(Reading time: 19 - 37 minutes)

"ங்க அத்தான் தம்பிங்கதான், ஒண்ணு ஜெயம் ரவி மாதிரினா, இன்னொன்னு தனுஷ் மாதிரி என்ன நான் சொல்றது?"

"ச்சீ நீயும் உன் டேஸ்டும் போடி ரெண்டுமே சுத்த வேஸ்ட்..."

"ஏய் நான் சைட் அடிக்க கூடாதுன்னு தான அப்படிச் சொல்லுற"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல முதல்ல எனக்கும் அந்த ரூபனைப் பார்த்ததும் உன்னை மாதிரியே தான் தோணுச்சு, எதுக்கும் ஆளு வொர்த்தா இல்லையான்னு தெரிஞ்சிக்க தான்,அவங்க வீட்டுல அனி அனின்னு ஒரு அரை வேக்காடு இருக்கில்ல அதைக் கூப்பிட்டு விசாரிச்சேன்"

யாருப்பா அது? அந்த அனி..

பொறு நான் சொல்றேன். அதுக்கும் முன்னால அந்த 2 பேரைப் பத்தியும் கேட்டுக்கோ...... அதுக்கப்புறம் அது வேஸ்டா இல்லையான்னு சொல்லு…

அந்த ரூபன் அதான் உன் ஜெயம் ரவி ம்க்கும்… அவன் ஒரு பேக்டரில வேலைப் பார்க்கிறானாம் ,

ச்ச் ச்சீ… பேக்டரிலயா…. பார்த்தா ரொம்ப ரிச்சா தெரிஞ்சது நீ இப்படி சொல்லுறியே….

இதுக்கே இப்படிச் சொல்லிட்ட அவன் சம்பளத்தைக் கேட்டா நீ அவனை எட்டிப் பார்க்கவும் மாட்ட நீ…..

சம்பளம் வரைக் கேட்டுட்டியா நீ…ஹா ஹா… அந்தப் பொண்ணு உங்கிட்ட இதெல்லாம் சொல்லிச்சா…

அடப்போ அதுக்கிட்ட இதெல்லாம் அவ கிட்ட கேட்கல எங்க ரிலேடிவ் சொல்லி தெரிஞ்சுகிட்டது தான்….. ம்ஹீம் நமக்கு லாயக்கு இல்லைப்பா அவன்…..

அப்போ அந்த தனுஷ்….

போடி தனுஷாம் தனுஷ் அவன் நம்மை விட சின்னப் பையன் அவனையெல்லாம் வேற நீ பார்க்குறியா லூசுடி நீ….

போடி இல்லைனா நாம எப்படி டைம் பாஸ் செய்யுறது…அதான்..

அவன் பத்தியும் எங்கிட்ட நியூஸ் இருக்கு..

என்ன அது சொல்லு சொல்லு….

அவனுக்கு ஏற்கெனவே பொண்ணு ரெடியா இருக்காமாம்…

அது யாருடி….

நான் அனின்னு சொன்னேன் பாரு அது அவங்க அத்தைப் பொண்ணு , அந்த பொண்ணு வீட்டுல ரொம்ப வசதின்னு இவங்க வீட்டில வளைச்சுப் போட பார்க்கிறாங்க போல….

இண்டிரெஸ்டிங்க்…………..அப்புறம்……

போடி உனக்கென்ன நான் கதையா சொல்லிட்டு இருக்கேன்….

ஏய் சும்மா கதையை பாதியில நிறுத்திறாத…. உனக்கு எப்படித் தெரியும் அதைச் சொல்லு………..

அந்தப் பொண்ணு எப்ப பாரு இவங்க வீட்டிலயே தான் வந்து இருக்குமாம், அது கூட பரவாயில்ல எந்த நேரமும் அந்த பையன் கூடவே திரியும் போல……..

அடப்பாவி…என்ன தைரியம் பார்த்தியா…………

அது மட்டுமில்ல அவளுக்கு அவங்க வீட்டில இருந்து தான் சேலை எடுத்துக் கொடுத்துருக்காங்க , வருங்கால மருமகளாச்சே சும்மாவா…….

கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு தீச்சுட்ட உணர்வு……..அதற்கு மேலும் அவர்களின் அபத்தத்தை கேட்க விரும்பாதவளாக அங்கிருந்து நகர்ந்து வந்திருந்தாள்.

இன்னும் மனம் ஆறவில்லை அவளுக்கு ஜீவனுடனான நட்பு ஆண் பெண் என்னும் எல்லைக்கு அப்பாற்பட்டது. ஒரு போதும் அவர்களுக்கிடையே அனாவசியமான எண்ணங்கள் தோன்றியதே இல்லையே? அதை இப்படி சொல்கிறாள் என்றால் மற்றவர்களும் இவர்களைப் பற்றி இப்படித்தான் யோசிப்பார்களோ?

அப்படியென்றால் ஜீவனுடன் இனி தாம் பழகலாமா? கூடாதா? என்னும் குழப்பம் வர தலையைப் பிடித்துக் கொண்டாள் அவள். அதிலும் அவள் அன்று மகிழ்ச்சியாக அணிந்துக் கொண்டிருந்த சேலைக்கு கொடுத்திருந்த அர்த்தம் அருவருக்கச் செய்த்து அவளை. தீபனுக்கு அவளும் ஒரு சகோதரி என்ற முறையில் அல்லவா அத்தை அவளுக்கு அந்த சேலை எடுத்தது இது அவளுக்குத் தெரியுமே……..

“ஜாக்குலினுக்கு எடுக்கிற மாதிரியே அனிக்கும் பார்க்கணும்ங்க” என்று ராஜிடம் சொன்ன இந்திராவின் முகம் இன்னும் மனதிற்குள் வந்து நின்றது. எப்படி இவர்களால் இப்படியெல்லாம் பேச முடிகின்றது.

அவளால் அடுத்து என்னச் செய்வது என்று முடிவெடுக்க முடியவில்லை. பெரியவர்களிடம் செல்வது சரியல்ல என்று உணர்ந்ததால் ஜீவனை பார்த்துப் பேசலாமா? எனத் தோன்ற எழும்பி புறப்பட்டுச் சென்றாள்.

ஜீவனுடன் முன்பு போல பேச வேண்டுமா? வேண்டாமா என்பதை அவனிடமே கேட்க வேண்டி வந்து விட்டதே என தன் மனதிற்குள் நொந்தவளாக வீட்டிலிருந்து புறப்பட்டாள். நடைத் தூரம் என்றாலும் அவளிருந்த மனநிலையில் நடக்கத் தோன்றாததால் ஸ்கூட்டியில் போய் ஜீவன் வீட்டு வாசலில் நிறுத்தினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.