(Reading time: 19 - 37 minutes)

துதான் தான் எதிர்பார்த்த சந்தர்ப்பம் என்று எண்ணியவனாக அப்போது மேடையேறினான் ரூபன். தீபனுக்கு வலப்புறம் அனிக்கா நிற்க அவளுக்கு அடுத்து ரூபன் நின்றுக்கொண்டு அண்ணன் அண்ணியின் கவனத்தைத் திருப்பி அவர்களோடு நின்று அசோக்கிற்கு சமிக்ஜைக் காட்ட அந்த அழகான படம் பதிவானது.யாராகிலும் பார்த்தால் தவறான அர்த்தம்தரும் படம் தான்அது . ரூபன் அனிக்கா, தீபன் ப்ரீதா என்னும் இரண்டு தம்பதியர் நிற்பது போன்ற தோற்றம் கொண்ட புகைப்படமாக அமைந்து விட்டிருந்தது அது.

தன்னையே தொடர்ந்து கவனித்துக் கொண்டு, தன் செயல்களால் ஏற்கெனவே கோபமுற்று தன்னை முறைத்துக் கொண்டிருக்கும் அந்த இரு விழிக் குறித்து அறிந்திராததால் தான்எண்ணியதைப் போல புகைப்படம் எடுத்து விட்டோம் என்று எண்ணி மகிழ்வில் விண்ணில் பறந்துக் கொண்டிருந்தான் ரூபன்.

மறுபடியும் ஜாக்குலின் மேடைக்கு வந்து விட குழந்தைகளோடு விளையாட்டு விளையாட்டாக மாடியின் ஓரத்திற்குச் சென்று அங்கிருந்த அழகிய பூச்செடிகளையும் , மீன்தொட்டிகளையும் பார்த்துக் கொண்டிருந்த அனிக்காவிற்கு சற்று நேரம் கழித்து தான் தன்னை விட்டு விட்டு அந்தக் குட்டிகள் ஹாலிற்கு ஓடி விட்டன என்று புரிந்தது. அங்கிருந்தேபார்வையால் குழந்தைகளைத் தேடி, அவர்கள் பத்திரமாக அவரவர் பெற்றோர் கையில் இருப்பதை உறுதிச் செய்துக் கொண்டவளாக மெதுவாக திரும்ப வந்துக் கொண்டிருந்தாள்.

அந்த நேரம் ஏதோ பேச்சுக் குரல் கவனத்தை ஈர்க்க அதிலும் தன்னுடைய பெயர் அடிபடவும் அங்கே நின்று விட்டிருந்தவள் தாம் கேட்ட வார்த்தைகளால் அதிர்ச்சியுற்றாள்.இப்படியும் பேசுவார்களா? என்பது மனதைச் சுட மனம் காயப்பட்டவளாக திரும்பினாள். அவளுக்கு அங்கிருந்து உடனே கிளம்பி விட வேண்டும் என்று தோன்றி விட்டிருந்தது.

தாயிடம் வந்துச் சேர்ந்தாள். அருகில் குடும்பத்தினர் அனைவரும் இருந்தனர். அவளது சோர்ந்த முகத்தைப் பார்த்த ராஜ்,

"என்னாச்சு அனிக்குட்டிக்கு ? ஏன் இவ்வளவு டல்லா இருக்கா?' என தங்கையிடம் வினவ

"ஒன்னுமில்லை மாமா, கொஞ்சம் தலை வலிக்குது அதான்" எனச் சொன்னவள் வீட்டிற்கு புறப்பட தயாராக இருந்த அண்ணி மற்றும் அண்ணனைப் பார்த்து நானும் உன் கூடவரேண்ணா" என்றாள்.

" வீட்டுக்கு போயி தனியா என்னச் செய்வ? இன்னும் 2 ஹவர்ஸ்ல இங்கிருந்து மாப்பிள்ளை பொண்ணு எல்லோரும் புறப்பட வேண்டியது தான். நீயும் எங்க கூட இருந்து வாயேன் அனி"என்ற சாராவிடம்

"வேண்டாம்மா, எனக்கு இப்பவே வீட்டுக்குப் போகணும்… ரொம்ப டயர்டா இருக்கு" என்றவளாக கிறிஸ் பிரபாவுடன் அவளும் புறப்பட்டுச் சென்று விட்டாள்.

மதியம் தாண்டி மணி மூன்றாகி இருந்தது. இரவு உணவு மணமகன் வீட்டில் என்பதால் பற்பல வேலைகள் பார்க்கச் செல்லுமாறு ராஜ் ரூபனிடம் சொல்லி அனுப்பினார்.நானும் கூட போறேம்பா" என்றுச் சொல்லி ஜீவனும் அவனோடு புறப்பட்டான்.

இங்கே மூவரும் வீட்டிற்கு வந்துச் சேர்ந்திருந்தார்கள். தங்கையை ஓய்வெடுக்க அறைக்கு போகச் சொன்ன கிறிஸ், தாய்மையின் ஆரம்ப கட்டத்தில் இருந்த மனைவிக்குஅலைச்சலால் உடம்பிற்கு எதுவும் பிரச்சனை இல்லையே என்று வெகு கவனமாக விசாரித்தபடியே தங்கள் அறைக்குள் நுழைந்தான்.

அனிக்காவிற்கு காலையில் புறப்பட்டுச் சென்ற போது இருந்த மகிழ்ச்சியான மன நிலையை கலைத்துப் போட்டிருந்தன ஷைனியின் வார்த்தைகள். ஏதோ அசிங்கமான ஒன்றைத்தீண்டினார் போல உள்ளம் அருவருத்துப் போயிருந்தது. விரும்பாத நிகழ்வு என்றாலும் அவளுடைய அனுமதியின்றியே அவள் உள்ளம் அதே காட்சியை மறுபடி ரீப்ளே செய்துக்கொண்டிருந்தது மறுபடியும் மறுபடியும், மறுபடியும்.......................................

அங்கு மாடி ஓரத்தில் நின்றுக் கொண்டிருந்தது ஷைனி மற்றும் அவள் தோழி. தன் தமக்கையின் நிச்சயதார்த்தம் அன்றைப் போலவே யாருக்கோ திருமணம் நடக்கின்றதுஅதுப் பற்றி நமக்கென்ன? என்றது போன்ற ஒரு அலட்சிய பாவனையில் தான் அன்றும் அவள் இருந்தாள். வருவோர் போவோர் குறித்த தகவல்களை அலசி காய வைத்துக்கொண்டிருந்தனர் அவர்கள். கையில் ஒரு தராசு இல்லாதது தான் குறையாக இருந்தது.

"ஏய் அந்த ஆளைப் பார்த்தியா அவர் சொட்டை மண்டையில.........." என தோழியின் காதில் முணு முணுக்க அவர்கள் வெடித்துச் சிரித்தார்கள். அப்போது தான் ஷைனியிடம்கேள்வியைக் கேட்டாள் அவள் தோழி,

"ஏய் நீ ரொம்ப லக்கிடி ஷைனி"

" நான் லக்கினு எனக்கு தெரியும் , அதை நீ இப்போ ஏன் சொன்னேன்னு சொல்லு பார்ப்போம்"

" உன் அக்கா மாமியார் வீட்டுல ரெண்டு பேர் சூப்பரா இருக்காங்க இல்ல அதுதான்"

"ஷீ...யாரப்பா அது சூப்பரா ரெண்டு பேரு"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.