(Reading time: 21 - 41 minutes)

ப்போது அவளையும் மீறி மெல்ல இவன் புறம் திரும்ப, அவள் முகத்தில் அத்தனை அடக்கப்பட்ட அழுகை….

“அப்பாவ விட்டுட்டு என்னால வர முடியாது அபை….”

இப்பொழுது அவன் கண்ணில் பரவுகிறது கனிவு….. அவன் வார்த்தையிலும் அது வெளிப் படுகிறது “விட்டுட்டு யாரு வர சொன்னா?” ….

அவன் இவள் அப்பாவை என்னதாய் புரிந்து வைத்திருக்கிறானாம்…..?

“அப்பா முடிவை யாராலும் மாத்த முடியாது அபை …புரிஞ்சுகோங்க….”

அவன் கண்ணில் இன்னுமாய் கூடுகிறது கனிவு…… அது இவள் கூற்றை அவன் நம்பவில்லை போலும் என இவளை உணர வைக்க….விளக்க தொடங்கினாள்…..

“அப்பா இந்த மாதிரி எண்ணத்த மனசுல வச்சுதான் என்ன இங்க வேலைக்கு அனுப்பி இருக்காங்க போல…..மாமா ஊர் இங்க இருந்து பக்கம்…..பின்னாலயும் நான் வேலைக்கு வரனும்னு….” அதற்கு மேல் அவளுக்கு அந்த வகை சிந்தனையை தொடர முடியவில்லை……

“மாமாட்ட இஷ்டம் இல்லைனு சொன்னா அது உன் ப்ரச்சனைனுதான் பதில் வரும்….. அவருக்கு கல்யாணமே அமைய மாட்டேங்குதுன்னு ரொம்ப வருத்தம்…..முன்ன ஒரு பொண்ணு வீட்ல சரின்னு சொல்ல…..அந்த பொண்ணு மாமாட்ட இஷ்டம் இல்லைனு சொல்ல…..எனக்கு கல்யாணம் நடக்கனும் அது தான் முக்கியம்னு சொல்லிட்டார்….அந்த பொண்ணு சூசைட்….” இப்பொழுது இன்னும் தவிப்பாய் இவனைப் பார்த்தவள்….

“அதுவும் சேர்ந்து அவருக்கு அடுத்து மேரேஜே அமைய மாட்டேங்குது…..இப்ப அவர் ஃபார்டீஸ்ல இருக்கார்……அப்பாதான் அம்மா வீட்டுக்கு மூத்தவங்க….தாத்தா பாட்டி இப்ப இல்லைல.....அப்பாதான் எல்லாம் பார்த்து செய்றவங்க……நான் ஸ்கூல் படிக்கப்பவே…..என்ன உங்க மச்சான கவனிக்காம விட்டுடீங்கன்னு அப்பப்ப யாராவது அப்பாட்ட கேட்கிறது உண்டு…..அப்பலாம் அப்பா ரொம்பவும் வருத்தபடுவாங்க….. சரியா சொல்லனும்னா அவமானமா ஃபீல் பண்ணுவாங்க…..எதோ இவங்க செய்ய வேண்டியத செய்யாமவிட்டுட்ட மாதிரி……நான் ரஷ்யா போன பிறகு இது என்னாச்சுன்னு தெரியாது……இப்ப எப்ப இப்டின்னு முடிவு செய்தாங்களோ…… “ ஏன் என்று தெரியவில்லை அவன் முகம் பார்த்துப் பேச பேச அவளை அறியாமல் அவளுக்குள் ஒருவித பய குறைவு…..

“பயமா இருக்கு அபை…..அப்பா கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க…….” என வாய்விட்டு சொல்லுமளவுக்கு ஒரு தெளிவுக்கு வந்திருந்தாள் அவள்….

சட்டென ஏதோ தோன்றியவளாக, முகம் ஒளிர “மாமாக்கு வேற இடம் அமஞ்சுட்டுன்னா எல்லாம் சரி ஆகிடும்…”

அவள் சொன்ன விதத்தில் அபை சிரித்தேவிட்டான்…… யார் கல்யாணம் யாரது வாழ்வை தீர்மானிக்கவாம்….

இப்போது அவளுக்கு சற்று அருகில் சென்றவன், சற்றாய் அவள் முகமளவு குனிந்து “நாம இப்ப நம்ம மேரஜ பத்தி பேசிட்டு இருக்கோம்……” என்றான் அவள் கண்களை ஊடுருவியபடி….

அவன் சிரிக்கவுமே ஓரளவு இன்னுமாய் இறுக்கம் குறைந்திருந்தவள் அவன் அருகாமையில் …அவனது நேர்கோட்டு பார்வையில்…..அதிலிருந்த உண்மையில்……நம்பிக்கையில் …உறுதியில்…… இன்னுமாய் தைரியம் பெற….

இவன் அடுத்து என்ன செய்ய நினைக்கிறான் என்ற சிந்தனைக்கு வந்திருந்தாள்….

“நாங்க உங்க வீட்ல வந்து பேசுறோம்…..ஐ மீன் பொண்ணு கேட்டு வர்றோம்…..”

இப்போழுது இவள் கண்ணில் மிரட்சி…..’கல்யாணத்துக்கு இன்வைட் செய்ற அப்பாட்ட வந்து பொண்ணு கேட்க போறானா….?’

இவள் கண்ணை கண்ணோடு பார்த்திருந்தவன் அல்லவா…? இவள் நினைவு புரியாதாமா?

“கொஞ்சம் டெலிகேட் சிச்சுவேஷன்தான்……ஆனா பேசலாம்….” என்றான்  ஒருவித மென் அழுத்தமாய்……..

அத்தனை நம்பிக்கையாய் சொன்னவன்…..”பேசலாம்தான…?” என்றான் இப்போது…

அவளையும் மீறி ஆம் என ஆடி ஆமோதித்தது அவள் தலை…

“புரிய வைக்கலாம்…..” அதே மென் அழுத்தம்.

“………..” மௌனமாய் அவன் கண்ணுக்குள் விழுந்தபடி இவள்.

“புரிஞ்சுப்பாங்க….”

“ம்….” இதை சொன்னது இவளேதானா?

“அதனால பயப்படாம போ…..ஒன் ஆர் டூ டேஸ்ல வருவோம்…”

சற்று எச்சில் விழுங்கினாலும் பவிக்கு ஏனோ இப்போது அவ்வளவாய் பயமில்லை…..எல்லாம் சரியாகிவிடுமோ…..?

அவனிடம் மௌனமாய் தலை அசைத்தாள் விடை பெறும் விதமாக….

கண்ணில் சிரிப்புடனே விடை கொடுத்தான் இவனும்…..

பெண் கேட்டு வருவோம் என அவன் சொன்னதும் பவிஷ்யா நினைத்தது அவன் மொத்த குடும்பமும் வந்து நிற்க போகிறது என….. தன் வீட்டுக்கு வரும் வரை இருந்த தைரியம் இப்போது வந்த பின் அந்த காட்சியை கற்பனை செய்ய செய்ய……அது சண்டை காட்சியாகவே விரிகிறது அவளுக்கு…..அப்பாவுக்கு கோபம் வந்தால் வார்த்தை எப்படி தடிக்கும் என இவளுக்கு தெரியும்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.