(Reading time: 21 - 41 minutes)

ன்னாச்சு…?..... என்னாச்சு….?..... அவ ஒழுங்கா சாப்டாளா?..... எதுவும் முடியலைனு சொன்னாளா?..... என பதறிக் கொண்டது பவியின் அப்பாவும் அம்மாவும் ஒருவரிடம் ஒருவர்தான்….

மத்தபடி அபயன் வீட்டில்தான் அத்தனை பேருக்கும் பவியின் நிலை தெரியுமே…. அவளது அப்பாவின் கூற்றிலேயே ஆடிப் போயிருந்தவரகள்……இவள் விழுந்த விதத்தில் இன்னுமாய் நெகிழ்ந்தும் தவித்தும் போய்விட்டனர்.

இதில் பவி சற்று நேரத்திற்கெல்லாம் சுதாரித்துக் கொண்டு எழுந்துவிட….. நிலவினியோ முதல்ல நீ ரெஃஸ்ட் எடு….என தன் மாடிப் போர்ஷனுக்கு  கூட்டிப் போய்விட்டாள்.

“ஒன்னுமில்ல….சின்னவளுக்கு காலேஜ்ல பரீட்சை…அதுக்கு என்னமோ சொல்லிதாரேன்னு இங்க ஹாஸ்பிட்டல்ல இருந்து வந்த பிறகும் ரொம்ப நேரம் உட்காந்துட்டு இருக்கா பவி…..அதான் முடியலை போல….” என எதை எதையோ பவி அம்மாவும் அப்பாவும் காரணபடுத்த…..

நின்று அவர்கள் பேசுவதை கேட்கவா….. என்றைக்கானாலும் அவர்கள் வந்து போக வேண்டிய இடம் இது…. அவர்களை இவனது வீட்டில் சுமுகமாய் உணர வைக்க வேண்டுமே….. அடுத்த வீட்டில் போய் வயதுப் பெண் மயங்கி வைத்தால்….அதுவும் திருமணப் பேச்சை எடுக்கவும்……பெற்றோருக்கு பதறும் தானே…..

அவர்களைப் பார்க்கவா….அல்லது  இவன் அண்ணியோடு குனிந்த தலை நிமிராமல் மாடி ஏறி போயிருக்கும் அவனது பவிப் பொண்ணைப் கவனிக்கவா…. சற்று நேரம் தரை தளத்திலேயே நின்றிருந்தான் அபை…

எல்லோரும் நடந்த எதுவும் இயல்பற்ற ஒன்று இல்லை என்பது போல் சுமுகமாகவே பேச முற்பட…. விஷயத்தை கிளர இருவீட்டுக்குமே விருப்பம் இல்லையே….. ஆக அதை தவிர்த்து அடுத்த விஷயங்களை சற்று முயன்று பேச….

இப்போது இவன் அருகில் வந்த யவி….சின்ன குரலில்…..”மேல போடா….இங்க நாங்க பார்த்துப்போம்” என்றுவிட்டுப் போனான்.

“எப்டியும் வீட்ல பேசி சரி செய்துடலாம்னு சொல்லிவை….”  பிறர் கவனம் தன் மீது சிதறா வண்ணம் இவன் மாடிப் படிகளை நோக்கி நகர அதி வந்து இவனோடு நடந்தபடி அமைதியாய் சொல்லிப் போனான்…….

அபை இப்போது மாடி ஏறினான்…… இவ்ளவு சப்போர்ட் இருக்க இவனுக்கே இன்னும் உள்ளுக்குள் ஏதோ குடைந்து கொண்டு இருக்கிறதுதான்……அப்படி இருக்க பவிக்கு அவள் புறம் யாருமே இல்லையே….. பவியின் நிலை இவனுக்கு இப்போது இன்னும் வேறுவிதமாய் புரிவது போல் இருக்கிறது….

இன்று இவனுக்காய் ஓடி வரும் இவனது குடும்பத்தைப் போன்ற ஒன்றை அவள் இழந்து கொண்டு இவனிடம் வரவேண்டி இருக்கும் என பயந்துவிட்டாளோ…?? அவ வீட்டை எதிர்த்து கல்யாணம் செய்ற நிலை வந்துடும்னு நினைக்கிறா போல….

இப்போது இவன் மனம் அவள் பால் இன்னுமாய் மென்மையாய்…..…..

இதற்குள் மாடி வந்திருந்த அவன்……என்ன இருந்தாலும் அது அவனது அண்ணன் அண்ணியின் போர்ஷனாயிட்டே…… கதவை மெல்ல தட்டிவிட்டே உள்ளே போனான்…..

எதிர்பட்ட முதல் அறையிலேயே அவனுக்கு காணக் கிடைத்தாள் அவனது பவிப் பொண்ணு…

கட்டில் மேல் முட்டுக் கூட்டி அமர்ந்து……அத்தனை தீவிர முகபாவத்துடன் ஏதோ நினைவில் அவள்…..கட்டிலருகில் நின்று எதோ சொல்லிக் கொண்டிருந்த நிலவினி….இவன் கதவு தட்டலில் திரும்பிப் பார்த்தவள்……

இவனை ஒரு கணம் பார்வையால் எதிர்கொண்டு, மீண்டுமாய் பவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு……இவனை நேராக கூட பார்க்காமல் கடந்து போய் அவர்களது சமயலறைக்குள் புகுந்து கொண்டாள்….

இப்போது இவனை நிமிர்ந்து பார்த்த பவியோ…… இவன் முகத்தில் தேக்கி வைத்திருந்த அத்தனை மென்மையையோ கரிசனை அக்கறையோ ஆறுதல் தேறுதல் எதையுமோ கண்டு கொண்டதாக துளியும் காட்டாமல்…..

சட்டென படுக்கையைவிட்டு இறங்கி நின்றவள்…..”சாரி….என்ன மறந்துடுங்க…” என இவன் முகம் பார்க்காமல் வெடுக்கென சொல்லிவிட்டு வெடு வெடு என இவனை கடக்க முற்பட்டாள்….

“நான் உன்னை பிடிச்சுதான் நிறுத்தனும்னா போ….” அவள் சொன்ன சொல்லில் இவனுக்குள் பூகம்பம் பொத்துக் கொண்டு வந்தாலும்……அவள் நிலையில் நின்று சூழலை பார்க்க முயன்றபடி அமைதியாகவே இதை சொன்னான் இவன்….

என்னதான் கோபத்தை அவன் காட்டிக் கொள்ள விரும்பாவிட்டாலும் அவன் இறுகிய குரல் அதை அவனது பவிக்கு உணர்த்தாமல் இல்லை….

சிலையென நின்றாள் இப்போது….ஆனால் இவனுக்கு முதுகு காட்டி முகம் காட்டாமல்…..

“பேச ரொம்பல்லாம் டைம் கிடைக்காது…… உனக்கு என்ன பயம்னு சொல்லிட்டுப் போ…..அதோடு இந்த விஷயத்துல நீ தனியா இல்ல….நாங்க அத்தனை பெரும் உனக்கு இருக்கோம்னு புரிஞ்சுட்டு போ…..இன்னொரு விஷயம்….இவங்க அத்தனை பேரும் எனக்கு எவ்ளவு முக்கியமோ அவ்ளவு முக்கியம் உன் வீட்ல உள்ளவங்களும்…..அதை நம்பிட்டும் போ…..”

அவன் பேச பேச இவளுக்குள் கொந்தளித்துக் கொண்டு வந்த உருக்க இளக்க தயக்க பயத்தை…தன் இடக்கை நடுவிரலால் புருவ மத்தியை தேய்த்து சமன படுத்த முயன்ற பவியோ….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.