(Reading time: 21 - 41 minutes)

தற்குள் அவள் கையிலிருந்த அந்த ஸ்பூனை பிடித்து மீண்டுமாய் ஒரு ஸ்பூன் பாயாசம் எடுத்து தன் வாயில் வைத்துக் கொண்டவன்…. “இப்போ ஸ்வீட்டா இருக்கு….”  என்றபடி கண் சிமிட்டி…. “உனக்கு ஏன்  ஸ்வீட்டா இருக்குதுன்னு புரியுது….” என்றான்.

அவன் சாப்பிட்ட ஸ்பூன்ல இவள் சாப்பிட்டிருப்பதை  அவன் சொல்கிறான் என்பதும், அவனது மொத்த செயலும் இப்போது இவளுக்கு புரிகிறது…..

“மேரேஜாகட்டும் இதோட மீதிய அப்றமா சொல்லித் தாரேன்….” என்றபடி இப்போது இவள் கையிலிருந்த பாக்‌ஸை ஸ்பூனோடு அவன் எடுத்துக் கொள்ள….

அவன் என்ன செய்ய போவதாய் சொல்கிறான் என்பது இவளுக்கு சுத்தமாகவே புரிபடவில்லை எனினும்…… எதோ ஒன்று இன்பமாய் இவளுள் ஜிவ்வ்வ்வ்வ்வ் என எழும்பி இறங்க….முகம் அதாக சிவந்து மலர….

“இப்டியே இரு….” என்றபடி விடை பெற்றான்.

அடுத்து வந்த நாட்கள் அழகாகவே கழிந்தன பவிஷ்யாவிற்கு…… அபையின் அந்த பெரியப்பா மட்டுமல்ல…..இன்னும் மூன்று வெவ்வேறு உறவினர்கள்…… சில நாட்கள் இடைவெளியில் இவளது அப்பாவிடம்” ஏன் உன் மச்சானுக்க்கு பொண்ண கொடுக்கனும்னு நினைக்க….வெளிய நல்ல இடமா பாரேன்…” என்ற ரீதியில் பேசினர்…. “அவள இவ்ளவு படிக்க வச்சிறுக்க அதுக்கு ஏத்த மாதிரி பாரேன்…” என்ற அவர்களது வார்த்தை அவரை யோசிக்க வைத்திருக்க…

அன்று மாலை இவள் வீட்டை அடைந்த போது, இவளது வீட்டு வாசலில் அவளுக்கு மிகவும் அறிமுகமான கார்…..உள்ளே வரவேற்பறையை கடக்கும் போது……இவளுக்கு தலை நிமிர தெம்பு இல்லை…..

யார் வந்திருக்க கூடும்….எதற்காக என இவளுக்கு யூகம் இருக்கிறது……

“ஏல வந்திருக்கவங்கள வாங்கன்னு சொல்லிட்டுப் போ…..” அப்பாவின் குரலில் அதாக கால்கள் நிற்க நிமிர்ந்து பார்த்து கை கூப்பினாள்….

“வாங்க…” கண்ணில் பட்டனர் அதிபனும் யவ்வனும்….

இப்பொழுது மூச்சு சற்று சீராக வருகிறது இவளுக்கு…. ‘நல்லவேளை அவன் வரலை….’ பின் மனம் சிணுங்குகிறது…’ஏன்டா வரலை…?’ பின் அதே மனம் காய்கிறது…’அறிவு பொண்ணு கேட்டு அவனா வர முடியும்….?’

அவளை மீறி சிவந்த முகத்தையும் அதோடு வந்து பீறிட்ட உற்சாகத்தையும் மறைத்தபடி இவள் தன் அறைக்கு சென்று ஃப்ரெஷ் அப்செய்துவிட்டு…..மீண்டும் கீழே என்ன நடக்கிறது என கேட்க இறங்கி வந்தவள் காதில் விழுகிறது…

“தப்பா எடுத்துகாதீங்க மாமா….. மணி பெரியப்பா வந்து சொல்லிட்டு இருந்தாங்க…… தம்பிக்கு உங்க பொண்ண பார்க்கலாம்னு அவங்க உங்கட்ட பேசுனப்ப,  எங்க வீட்ல என்ன எதிர் பார்ப்பு இருக்கோன்னு சொன்னீங்களாம்…… உண்மையில அம்மா அப்பாவுக்கு பவிய தம்பிக்கு பார்க்கனும்னு ரொம்பவே எண்ணம்……

குணமாகட்டும் படிப்பாகட்டும் குடும்பமாகட்டும் எல்லாம் மனசுக்கு பிடிச்ச மாதிரி இருக்கு என் தம்பி பொண்ணு பவிட்ட …… அதோட நம்ம வினியோட ஃப்ரெண்டும் கூட …. குடுபத்துக்குள்ள வந்தா  ஒற்றுமையா இருப்பாங்கன்னு அம்மா சொல்லிட்டு இருந்தாங்க……. ஆனா அந்த டைம்ல நீங்க கல்யாணம் நிச்சயம் ஆகிட்டுன்னு சொன்னதும் அடுத்து ஒன்னும் அவங்களால பேச முடியலை….இப்ப மணி பெரியப்பா இப்டி சொல்லவும்…… அது…..உங்க மனசுல என்ன இருக்குன்னு உறுதியா தெரியாம சட்டுன்னு பொண்னு கேட்டு வந்து நிக்க முடியாது இல்லையா…..அதான் வெளி ஆட்களை அனுப்பி பேசுறதுக்கு நாங்களே வந்து தகவல் கேட்டுட்டு போகலாம்னு பார்த்தோம்….. உங்களுக்கு சம்மதம்னா அம்மா அப்பா பொண்னு கேட்டு வருவாங்க………” யவ்வன்  பிசிறில்லாமல் விளக்கிக் கொண்டிருக்க……

இவள் இதயத்தில் கை வைத்தபடி மூச்சை நிறுத்தாத குறையாக அப்பா பதிலை எதிர் பார்த்திருந்தாள்…..

சற்று நேரம் அங்கு அமைதி நிலவுகிறது…..

“பவி விருப்பத்தையும் கேட்டுட்டு நல்லதா ஒரு முடிவு சொல்லுங்க மாமா…..” அதி சொல்லிக் கொண்டிருக்க…… இப்போது பவிஷ்யாவின் அம்மா வந்திருப்பவர்களுக்கு  ஏதோ ஸ்நாக்‌ஸ் கொண்டு வந்து வைக்க….. பவி அப்பா தன் மனைவியை நிமிர்ந்து பார்க்க….

மனைவியின் பார்வையில் என்ன கண்டாரோ….. சிறு முறுவலுடன் “பொண்ணுட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு சொல்லிடுதேன்….” என முடித்தார்.

வானத்தில் பறந்தாள் பவிஷ்யா…..

தொடரும்!

Episode # 26

Episode # 28

{kunena_discuss:929}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.