(Reading time: 19 - 37 minutes)

ல்லாம்னா ………….எது வேலைப் பார்த்துட்டு இருந்த நீ பிஸினஸ் செய்யணும்னு டிசைட் செஞ்சதா? தப்பா நினைச்சுக்காத ஏன்னா எனக்கு உங்கிட்ட பொய்யா ஆறுதலா பேசணும்னு எல்லாம் தோண மாட்டேங்குது. வீணா நீ எதையாவது கற்பனை செஞ்சு உன் லைஃபை அழிச்சுக்குவியோன்னு கூட பயமாயிருக்கு. அதனால தான் கேட்கிறேன்….

“என்னதான் இருந்தாலும் நீ மாமா அனிக்கு மாப்பிள்ளை தேடுற மாதிரியான லெவலுக்கு வந்திட முடியும்னு நினைக்கிறியான்னா?”…………..

தம்பியின் சொற்கள் மனதைக் கூறுப் போட்டாலும், புன்னகை மாறாமலே சொன்னான்.

“நான் முயற்சியாவது செஞ்சி பார்க்கறேனேடா”

“நம்மள்ல ரிலேடிவ்ஸ்குள்ள மேரேஜ் செஞ்சுக்க கூடாது அதாவது ஞாபகமிருக்கா உனக்கு?”

“ நம்ம சர்ச்லயே ரிலேஷன்ல மேரேஜ் செஞ்ச ஒன்றிரண்டு ஃபேமிலிஸ் இருக்காங்க அது உனக்கே தெரியும், சர்ச்ல கூட விசாரிச்சுப் பார்த்தேன். வேற ஆப்ஷன் இல்லாதப்போ சர்ச்ல ஃபைன் கட்டிட்டு இப்படி மேரேஜ் செய்வாங்களாம்”

“அதெல்லாம் நல்ல விபரமா தான் இருக்கான்.” கடுப்புடன் முணுமுணுத்தவன் ரூபன் கையிலிருந்த கேமராவை வாங்கி அதிலிருந்த அந்த புகைப் படத்தை டெலிட் செய்தான். ரூபனால் அதை வெறுமெனே பார்த்துக் கொண்டு இருக்கத்தான் முடிந்தது.

இதில இன்னொரு விஷயம் இருக்கு நீ யோசிச்சியா?

…………….சொல்லு……

ஒரு வேளை அனிக்கு வேற யாரையாவது பிடிச்சிருந்தா? இல்லைனா உனக்கு பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொல்லி அவளுக்கு வேற இடத்துல பார்த்துட்டா என்ன செய்வ நீ?

ஜீவனுக்கு இந்த கேள்விக்கான பதில் மிக முக்கியமாக தேவைப் பட்டிருந்தது. வரும் காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அவனுக்கு இருவருமே முக்கியமானவர்கள். யாருக்குமே கெடுதல் நிகழ்ந்து விடக் கூடாதென தவிக்கும் அவனுடைய உள்ளத்திற்கு ரூபனுடைய பதில் சஞ்சலமோ அமைதியோ தரப் போகிறது..

சற்று மௌனத்திற்கு பிறகு ரூபன் பேச ஆரம்பித்தான்.

“ நீ சொல்ற மாதிரி நடந்தா அங்க நான் சொல்றதுக்கு என்ன இருக்கு ஜீவா………..அவ ஒரு தேவதைடா………… அவளுக்கு ஏத்தா மாதிரி நல்ல மாப்பிள்ளையா அமையணும்……………..ம்க்கும்……… பேச மக்கர் செய்த குரலைச் சரி செய்துக் கொண்டான். அப்படி இல்லாம எதுவும் தப்பா தெரிஞ்சா மட்டும் தான் நான் அதில தலையிடுவேன். இல்லன்னா ……எனக்கு அங்கே என்ன வேலை"…..

வலுக்கட்டாயமாக ரூபன் முகத்தில் கொண்டு வந்த வறண்ட புன்னகையை ஆழமாக பார்த்தான் ஜீவன். ஒரு நொடியில் அவன் மனமும் அசைந்தே போய் விட்டிருந்தது.

அப்படின்னா அந்த சிச்சுவேஷன் வந்தா நீ வேற யாரையும் மேரேஜ் செஞ்சுப்ப தானே?

தொடர்ந்து எதிர்மறையாக பேசிக் கொண்டிருக்கும் தம்பியிடம் எரிச்சல் படாமல் பேசுவது மிகவும் சிரமமாக இருந்தது ரூபனுக்கு……….. ஒரு நிமிடத்தில் “போடா போய் வேலையைப் பாரு” என்று பொரிந்து விடலாமா என்று தோன்றினாலும் இனிமேல் இங்கே நின்று பேச்சை வளர்ப்பது நல்லதற்கு இல்லை என்று உணர்ந்தவனாக அங்கிருந்து நகர்ந்தான்.

“அதைப் பற்றி எதுக்காகடா இப்ப கேட்டு கிட்டு, அதான் அந்த போட்டோ டெலிட் பண்ணிட்ட இல்ல, அண்ணா மேரேஜ் வேலை செய்ய வேண்டியது நிறைய இருக்கு சீக்கிரம் வர்றியா “ என்றவனாக நகர,

அவனைப் பார்த்தபடி நிற்கும் ஜீவனிடம்

“ ஸ்டோரி ஆரம்பிக்கும் முன்னாடி கிளைமேக்ஸ் கேக்கிறவன் நீயாதான்டா இருப்ப…….. நல்லவனே……….. எனக்கு அவளை ரொம்ப பிடிக்கும், அவ அக்கறை, அன்பு, உரிமை எடுத்துக் கிட்டு செய்யுற ஒவ்வொரு விஷயமும் பிடிக்கும். நீ என்ன நினைச்ச அவ அப்பாக்கிட்ட இருக்கிற பணத்துக்காகன்னு நினைச்சியா? எனக்கு எதுக்கு அவரு பணம்? அவ மட்டும் போதும்டா………உனக்குத் தெரியாது நீ அம்மா நிழலில வளர்ந்தவன். ஹாஸ்டல்ல அன்பா பேச யாருமில்லாம, அனாதை மாதிரி நான் கடத்துன நாட்கள் எதுவும் உனக்குத் தெரியவே தெரியாது. தெரியவும் வேண்டாம். என்னைக் கேட்டா அந்த வெறுமையான நாட்கள் யாருக்குமே வேண்டாம்னு தான் சொல்லுவேன்.

காய்ச்சலோ தலைவலியோ கிட்ட இருந்து கவனிக்க யாரும் இருக்க மாட்டாங்க. மனசுக்கு கஷ்டம்னா அம்மா மடியில படுத்து அழ முடியாது. கிட்ட தட்ட ஒரு எந்திரம் போல படிப்பு படிப்புன்னு மூழ்கி கிடந்தேன் நான். என்னை மாதிரி பசங்க பலருக்கு அந்த தனிமை நிறைய தப்புச் செய்ய கத்துக் கொடுத்துருக்கு. ஏனோ எனக்கு அதில எல்லாம் மனசு போகவே இல்லடா. அம்மா அம்மானு மனசு தேடும், ஆனால் லீவுக்கு வீட்டுக்கு வர்றப்போ அம்மா மடியில சாஞ்சிக்க ஆசையா இருந்தாலும் ரொம்ப கூச்சமா இருக்கும். ஏக்கத்தோடயே லீவு முடிஞ்சி போயிருவேன் . பழையபடி அதே தனிமை, வெறுமை……..

அனியை பார்த்த பிறகு, அவக் கிட்ட பேசின பிறகு, நீங்க ரெண்டு பேரும் போடுற சண்டை எல்லாம் பார்க்கிறபொழுது தான் நான் ஹாஸ்டல் போய் எதையெல்லாம் இழந்து இருக்கேன்னு எனக்கே புரிஞ்சது.அவ செய்யிறது எல்லாம் பார்த்து நீ கூட அடிக்கடி சலிச்சுக்குவ தெரியுமா? ஆனா அவ இப்படி நம்ம கூடவும் உரிமையா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்னு எனக்கு மனசு ஏங்கும். பிறகு தான் புரிஞ்சது நான் அவளை நேசிக்கிறேன்னு. நீ இத்தனை நேரம் கேட்டியே இப்படி நடந்தா அப்படி நடந்தான்னு ஏண்டா இத்தனை நெகட்டிவான விஷயங்கள் நடக்க வாய்ப்பிருக்குன்னா, நான் ஆசைப் படுற மாதிரி ஒரே ஒரு பாசிட்டிவான விஷயம் நடக்காதா? நான் முயற்சியாவது செஞ்சு பார்க்கிறேனேடா……..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.