(Reading time: 16 - 32 minutes)

'நீ எப்போ வீட்டிலே சாப்பிடறியோ அப்போ நானும் சாப்பிடறேன்.' பார்வையை வேறு புறமாக திருப்பியபடியே சொன்னான் விஷ்வா.

'விஷ்வா... அது இந்த ஜென்மத்திலே நடக்காதுபா...' என்றான் பரத் தழைந்து போன குரலில் 'எனக்கு அந்த வீட்டிலே எந்த உரிமையும் இல்ல...'

'உனக்கு இல்லைனா எனக்கும் இல்லை விடு...'

'விஷ்வா... லுக்.... நான் இனிமே உன் கூட பேசணும்னா நீ முதல்லே வீட்டிலே சாப்பிடணும். ஒரு பதினைஞ்சு நாள் கழிச்சு நான் உனக்கு போன் பண்ணுவேன். அப்போ நீ வீட்டிலே சாப்பிடறேன்னு சொல்லணும்... அதுக்கு அப்புறம் நான் எப்பவும் உன்னோட டச்லே இருக்கேன்.. சரியா?''

....................................................

'என்ன பதிலை காணோம்??? சரி நான் நாளைக்கு ஈவ்னிங் ஊருக்கு கிளம்பறேன்.. எட்டரை மணி ஃபளைட்'

'மறுபடியும் எப்போடா வரே...'

'ம்???' என்றவனின் மனதிற்குள் அபர்ணா வந்து போக, முகம் கொஞ்சம் வாட்டம் கொண்டது. 'தெரியலைடா. எனக்கே தெரியலை. ஒரு வேளை நான் இந்த பக்கம் வராமலே கூட இருக்கலாம். பார்ப்போம்.. நீ வீட்டுக்கு போயிட்டு முதல்லே அம்மா கையாலே ஒரு வாய் தண்ணியாவது வாங்கி குடிச்சிட்டு தூங்கு...' நகர்ந்தான் பரத்.

'ப்ரதர்...' அழைத்தான் விஷ்வா. 'அதெல்லாம் மறுபடியும் சீக்கிரம் வருவீங்க.. நான் வீட்டிலே சாப்பிட மாட்டேன்.. நீங்க  வீட்டிலே சாப்பிடற வரைக்கும்...'

'அப்போ நானும் உன் கூட பேச மாட்டேன் ...பை..' விறுவிறுவென ஹோட்டலுக்குள் சென்று மறைந்தவனை பற்றி யோசித்தபடியே நின்றிருந்தான் விஷ்வா.

'நான் அவனை வீட்டுக்கு வந்து சாப்பிடு என்கிறேனே.??? 'அவன் வீட்டுக்கு வந்தால் அவனை வா வாவென வரவேர்பார்களா என்ன என் அப்பாவும் அம்மாவும்???'

வீட்டுக்குள் நுழைந்து உடை மாற்றிக்கொண்டு கட்டிலில் விழுந்து கைப்பேசியை துழாவியவளுக்கு பேரதிர்ச்சி. '26 மிஸ்ட் கால்ஸ்..' என்றது திரை. மொத்தமும் அருணிடமிருந்து.!!!!

'இறைவா!!! போனை எங்கே போட்டு தொலைச்சே... அப்போலேர்ந்து கூப்பிடறேன்... அறிவிருக்கா உனக்கு???' என பாய்வானே அவன்!!!

அறை கதவை சாத்தி விட்டு அவசரமாக அழைத்தாள் அவன் எண்ணை.

'எங்கேமா இருக்கே...' கனிவில் ஊறிக்கிடந்தது அவன் குரல். அவள் நினைத்ததற்கு நேர் மாறாக!!! நிறையவே வியப்பு அவளிடம்.

'வீட்டிலேதான் இருக்கேன். ஃபங்க்ஷன் முடிய கொஞ்சம் லேட் ஆச்சு.. இப்போதான் வந்தேன். ஃபோன் சைலன்ட்லே போட்டிருந்தேன். உங்க கால் பார்க்கலை.... ' என்றாள் தயக்கதுடன்.

'இட்ஸ் ஓகே விடும்மா... ' அவன் சொல்ல வியப்பின் உச்சியில் இருந்தாள் அவள்.

ஏன்??? அவனுக்கே ஆச்சர்யம் தான். ஒரு பொருள் நம் கையை விட்டு போய் விடுமோ என்ற பயம் வரும்போதுதான் அதன் மீது நிறைய ஆசை வருகிறதோ???

'வேறே... வேறே... ஒண்ணும் பிரச்சனை இல்லை தானே??? இல்ல... ஈவினிங் நீ ஃபோன் பண்ணப்போ நான் கொஞ்சம் வேறே மூட்லே இருந்தேன். சாரிப்பா... சட்டுன்னு கால் கட் பண்ணிட்டேன்...'

'ம்...'

'என்ன ம்??? நான் டி.வி.யிலே அதை பார்த்தேன்'

டி,விலையா??? என்னது???' கொஞ்சம் வியப்புடன் கேட்டாள் அவள். அவை எல்லாம் நேரடி ஒளிபரப்பாக  டி.வி யில் வந்திருக்கும் என தெரியவில்லை அவளுக்கு.

'இல்ல அந்த பரத்... அந்த பாட்டு அதெல்லாம்...'

'அப்படியா???' ஏதோ யோசனை அவளிடம் 'ஆமாம் அதை பார்த்ததும் உங்களுக்கு என்ன தோணிச்சு???' சட்டென கேட்டும் விட்டாள்.

'எனக்கா??? ஒண்ணும் தோ.... தோணலையே ...ஆமாம் ஈவினிங் என்கிட்டே ஏதோ முக்கியமா சொல்லணும்னு சொன்னியே என்ன அது???'

'அதுவா?' என்றாள் யோசனையுடன்.

இதைத்தானே, அந்த டி.வியில் வந்த அவனை பற்றிதானே அப்போதே சொல்ல தவித்தேன். நீ காது கொடுத்து கேட்கவில்லையே??? அவனிடம் சொல்லிக்கொள்ளவில்லை அவள். ஏனோ  இப்போது எதையுமே சொல்ல தோன்றவில்லை.

'அது நான் நாளைக்கு ஆஃபிஸ்லே நேர்லே பார்க்கும் போது உங்களுக்கு எல்லாம் சொல்றேன். இப்போ போன்லே சொல்ல முடியாது..' என்றாள் கொஞ்சம் நிதானமாக.

'ஏன். ஏன்???

'அது அப்படிதான்... ப்ளீஸ்... இப்போ வெச்சிடவா...'

'சரி...' என்றான் சட்டென. 'வெச்சிடறேன்...' துண்டித்து விட்டான் அழைப்பை.

மறுநாள் காலை.....

அலுவலகத்தை அடைந்திருந்தாள் அபர்ணா. அருண் அங்கே இல்லை. உடனே கைப்பேசியில் அழைத்தாள் அவனை.

'போரூர் ஆபீஸ்லே இருக்கேன். ஈவனிங் பேசறேன்...' என்றான் அவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.