(Reading time: 21 - 41 minutes)

தில் இவள் தூக்கம் வராமல் உழன்று மறுநாள் காலை வெகு தாமதமாக மாடியிலிருந்து கீழிறங்கி வர………..

அங்கு யாரோ “என்ன ராஜப்பா…..மில் வீட்டு கூட நல்ல பழக்கம் போல……வந்து போனனு ஊர்ல பேசிகிட்டாங்க….”  என கேட்டுக் கொண்டிருந்தார் இவள் அப்பாவிடம்…..ராஜப்பா என்பது குடும்பத்திற்குள் மட்டுமாய் அப்பாவை அழைக்கும் முறை என பவிஷ்யாற்கு தெரியும்…..

அப்பா சொந்தக்காரங்க யாரோ போல…..என இவளுக்குள் ஓடினாலும்…..பேசுவது அபை வீடு பத்தியல்லாவா காதை தீட்டிக் கொண்டு படி இறங்காமலே நின்றுவிட்டாள்….

“பொற்பரன் எனக்கு தம்பி முறைதான்னு தெரியும்ல……”. அந்த பேசுகின்ற பெரியவர் குரல் தொடர…… ஓ அபைக்கு பெரியப்பா முறை ஆகுது போல….ரெண்டு வீட்டுக்கும் சொந்தக்காரங்க என…..இவள் மனம் கணக்கு போட…..

அதற்குள் அவரோ….

“உன் பொண்ணு மூத்தவ படிப்ப முடிச்சாப்லபோல….. மில் வீட்டு ஆஸ்பத்ரிக்குதான் வேலைக்கு போகுதுன்னு கேள்விப் பட்டேன்…. பொற்பரன் மூனாவது பையனுக்கு கல்யாணத்துக்கு…... உன் பொண்ணையே செய்யலாம் போலயே…..” என்றார் வெகுசாதாரணமாக….

அம்மாடியோவ்….அடிவயிற்றை அப்பி பிடித்துக் கொண்டாள் பவி ….அங்குதானே அள்ளி எறிகிறது அமுத வெடிப்பு….

அபை பெண் கேட்டு வருவோம் என சொன்னதற்கு  இப்படியாய் ஒரு செயலை நிச்சயமாய் பவிஷ்யா எதிர்பார்த்திருக்கவில்லை…… இரண்டு வீட்டுக்கும் பொதுவானவர்  இப்படி பேசும் போது அப்பா கண்டிப்பாக இங்கு எகிறி குதிக்க மாட்டார்…..

 ஆனால் அப்பாவை எப்படி ஒத்துக் கொள்ள வைக்கப் போகிறார்களாம்????

அங்கு அப்பா இதற்குள் பதில் சொல்ல தொடங்கிவிட்டார்…..”என்ன பெரியமச்சான் இப்டி சொல்லிட்டீங்க……என் மச்சானுக்கு இன்னும் கல்யாணம் அமையாம இருக்குல்ல…..வீட்ல பொண்ண வச்சுகிட்டு வெளிய வந்து பொண்னு கேட்கன்னு ஊர்காரன் பேசுறாம்ல….”

“ஆமா அதுவும் தெரியும்…..ஆனா இப்ப உன் பொண்ணை அவனுக்கு கட்டி கொடுத்தன்னே வையேன்…..அப்பவும் ஊரு பொண்ண இத்தனை வயசானவனுக்கு செய்து கொடுத்துட்டான் ராஜப்பான்னு பேசும்……வரவு செலவு பாக்க முடியலை போல…..அதான் இப்டி தள்ளிவிட்டுடான்னும் பேசும்….நீ என்னத்த செய்தாலும் பேசனும்னு முடிவு செய்துட்டவன் பேசிட்டுதான் இருப்பான்…..அதனால அத பார்க்காத…..உனக்கு எது சரின்னு படுதோ அத மட்டும் பாரு….. வெளிநாட்டுக்குல்லாம் அனுப்பி பெரிய படிப்புல்லாம் படிக்க வச்சுறுக்க…..அப்ப அதுக்கேத்த இடத்தப் பாரு…..மில்காரங்க வீடுன்னா கௌரதையா இருக்கும்…. ரொம்ப நாளா காராணம் இல்லாம விலகி இருந்த சொந்தம்….இப்ப அது விட்டுபோகாமலும் இருக்கும்ல….. அதோட உன் மச்சானுக்கும் நம்ம பக்கம் நல்ல இடமா பார்ப்போம்வே….. “ அவர் பேசிக் கொண்டு போக……

பவிஷ்யாவுக்கு துள்ளிக் குதிக்கலாம் போலிருக்கிறது….. குடும்பத்திற்குள் கௌரவம் பார்த்து இவள்  திருமண முடிவுக்கு வந்திருக்கும் அப்பா குணத்துக்கு நிச்சயம் இது இவளுக்கு ஃபேவராக திரும்பும்……

அடுத்தும் இந்த பேச்சு சில பல நிமிடங்கள் தொடர…..”நீங்க சொல்றீங்க….மில்காரங்க வீட்ல என்ன எதிர்பார்ப்பு இருக்குமோ….” என கடைசியாய் சற்று இறங்கி வந்த அப்பா அதன் பின் பேச்சை திசை திருப்பிவிட்டார்…..

பேச்சை தவிர்க்க இப்படி சொன்னாரா உண்மையில் அப்பா அபை வீட்டில் ஒத்துக் கொண்டால் சம்மதித்துவிடுவாரா என பவிஷ்யாவால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை…..இருந்தாலும் நேற்று அனுபவித்த நரகம் போய் ஒருவித துள்ளல் வந்து ஒட்டிக் கொண்டது இவளிடம்….

தோடு அன்று அவள் வேலைக்கு வேறு கிளம்பிப் போனாள்…. சற்று தாமதமாகத்தான் போய் சேர்ந்தாள்… போகும் வழியெல்லாம் இந்த பெண் கேட்ட விஷயத்தை குறித்த சந்தோஶத்தை  அபையிடம் எப்படியும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நினைவு……

நிலுக்கு கால் பண்ணி வர சொன்னா போதும்….அவ பார்த்துப்பா…… ஓ பி முடியவும் நிலுக்கு கால் செய்துடனும்….. என்ற ஒரு எண்ணத்தோடே…

சற்று தாமதமாக சென்று சேர்ந்ததால் ஓரளவு க்யூ இருக்க….. அவர்களை ஒவ்வொருவராய்  செக் அப் செய்து கொண்டிருந்தாள்…. பெரும்பாலும் இவளிடம் வருபவர்கள் பெண்கள் தான் எனினும்   சில நேரங்களில் ஆண்களும் வருவதுண்டு…. ஆக வந்த ஒரு பெண்ணிடம் ப்ரிஃஸ்க்ரிப்ஷன் கொடுத்து அனுப்பிவிட்டு  இவள்  தன் மொபைலை எடுக்க குனிந்த நொடி எதிரில் வந்து உட்கார்ந்த அந்த ஆணை அவள் பெரிதாய் சட்டை செய்யவில்லை…..

இவள் கையில் கிடைத்த மொபைலில் அதே நேரம் ஒளிர்ந்தது நிலவினியின் எண்…. வெகு ஆசையாய் மொபைலை எடுத்தவள்…..கர்டசி நிமித்தம் எதிரிலிருப்பவனிடம் “ஒரு நிமிஷம்….” என நிமிர்ந்து பார்த்து சொல்லிவிட்டு மொபைலை காதுக்கு வைக்க அப்போதுதான் சட்டென உறைக்கிறது எதிரில் இருப்பது யரென……

தூக்கி வார நிமிர்ந்து பார்த்தாள்…… அவன் தான்…..அபயன் தான் இருந்தான்….. அதுவும் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியபடி…..முழுவதுமாய் இவளை பார்த்தபடி…..அந்த பார்வையில் அத்தனை கோபம் சுமந்தபடி…. ஏன்?????

அவள் பார்வை தன் மீது நிலை பெறவும் “நேத்து எதுக்கு மயங்கி விழுந்த?” 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.