. அவள் நிச்சயமாக உணர்ந்ததை அப்படியே பேசினாள்!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.