(Reading time: 21 - 41 minutes)

ப்போது இவள் பே எனப் பார்த்தாள்…..நேத்து அத்தனை சாஃப்ட்டா பேசி அனுப்பிட்டு……இன்னைக்கு என்ன இதுவாம்?

“என்ன சொன்ன….? நான் உன்ன மறந்துடனுமா?”

“அது….” இவள் முகம் சுருங்கிக் கொண்டு போக…..

“அப்ப நீ உன் அப்பா கூட இருக்கனும்ன்றதுக்காக உன் மாமாவ மேரேஜ் செய்துப்ப என்ன….?” இது இப்போது இவளுக்கு சுளீர் என்கிறது….. இதைத்தான இருந்த டென்ஷன்ல இவ அவன்ட்ட நேத்து கம்யூனிகேட் செய்துறுக்கா…..அப்போது இருந்த மனநிலையில்  இதெல்லாம் ஒரு விஷயமாக படவில்லை…..இன்று காதில் விழும் போதே எப்படி இருக்கிறதாம்…?

“சாரி அபை…..அப்பா ஒரு முடிவெடுத்தா அதை ஈசியா மாத்த மாட்டாங்க…….அதான் பயந்துட்டேன்….” தயங்கி தயங்கி இவள் விளக்கம் சொல்ல….

”ஆனா இந்த விஷயம் சொந்தகாரங்க பேச கூடாதுன்னு எடுத்த முடிவுன்றதால….அதே சொந்தகாரங்கள வச்சு நீங்க பேசவும் கொஞ்சம்  அசஞ்சு கொடுத்றுகாங்க…..அதோட இப்டி சொந்த காரங்க மூலம்லாம் பேசலாம்னு எனக்கு தெரியலை…அதுவும்  மேரேஜ்னு முடிவு செய்த பிறகு…..” இவள் இன்னுமாய் விளக்க அவன் முகத்தில் தான் எந்த இளக்கத்தையும் காணோம்…

“ப்ளீஸ் அபை…. சாரிப்பா” இதற்கு மேல் என்ன சொல்ல என இவளுக்கு தெரியவில்லை…. அதுவும் ஹாஸ்பிட்டல்ல வச்சு…..

“இதோட எனக்கு தெரிஞ்சு இப்டி எத்தனையாவது  டைம் பண்ற பவி…..உனக்கு பிடிக்காத முடிவை……உன்னால முடியுமா முடியாதான்னு கூட யோசிக்காம….சம்பந்தபட்ட என்ட்டயும் கேட்காம…..இதுக்கு வேற என்ன சொலூஷன்னும் பார்க்காம……அவசரமா இது இப்டிதான்…இனி ஒன்னும் செய்றதுக்கில்லனு முடிவு செய்துடுறது….

அன்னைக்கு முதல் தடவை அண்ணி கூட ஃபார்ம்க்கு வந்த பாரு…..அப்பவும் நீயா யோசிச்சு நீயா முடிவு செய்துட்டு என்ட்ட எதுவும் கேட்காம…எதுவும் பேசவும் விடாம…. கிளம்பி போய்ட்ட……அடுத்து உன்னைப் பார்த்து நான் விஷயத்தை கம்யூனிகேட் செய்ய எவ்ளவு நாள் ஆச்சுது நியாபகம் இருக்கா…?....

அடுத்தும் யவி மேரேஜ் அன்னைக்கு அண்ணி நம்ம வீட்ல வச்சு ஏதோ சொல்லிட்டாங்கன்னு……எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு போய்ட்ட…….நான் என்ன சொல்ல வாறேன்னே நீ கேட்கிறதா இல்ல…. சரி அதெல்லாம் அப்ப இனிஷியல் ஸ்டேஜ்…….அப்ப என்னைப் பத்தி எதுவும் தெரியாது…. இப்ப என்ன…? வீட்ல இவ்ளவு தூரம் சொல்லி எல்லாம் செய்துட்டுதானே இருக்கேன்…. நீ பாட்டுக்கு உன் மாமவ போய் கல்யாணம் செய்யப் போறேன்னு சொல்ற….?.”

“………….”

“இதெல்லாம் ஒரு நேரம் மாதிரி ஒரு நேரம் இருக்காது பவி……நீ எனக்கு பேச டைம் கொடுத்து நான் உன்ட்ட சொல்லி முடிக்றதுக்குள்ள விஷயம் கை மீறி போய்டவும் செய்யலாம்….”

அவன் கோபத்தின் காரணமும் புரிகிறது….அதை அவன் வெளிக்காட்டும் விதமும் பிடிக்கிறது…….நேற்று முகத்தை தூக்கி இருந்தானானால் இன்றைக்குள் இவள் என்ன ஆகி இருப்பாளோ…? இவளை ரிலாக்ஸ்‌ செய்துவிட்டு அடுத்து வந்து கடிந்து கொள்கிறான்……

இவன் சொல்வது போல் இனி ஒரு முறை  நடந்து  கொள்ள கூடாது என முடிவெடுத்துக் கொண்ட பவி அடுத்து அவனை சமாதான படுத்தும் வழியில் இறங்கினாள்.…..ஆனால் அவளுக்கு அப்போது தெரியாது இப்படி சட் சட்டென குழம்பிய நிலையிலேயே முடிவெடுக்கும் அவள் குணம் அவளை எங்கு கொண்டு போய் விடப் போகிறதென…..

இப்போது அவன் எழுந்து கிளம்ப….. “ஒரு நிமிஷம் அபிபா….ப்ளீஸ் ப்ளீஸ்…..” கோபத்துல இருக்கானே அப்டியே போய்ட்டான்னா…? கெஞ்சியபடி எழுந்தவள்…

“இத உங்களுக்குன்னு செய்து எடுத்துட்டு வந்தேன்…”

அவசர அவசரமாக தன் பேக்கை குடைந்து அந்த  பாக்ஸை எடுத்தாள்…… “நிலுட்ட  குடுத்து விடனும்னு நினச்சேன்”

தன் டேபிளை சுற்றிக் கொண்டு ஓடாத குறையாக அவனிடம் போய் நின்றாள்…… அவன் முகத்திலிருந்த கோபம் கொஞ்சமே கொஞ்சமாய் குறந்து ஒரு இளக்கத்திற்கு வந்திருந்தான் அவன்….

இப்டி அவனுக்காக அவ ஓடி ஓடி வர்றப்ப அவனும்தான் எவ்ளவு நேரம் கோபபடவாம்?

அவள் கையில் வைத்திருந்ததை வாங்கும் முகமாக அவன் கை நீட்ட……இவளோ அவசரமாக அந்த பாக்‌ஃஸை திறந்தவள்……கையோடு கொண்டு வந்திருந்த ஃஸ்பூனிட்டு எடுத்து அவன் முகம் முன்பாக நீட்டினாள்….

“ஸ்வீட்….அவல் பாயாசம்….” இவள் குரலில் கெஞ்செலெல்லாம் இல்லை….

சின்ன சிரிப்போடு இப்போது அதை வாயில் வாங்கிக் கொண்டவன்….அடுத்து அந்த சிரிப்பு மாறாமல்….

”ஸ்வீட்னா எங்க வீட்லலாம் சுகர் போடுவாங்க….நீ என்ன செய்து வச்சுறுக்க….?” என்றபடி நகர…. இப்போது இவளுக்கு திக் என்கிறது…..

‘ஐயோ சுகர்னு நினச்சு  பக்கத்துல இருந்த எதையும் போட்டுடனா?’ வேகமாக இப்போது இவள் ஒரு ஃஸ்பூன் பாயாசத்தை எடுத்து அவசர அவசரமாக வாயில் வைத்துக் கொள்ள…… எல்லாம் நல்லாவே இருக்குது… “ஸ்வீட்டாதான இருக்கு அபிபா…?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.