(Reading time: 21 - 42 minutes)

பார்த்துக்கோ! எனக்கு என்ன வந்தது!’, என்பது எரிச்சலுடன் பார்வையை அகற்றிய ஆர்யமனிடம்,

அஞ்சனா, “முகுந்த்க்கும் உங்களுக்கும் ஏதாவது பிரச்சனையா?”, என்று கேட்க..

‘அவனா அப்படி நினைச்சா?? நான் என்ன செய்றது!’, என்று ஆதங்கபட்டவன்.. மற்றவர்கள் என்றால் வெளிப்படுத்தாமல்  விட்டிருப்பான்! இவளிடம் ஏனோ மனம் வெகு இயல்பாக திறந்தது..

“அவன் கூடவா?? எனக்கு வேற வேலை இல்லை????!!!!”, என்று அவளை நோக்கி சீற...

“பட், முகுந்த் உங்களை பத்தி.. அதாவது நான் ஆபிஸ்க்கு வந்த பர்ஸ்ட் டேவே.. உனக்கு எப்படி ஆர்யமனை முன்னாலே தெரியும்ன்னு  துருவி துருவி கேட்டார்!”, என்று சொல்ல..

அவன் முகம் கலவரமானது. ஹர்ஷ்ஷிற்கும் இவனுக்குள் உள்ள தொடர்பு தெரிந்தால் என்ன ஆவது? ஹர்ஷ் தன் கம்பெனியை விற்ற பின்னால் இரண்டு ஆண்டுகளுக்கு ஊழியர்களிடம் நேரடி தொடர்பு வைத்து கொள்ளக் கூடாது என்று ஒப்பந்த விதி இருக்கிறதே!

அதனால் தானே மேக்ஸ் சாஃப்ட் நிறுவனர் ஹர்ஷ்ஷூடன் அந்த  ரகசிய ஒப்பந்தத்திற்கே ஒத்துக் கொண்டார் - அதாவது அவன் நிறுவனம் மூலம் மேக்ஸ்சாப்ட்டின்  இலாபம் இரண்டு மடங்கானால், பிரதான பங்குகளை அவனுக்கு கொடுத்து விடுவது என்பது!

இப்பொழுது இவர்கள் தொடர்பு வெளிப்பட்டால்.. ஒப்பந்த விதி மீறல் என்று தேவையில்லாத சட்ட சிக்கலை இழுத்து வைத்து விடும்!

அதை விட நம்பிக்கை போய் விடுமே.. மொத்த நிறுவனத்தையும் தூக்கி நிறுத்திய தன் உழைப்பு நிமிடத்தில் நம்பிக்கை துரோகம் என்று விமர்சிக்கப்படும்! இப்படி ஒரு சூழ்நிலையை தனக்கும் சரி.. ஹர்ஷ்ஷிற்கும் சரி உருவாகிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்!

“நீ என்ன சொன்ன?”, கேட்டவன் கண்களில் அத்தனை தீவிரம்! அதற்கு அசராத அஞ்சனா,

“அஞ்சனாவா கொக்கா!! என் வாயில் இருந்து விஷயத்தை கறக்க முடியுமா என்ன???”, என்று பெருமையாக காலரை தூக்கி விட...

அவளை இளக்காரமாக ஏற இறங்கப் பார்த்தவன்.....

“ம்ம்கும்... காஞ்சனாவா கொக்கா... அந்த கஷ்டத்தைக் கூட கொடுக்காம அவளே வாலண்டியரா சொல்லிடுவா !!”, என்று சொல்லிக் காட்டியதும்.. ரோஷம் ரோசாப்பூவான அஞ்சனா,

“ஹே... கோக் விஷயத்தை வைச்சு என்னை அன்டர் எஸ்டிமேட் பண்ண கூடாது! அது ஏதோ ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சு. அதுக்கு கூட கோக்கிட்ட நீங்க சொன்னதை சொல்லி ஸாரி கேட்டுட்டேன் தெரியுமா?”

கேட்டதும் தான் தாமதம்... மீண்டும் கலவரமானவன்...

“நான் சொன்னதா??? என்னத்தை உளறி  வைச்சே ஓட்டை வாயாட்டம்???”, என்று கேட்க.....

“என்னது ஓட்டை வாயா??!!!!”, அதிர்ச்சி அடைந்த அஞ்சனா..

“அஞ்சனாவோட க்யூட்டான வாய்க்கு இப்படி ஒரு அவப்பேர் வந்தா எப்படி தாங்குவா?”,

என்றவளது இதழ்கள் அவன் பார்வையை மீண்டும் தன் வசம் இழுத்து நிறுத்தி விட்டு... அவனருகில் சென்று ரகசியமாக..

“உங்க லவ் பத்தின சீக்ரெட் மெயின்ட்டேயின் பண்றது அஞ்சனா உயிருக்கே ஆபத்தான விஷயம் தெரியுமா? இருந்தாலும்...”,

என்று உரைத்து விட்டு பின் செல்ல ....

அந்த அதரங்களை அசையாமல் பார்த்துக் கொண்டிருந்த அவன் கண்கள் முன் திடீரென்று அவள் கரம்... அதுவும் கண்ணைக் குத்துவது போல வர... அதிர்ந்து அடிக்க தான் போகிறாள் என்று அவன் தலை பின்னுழுத்துக் கொள்ள...

“ஆர்யா சொல்றான்..”, என்று அவனை சுட்டி சொன்னவள் பின் விரலை தன் பக்கம் சுட்டி,

“அஞ்சனா செய்றா!!”, என்று சொல்லி விட்டு  சூப்பர் ஸ்டார் போல  தன் க்ராஃப் சிகையை கோத...

அவள் செய்கையில் வந்த சிரிப்பை மறைத்தவன்..

“ஆர்யா இப்போ கிளம்புன்னு சொல்றான்.. ”, என்று கையைத் துடைத்து விட்டு எழுந்து நடக்க...

“ஹே... இருங்க ஆர்யா.. நான் கோக்கிட்ட பேசினதை சொல்லிடுறேன்.. அப்புறமா சொல்லுங்க நான் ஓட்டை வாயா இல்லையா!!!”

இதை சொல்லும் பொழுதெல்லாம் தன்னில் நிலைத்த அவன் பார்வையின் அர்த்தம் எதுவும் அறியாதவளாக... தன் கருத்தை சொல்வதே கவனமாக இருந்தவளிடம்...

“கிளம்பு! ஆபிஸ் ஹவர்ஸ் ஆரம்பிக்க பைவ் மினிட்ஸ் தான் இருக்கு.”,

இவன் விரட்ட...

“வாவ்!!! ஃபைவ் மினிட்ஸ் இருக்கே!!!”, என்றாள் தான் சொல்ல வந்ததை சொல்லி முடிக்க எண்ணியவளாக!

‘இவளைப் போய் முதல்ல சசி தலையில் கட்டணும்’, என்று எண்ணிய படியே நடக்க ஆரம்பித்தான் அவன் வேகமாக! அவன் வேகத்திற்கு நடக்க.. இல்லை ஓடியவாறு..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.