(Reading time: 21 - 42 minutes)

 

ய்யோ.. மறுபடியும் அதே இடத்தில் வந்து நிற்கிறாளே!!!’

அவளிடம் இல்லை என்றோ ஆமாம் என்றோ சொல்ல முடியாமல் தவித்தான் இவன்! 

இவளிடம்  என்ன சொல்ல? எப்படி சொல்ல?

‘எதுக்கு சொல்லணும்?’ என்றது  மனம்! இல்லை சொல்லியே ஆகணும் என்று உந்தி தள்ளியது மனதையும் தாண்டிய ஒரு உணர்வு! இந்த விஷயத்தை இவள் விடப் போவதில்லை என்றது மூளை!!!

அவளுமே விடப் போவதில்லை என்பது போலவே அவனையே பார்த்து நிற்க...

“டீப்லி ஹர்ட்டா?? என்ன பத்தி என்ன தெரியும் உனக்கு? இந்த காதல், கல்யாணம்ன்னு இடியாட்டிக்கா ஒரு வட்டத்துக்குள்ளே வாழ்க்கையை தொலைக்கிற மனுஷன்னு நினைச்சியா என்னை? எனக்குன்னு ”

என்ற பொழுது அஞ்சனா அவன் பின்னே வந்து கொண்டிருந்த சசியைப் பார்த்து விட்டாள்! அவள் பார்வை தன்னிடம் இருந்து பிரியவும் பேசுவதை நிறுத்தி விட்டு அது சென்ற திசையைப் பார்த்தவன்,

“சசி உன்னை தான் தேடி வர்றாங்க! இன்னையில் இருந்து அவங்க டீம்!”, என்றான் அஞ்சனாவிடம்!

“சசி டீம்லயா??!!!”, என்று விழி அகல விரிந்து இவனைப் பார்க்க..

“தினேஷ் ஈமெயில்ல பார்க்க தெரியுது?!!! இதை பார்க்கலையா?”, என்று சிடுசிடுக்க...

‘டென்ஷனா இருக்கிறார்! ப்ச். கோக் மறக்க முடியலை! இந்த லவ் ஃபெயிலரை சரி செய்து அந்த இடியாட்டிக் காதல், கல்யாணம் செய்ய வைக்காம ஓய மாட்டா இந்த அஞ்சனா!.”, என்று தனக்குள் தீர்மானமே நிறைவேற்ற...

அதற்குள் இவர்கள் அருகில் சசி வந்து விட அவளை நோக்கி,

“அந்த கேண்டிடேட் போயிட்டாரா?...”, இவன் கேட்டதும்..

ஹச். ஆர்ரிடம் அனுப்பி வைத்திருப்பதாக சொல்லவும் அவர்கள் உரையாடலில் இடைபுகுந்த அஞ்சனா..

“அந்த கேண்டிடேட் கிடக்குறார்.. நான் பாதியில் விட்ட கொலாஜ் வேலை எங்கே இருக்குன்னு சொல்லுங்க அதை முடிச்சிட்டு சசி டீம்க்கு போறேன்!”, என்றாள் ஆர்யமனிடம்..

‘எந்த கொலாஜ்??’, முதலில் யோசித்து.. பின் நினைவு கூர்ந்தவன் அதைப் பற்றி பேசாது,

“அது போன வாரம்! இந்த வாரம் புது வேலை! புது டீம்! ஆல் தி பெஸ்ட் காஞ்சனா! உங்க லீடர் கூட சேர்ந்து எவனா இருந்தா என்னன்னு பாட்டு பாடி  ஓபி அடிக்காதே!”,

என்று பேச்சுவாக்கில் சசியை பார்த்த படி உசுப்பேற்றி  விட....

“அஞ்சு! வா! உனக்கு நிறைய டாஸ்க் அலாட் பண்ணியிருக்கேன்! இங்க நின்னு  நாம டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்!”, என்று சசி அவளை கூட்டி செல்ல,

‘யப்பாடி! கடம உணர்ச்சிக்கு அளவே இல்லை சசி! ஒரு டாஸ்க் அவளை செய்ய வைச்சிடு பார்க்கலாம்!’, உள்ளுக்குள் ஆர்யமன் சவால் விட்டான்!

அஞ்சனா சசி இழுத்த இழுப்பிற்கு இரண்டு எட்டு நடந்தவள்.. பின் திரும்பி பின்னெட்டு வைத்துக் கொண்டே பின்னின்றவனைப் பார்த்து,

“லஞ்ச் ப்ரேக்ல கொலாஜ் வொர்க்!!!! டீல்??”, என்று கட்டை விரலை உயர்த்தி, புருவம் மேலும் கீழுமாக ஏறி இறங்க ஆர்வமுடன் கேட்டதும்..

‘அது உன் குதிரை கையில் சேர்ந்தாச்சே! விடவே மாட்டியா?’, என்று தனக்குள் சொல்லிக் கொண்டே பெரிதாக சிரித்தான்!!!   

அவன் சிரிப்பில் கன்னக்குழி விழுவதை ஆர்வமுடன் பார்த்தவள்.. தன் கன்னத்தை தொட்டு காட்டி ‘சூப்பர்!!’, என்பது போல சைகை காட்டி விட்டு.... அவன் சிரிப்பே சம்மதம் என்று திருப்தியுடன் திரும்ப...

“அவன் வில்லத்தனமா சிரிக்கிறான்! சூப்பர்ன்னு சொல்றே!’, என்றாள் சசி சற்று மெல்லிய குரலில்... “வில்லத்தனமாவா?? ஹா.. ஹா..  எங்க சிபி இப்படி தான்..”, என்று அவள் தோள் மீது கை போட்ட படி கையை காற்றில் ஆட்டிய படி பேசிக் கொண்டே செல்ல...

அவள் பேசிய மொழி சிலதும்.. பேசா மொழிகள் பலதுமாக...

ஒன்று விடாமல் பருக துடிக்கும் கண்களை தவிர்க்க இயலாமல் அவன்... இதை எதையும் அறிய முயலாமல் இவள்!!!

காதல் மாயையா??!!! மாயை காதலா???!!!

மெய் தீண்டா மாயையை

இவன் உயிர் தீண்டி

மெய் என்றாக்கிடுமோ.. 

கன்னி இவள் மொழி!!

தொடரும்

Episode 17

Episode 19

{kunena_discuss:922}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.