(Reading time: 17 - 33 minutes)

நான் எதுக்கு புரிஞ்சுக்கனும் ? தெரியாமல் தான் கேட்குறேன், உங்க சினிமாவில் இருக்கிற யாருக்குமே மனைவி குடும்பம் இல்லையா? அவங்க எல்லாம் அவங்க வீட்டுக்கு போகவே மாட்டாங்களா? நீங்க ஒருத்தர் தான் சினிமாவை தூக்கி நிறுத்துறிங்களா?”

“..”

“ அம்மா இடத்தில் நான் இருந்தா, எப்பவோ உங்களை டிவோர்ஸ் பண்ணிருப்பேன்”

“சத்யா!!!! பார்த்து பேசு.. கோபத்துல உன் அறிவை இழக்காத!”

“இனிமே இழக்க ஒன்னுமே இல்ல..”

“ டேய் என்னடா இப்படி பேசுற? உங்களை தாண்டி தான்டா எனக்கு எல்லாமும்.. நான் IT ல வேலை செஞ்சு லேட்டா வீட்டுக்கு வந்தால் உனக்கு கோபம் வந்துருக்குமா? அல்லது போலீஸா இருந்திருந்தா, அப்பவும் இதே மாதிரி என்னால குடும்பத்தோடு நேரம் ஒதுக்க மூடியாமல் போயிருந்தா நான் உன் கண்ணுக்கு நல்ல அப்பன்னா தெரிஞ்சிருப்பேனா?”

“..”

“ ஏதோ சின்ன பையன், புரியாமல் பேசுறன்னு நினைச்சுதான் இவ்வளவு நாள் உன் வார்த்தைகளை நான் பெருசா நினைக்கல.. ஆனா, இது இப்படி வெறுப்பாக மாறும்ன்னு நினைக்கல சத்யா..”

“..”

“ எனக்கு என் மகனும், அவன் சந்தோஷம்தான் முக்கியம் ! நான் இனிமே நடிக்க மாட்டேன் !”

“அப்பா”

“உயிரே போனாலும், உன்னை நான் சினிமாவில் நடிக்க சொல்லி கேட்க மாட்டேன்.. போதுமா?”

காட்சி 4

சென்னை!! அந்த மண்ணில் காலை வைத்ததுமே வெற்றியின் மனதில் புது நம்பிக்கை பிறந்தது. இனி அவனின் எதிர்காலம் இங்குதான். அவனின் இயக்குனர் கனவு நிஜமாகப் போகிறது ! தனக்குத்தானே சொல்லி கொண்டவன் , செல்ஃபோனில் இருந்த அந்த விலாசத்திற்கு செல்ல முடிவெடுத்தான்..

“ கண்மணி” ..வீட்டின் முன் இருந்த அந்த பெயர்பலகையை பார்த்ததுமே அவன் இதழில் புன்னகை தவழ்ந்தது. அவன் காலிங் பெல்லில் கை வைக்கும் முன்னரே கதவை திறந்திருந்தாள் கண்மணி, வெற்றியின் உயிர்த்தோழி!.

“ ஹேய் கண்ணு”

“ ஆரம்பிச்சுட்டியா? இனிமே கண்ணு மண்ணுன்னு என் பேரையே பாழாக்கிடுவியே”

“ ஹா ஹா.. சரி எப்படி டக்குனு கதவை திறந்த நீ?”

“ என் நண்பன் தான் டைமிங்ல சூரப்புலி ஆச்சே.. அதான் அனுமானிச்சு வெச்சேன்.. சரி சரி உள்ள வா டா .. உலகமே பாராட்டுற டைரக்டரை கண்மணி வாசலிலேயே நிற்க வெச்சான்னு வரலாறு நாளைக்கு என்னைத்தானே தப்பாக பேசும்!”

“ஹா ஹா .. இந்த உலகத்துலேயே நான் டைரக்டர் ஆகிடுவேன்னு நம்புற மூனாவது ஜீவன் நீதான் கண்ணு”

“ஐஸ் வெச்சது போதும்.. முதல்ல, உன் மேல நம்பிக்கை வெச்சுருக்குற அந்த ரெண்டாவது ஜீவனுக்கு ஃபோன் போட்டு பேசு..”

“ விஷா தானே? அப்பறமா பேசுறேன்”

“பளார்ன்னு ரெண்டு விட்டேன்னா தெரியும் ! அது என்னடா லவ் பண்ணுற பொண்ணை அழ வைக்கிறது தான் பசங்களோட வேலையா?”

“ ஹா ஹா என்னமோ 10-15 பசங்களை லவ் பண்ணின மாதிரி சொல்லுற?”

“செருப்பு பிய்ய போகுது இப்போ”

“ஹீ ஹீ”

“ என்கிட்ட பேசும்போது சிரிச்சு சிரிச்சு பேசுறியே, இதுல பாதி சிரிப்பாச்சும் அவகிட்ட காட்டினால் என்னடா? பாவம்டா விஷு.. ஒரு விஷயம் புரிஞ்சுக்கோ வெற்றி, லைஃப்ல குறிக்கோள் ரொம்ப முக்கியம், ஆனா அது நம்மளோட அடிப்படை சந்தோஷத்தை அழிச்சிட கூடாது.. எல்லா பொண்ணுங்களும் விஹாஷினி மாதிரி பொறுமையா இருக்க மாட்டாங்க.. அதுவும் நம்ம ஜெனரேஷன் எல்லாத்துக்குமே அவசரம் ! உன்னை மாதிரி சிடுமூஞ்சிய ரெண்டு நாளைக்கு மேல லவ் பண்ண முடியாதுன்னு விட்டுட்டு போயிடுவாங்க”

“ப்ச்ச்ச்… என்ன கண்ணு, உனக்கு கூடவா என் மனசு புரியல! விஷா விஷயத்துல எனக்கு ரொம்ப குற்றஉணர்ச்சியா இருக்குடா”

“ எதுக்கு?”

“ அவ நல்ல பொண்ணுடா கண்ணு.. சந்தோஷமாய் வாழ வேண்டியவள்.. நாந்தான் அவளோட எதிர்காலத்தை கேள்விகுறியாக்குறேண்டா.. அவளுடைய பொறுமைய நான் மிஸ்யுஸ் பண்ணுறேன்.. பட் ஐ லவ் ஹெர் கண்ணு”

“ லூசு.. அதெப்படி சரியான விஷயத்தை தப்பா நினைக்கிற நீ? அவ ஏன் இவ்வளவு பொறுமையா இருக்கிறா? காதல்தானே ! அதே காதலை நீ திருப்பி கொடு வெற்றி.. அதைவிட்டுட்டு அவ காதலுக்கு நான் தகுதி இல்லன்னு அந்த காலத்து ப்ரதாப் போத்தன் டைலாக் எல்லாம் விடாதே..”

“ஹ்ம்ம் … சரி நான் அவகிட்ட பேசிட்டு வரேன்.. பசிக்கிது கண்ணு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.