(Reading time: 19 - 37 minutes)

ரூபனும் ஜீவனும் வீட்டிற்கு வந்துச் சேர்ந்திருந்தனர். மணமக்கள் வருகைக்காக அலங்கரிக்கப் பட்ட வீடு அமைதியாக இருந்தது. ஓரிரண்டு பெரியவர்கள் வீட்டில் முன் அறையில் நின்று கதைப் பேசிக் கொண்டு இருந்தனர். மிச்ச வேலைகளும் அமைதியாக நடந்துக் கொண்டிருந்தது.

தன்னுடைய அறைக்குள் நுழைந்த ரூபனை பின்தொடர்ந்து வந்து அவனை மறித்த வண்ணம் அவன் முன் வந்து நின்றான் ஜீவன்.

என்னடா……..வா கொஞ்சம் ஃப்ரெஷ் ஆயிட்டு மீதி வேலை ஏதாவது இருக்கான்னு பார்க்கலாம் ……..என்றான் புன்னகையுடன்……

“அதெல்லாம் பார்க்கலாம் பார்க்கலாம்……….முதல்ல உன் கேமராவ எடு…… என்றான் இவன் முக இறுக்கத்தோடு………..

பொறுடா பேக் அப் எடுத்துட்டு தாரேன்………

அதெல்லாம் ஒண்ணும் தேவையில்ல….ஒண்ணு ரெண்டு போட்டோ டெலிட் செய்ய வேண்டியிருக்கு….உடனே தர்றியா இல்லையா……… குரல் வெகு கண்டிப்பாக மாறி விட்டிருந்தது இப்போது.

அனி வால் பிடித்துக் கொண்டே அலைவதால் ஜீவனுக்கு அவளை பாதுகாப்பதும் தன்னுடைய வேலைதான் என்றொரு மனோபாவம் வெகு நாளாய் வந்து விட்டிருந்தது. பெண்ணுக்கு நண்பனும் ஒரு காவலன் தானே? அந்த பொறுப்பை அவன் எப்போதுமே கை விட்டதில்லை. இன்றோ தன்னுடைய அண்ணனின் பார்வையை தொடர்ந்தவனுக்கு அப்பார்வை அனியிடம் நிலைத்திருந்தது அவ்வளவு உவப்பாக இல்லை.

அதிலும் அவன் எடுத்த அந்த போட்டோ அவனுடைய கோபத்தை இன்னுமாக அதிகரித்து விட்டிருந்தது.

“எந்த ஃபோட்டோ டா ஜீவா?” இன்னும் பொறுமை இழக்கவில்லை இவன்…

“நீ அனி கூட ஜோடியா நிக்கிற மாதிரி எடுத்தியே அந்த ஃபோட்டோ தான், நாளைக்கு பின்னே அதை எடிட் செஞ்சு எதையும் தப்பாச் செஞ்சு வச்சேன்னா என்னச் செய்யிறது” கனல் கக்கின அவன் கண்கள்.

“நான் அப்படி எதாவது செய்வேன்னு நீ நினைக்கிறியாடா?” இப்போது ரூபனின் குரல் மெலிந்திருந்தது.

“பின்னே வேற எதுக்கு உனக்கு அந்த போட்டோ”

“எனக்கு……”

……….

“எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும் ஜீவா……….அவ போட்டோ எதுவுமே எங்கிட்ட இல்ல அதான் எடுத்தேன்…….

லவ்வா………. இன்னும் ஜீவனின் வார்த்தைகளிலிருந்து கடுமை மறையவில்லை.

“லவ் தான்” உறுதியான குரல் இவனிடமிருந்து….

“இந்த லவ் கிவ்னு சும்மா இருக்கிறவளை குழப்புறது அவக் கிட்ட போய் எதையாவது சொல்றதுனு நினைச்சேன்னு வை நான் பார்த்துட்டு இருக்க மாட்டேன்”

நான் என்னச் ……ரூபன் எதையோச் சொல்ல வருமுன் இடை மறித்தான் இளையவன்.

இப்படி எதாவது பிரச்சினை வந்திடுமோன்னு பயந்து தான் அவளை எங்கயுமே விட மாட்டாங்க அது உனக்குத் தெரியுமா? இப்பவே அவ நம்ம வீட்டுக்கு மட்டும் தான் வந்துட்டு போயிட்டு இருக்கா. நீ செஞ்சுகிட்டு இருக்கிற காரியம் தெரிஞ்சா நம்ம வீட்டுக்கும் அவளை வர விட மாட்டாங்க…… மற்ற எல்லாத்தையும் விடு அத்தையை யோசிச்சுப் பார்த்தியா நீ? சும்மாவே மாமாக்கு உன் மேல கோபம் இருக்கு. அவர் முன்னே இருந்த மாதிரி இப்போ இல்லை. அவர் பணத்துக்காகத்தான் இதெல்லாம் செய்யிறோம்னு கூட அவர் நினைப்பார்

அவருக்கு இந்த விஷயம் தெரிஞ்சா டோட்டலா நம்ம ஃபேமிலி கூட கனெக்ஷன் கட் பண்ணி விட்டுடுவார். அத்தைக்கு நம்ம எல்லோர் மேலயும் எவ்வளவு பாசம், அவங்க தான் ரெண்டு பேருக்கும் நடுவில கஷ்டப் பட போறது. நீ ஏண்ணா இப்படி எல்லாம் செய்யிற?

ஏய் ஏண்டா, அவ மேல எனக்கு லவ் வந்தா நான் அதுக்கு என்னடாச் செய்யிறது? அது என்ன முன் கூட்டியே சொல்லிக் கிட்டா வருது. நான் என்னச் சொல்ல வரேன்னு கேட்கவே மாட்டியா? நான் உன் அண்ணன்டா, உனக்கு என் மேல நம்பிக்கையே வராதா?

நீ என் அண்ணா தான் ஆனா, நீயா அவளான்னு கேட்டா நான் எப்பவுமே அவளுக்கு சப்போர்ட்டா தான் இருப்பேன். ஏன்னா அவ என் ஃபிரண்ட்..

உன்னைய யாரு சப்போர்ட்டா இருக்க வேணாம்னு சொன்னது. கொஞ்ச நேரம் நான் என்ன சொல்ல வரேன்னு தான் கேளேன்… ப்ளீஸ்.

அவனின் ப்ளீஸ்ற்காக அமைதி காத்தான் ஜீவன்.

எனக்கு அவ மேல லவ் தான் ஆனால் அவகிட்ட போய் நான் இப்பவே எதையும் சொல்லப் போறது இல்லை. நீ யோசிக்கிற மாதிரி நானும் எல்லாம் யோசிக்க மாட்டேனாடா……..

எனக்கு அவளை மேரேஜ் செஞ்சுக்கணும், அதுக்கு தான் எல்லாம்…. அவன் சொல்லாமல் விட்ட வார்த்தைகளை பிடித்துக் கொண்டு தொடர்ந்தான் ஜீவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.