(Reading time: 21 - 42 minutes)

ஹே.. குட் மார்னிங்!!”,

என்று சொல்ல... தன்னிலைக்கு வந்தவன்..

“மார்னிங்”, என்று இயந்திரத்தனமாக சொல்லி விட்டு டைனர் கத்தியை எடுத்தவன் தன் தட்டில் இருந்த இட்லியை கூறு போடுவதிலே கவனமாக இருக்க..

‘என்ன பார்க்க கூட மாட்டேங்கிறான்... இன்னும் கோபமா இருக்கிறானா?’

என்று  அவனை ஐஸ் வைக்கும் முயற்சியாக... அதாவது கோகிலாவைப் பற்றி பேசினால் மகிழ்ச்சியடைவான் என்று..

“கோக் பத்தி சீக்ரெட் சொல்லவா???”, என்றாள் ஆர்வமாக...

அதை காதிலே வாங்கி கொள்ளாமல் அவன் சாப்பிட ஆரம்பிக்க.. அருகில் வந்து ரகசியக் குரலில்

“ஆர்யா பப்பி!!!”, என்று..

இதயத்தின் ரகசிய மங்கையின் பெயராயிற்றே! என்ன செய்வான்? கையில் எடுத்த உணவை அப்படியே நிறுத்திக் கொண்டு அவளை நோக்கி நிமிர...

“எஸ் பப்பி தான் கோகிலா பெட் நேம்!!! அதை பத்தி இன்னொரு சீக்ரெட்டும்  இருக்கு!!!”, என்று புதிர் போட ஆரம்பித்தவளை... எரிச்சலுடன்

“என்னை சாப்பிட விடுறியா?”, என்று கடிய...

அப்பொழுதும் அவனுக்கு பதில் பேசுவதே குறியாக,

“வாய் தானே சாப்பிடுது ... காது இல்லையே..”, என்று அலட்சியமாக அவள் சொல்ல....

“ச்சே!!! அதை கூட செய்யலை! போதுமா!!! சரியான மூட்டைப் பூச்சி!!!”, கையை உதறி விட்டு விருட்டென்று எழுந்தே விட்டான்! இயலாமையின் எதிரொலி!!! காண வேண்டிய காட்சிகளை மறைத்து.. கேட்க வேண்டியதை தடுத்து ஆடும் விதியின் விளையாட்டிற்கு அவன் என்ன செய்வான்? 

அஞ்சனா பதறி அவன் கூடவே எழுந்தவள்...

“அய்யோ ஸாரி ஆர்யா!!”,

“நான் பேசலை! பாருங்க! வாயை டைட் சீல் பண்ணிக்கிறேன்!!”, என்று மட்டியை மடித்து காட்டி அவன் பார்வையை தன் இதழ்களில் படர விட...

கண்களை மூடி, “ஹய்யோ!!!!!”, என்று நெற்றியைப் பிடித்த படி அமர்ந்தான்! ஆனால், இதை அவன் செய்யும் பொழுது, யாரோ தன்னையே உறுத்து நோக்குவது போல தோன்ற...  நிமிர்ந்தான்..

அவனுக்கு தோன்றியது உண்மை தான்! இரண்டு டேபிள் தள்ளி அமர்ந்திருந்த முகுந்த் அவர்களையே பார்த்த படி அமர்ந்திருந்தான்! அவன் பார்வையில் அத்தனை வெறுப்பு!!!

‘இவன் ஏன் இப்படி பார்க்கிறான்?’, என்று  ஒரு கணம் அவனிடம் நிலைத்து விட்டு திரும்ப, அதற்குள் அவன் பார்வையைத் தொடர்ந்த அஞ்சனாவும் முகுந்த்தைப் பார்த்து விட்டாள்..

“ஹே செந்தாமரை!!!”, என்று சத்தமாக அழைத்து அவனைப் பார்த்து கையசைக்க....

திடுக்கிட்ட முகுந்த், 

‘மைக் போடாத குறையா செந்தாமரைன்னு கூப்பிட்டு மானத்தை வாங்குறாளே’, என்று சுற்றும் முற்றும் பார்க்க... 

அவன் செய்கையில் ஆர்யமனுக்கு சிரிப்பு வந்து விட்டது! வெறுப்பில் இருந்த முகுந்த்திற்கோ அவமானத்தில் முகம் கன்றியது! ஆர்யமன் வேண்டுமென்றே  அவளை அப்படி கூப்பிட வைத்து தன்னை கிண்டல் செய்கிறான் என்று தான் நினைத்தான்! 

அதை அறியாத அஞ்சனாவோ விடாது, எழுந்து நின்று, “ஹே.. செந்தாமரை”, என்று மீண்டும் அழைத்தாள்... இப்பொழுது இன்னும் சத்தமாக...

அவன் அருகில் அமர்ந்திருந்தவர்களும் அதைக் கேட்டதும்.. அவனை செந்தாமரை என்று கிண்டல் செய்ய.. அவன் இன்னுமாய் அவமானமாக உணர ஆரம்பிக்க...

அதை அறிந்து விட்ட ஆர்யமன்

“ஏலம் விடாம உட்காரு!”,

பல்லை கடித்துக் கொண்டு அழுத்தமாக - அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாய் உரைத்தான்!!!! இதை சொல்லும் முன்னே அவன் கை அவளைப் பற்றி  இழுத்து அமர்த்தியிருந்தது!

கட்டளை அவளுக்கு என்றாலும் பார்வை என்னவோ இன்னும் முகுந்த்திடம் தான்.. இளக்காரமாக!

“அதான் உட்கார்ந்துட்டேன்ல! இன்னும் ‘என்ன கையை பிடிச்சு இழுத்தியா?’ எபெக்ட்லே இருக்கீங்க! வலிக்குது! விடுங்க ஆர்யா”

என்று சிணுங்களுடன் உணர்த்தியதும் தான் அவள் கையை விடாமல் பற்றியிருப்பது நினைவுக்கு வர..

“ப்ச்!!!! ஷிட்”, என்று வேகமாக விலக்கியவன் பார்வை மீண்டும்  முகுந்திடம் திரும்ப... அவன் இவர்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு திரும்பிக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.