(Reading time: 24 - 48 minutes)

02. அதில் நாயகன் பேர் எழுது - அன்னா ஸ்வீட்டி

Athil nayagan per ezhuthu

யக்கம் தெளிந்து விழித்த ப்ரியாவை “வா ப்ரியா….வீட்டுக்கு கிளம்பலாம்” என்ற செபினின் உணர்ச்சி துடைத்த குரலே முதலில் தொட்டது…… அவன் முகத்தில் பெரிதாக எந்த உணர்ச்சியும் காட்டப்படாத போதும் அவன் அந்த சூழ்நிலையில் நிற்பதை சுத்தமாக விரும்பவில்லை என்பது மாத்திரம் அவளுக்கு புரிந்தது…..மெல்ல சுற்றிலும் பார்த்தாள்…..

மயங்கி விழவும் அந்த அலுவலகத்தில் கிடந்த ஒரு பெஞ்சில் இவள் கிடத்தப் பட்டிருப்பாள் போலும்…..அதில்தான் படுத்திருக்கிறாள் இப்போதும்…..வேக வேகமாக இவள் எழுந்து கொள்ள முனைய….மீண்டுமாய் சின்னதாய் தள்ளாடுகிறது இவளுக்கு…..எழுந்து உட்கார்ந்தவள் தலையை பிடித்துக் கொண்டாள்….

இவளுக்கு அந்த விவனுடன் வெட்டிங் ரிஜிஸ்டர் ஆகியிருக்கிறது என விளக்கமாக விளக்கிக் கொண்டிருந்தாரே அந்த ஆஃபீஸர் இப்போது முகத்தில் சற்று அக்கறையும் சின்ன குற்ற உணர்ச்சியோடும் “இப்பவும் ஒன்னும் இல்லமா….நீங்க இவ்ளவு பயந்துக்க  வேண்டாம்….. ஏற்கனவே பொண்ணுக்கோ  மாப்ளைக்கோ மேரேஜ் பதிஞ்சிருக்கா இல்லையான்னு பார்க்கிறதெல்லாம் எங்க வேலை கிடையாதுமா….ஒரே போட்டோ ஒரே அட்ரஸ்னதும் உங்களுக்கு அனவ்ன்ஸ்மென்ட் போட வேண்டியவர் குழம்பி போய் போடாம வச்சுறுப்பாரா இருக்கும்….

இதுதான் உண்மை கல்யாணம்ன்றப்ப இப்ப அன்வ்ன்ஸ்மென்ட்டுக்கு கொடுத்துட்டு போங்க…..இன்னும் 30 நாள் கழிச்சு ரிஜிஸ்டர் செய்துடலாம்…. “ இவள் ப்ரச்சனைக்கு தீர்வாக அதை சொன்னவர்…

“என் பொண்ணுக்கு இப்பதான்மா கல்யாணம் கூடி இருக்கு…..உன் கல்யாணத்த நான் கலச்சேனு இருக்க வேண்டாம்மா….உனக்கு சொந்தம் குடும்பம்னு யாரும் இல்லன்னு வேற உன் ஃப்ரெண்ட்ஸ் சொல்லிகிட்டாங்க….” அவர் ஏன் தீர்வு சொல்கிறார் என்ற காரணத்தையும் இப்படி வெளியிட்டார்….

இவள் இப்போது செபினின் முகத்தைப் பார்த்தாள்…. “கிளம்பலாம் ப்ரியா” இது மட்டும் தான் அவனிடம் இருந்தது……வாசலை நோக்கி நடக்க தொடங்கினான் அவன்.

அவனை பின் தொடர்ந்த ப்ரியாவினால் எதையும் தொடர்ச்சியாக நினைக்க கூட முடியவில்லை……இந்த செபின் என்ன செய்ய போகிறான்? டைம் இல்ல எல்லாத்தையும் சீக்கிரம் செய்யனும் என பறந்து கொண்டிருந்தானே அவன்…. அதற்கு மேல் அந்த திசையில் ஓடவில்லை அவள் மனம்….

இந்த விவன் ஏன் இப்படி செய்து வச்சான்…? காதலா…? காதலிக்கிறவன் செய்ற வேலையா இது…? இல்ல அவன் பொண்ணு கேட்டு வந்தான்ல…..இவ மாட்டேன்னு சொன்னதும் பழி வாங்கி இருக்கானா?…. அதை தாண்டியும் நினைக்க பிடிக்கவில்லை இவளுக்கு…..

இதற்குள் இவர்கள் கார் அருகில் வந்திருக்க….. இவளுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த சிற்பியைப் பார்த்த செபின்…. “ப்ரியாக்கு ஒரு ஆட்டோ அரேஞ்ச் செய்து அனுப்பிடுவீங்களா….எனக்கு இங்க ஆட்டோ எடுக்க தெரியாது “ என்றான் வெகுசாதாரணமாக….

அவ்வளவுதான் சட்டென செபினின் சட்டையை பிடித்துவிட்டான் சிற்பி….”என்னடா பேசுற நீ….ஒரு பொண்ணு கூட கல்யாணம்னு இந்த அளவுக்கு கொண்டு வந்துட்டு இப்ப விட்டுட்டு ஓடுறேன்னு சொல்லிட்டு இருக்க…?”

கூட்டம் கூடிவிடக் கூடாதென வரவழைத்துக் கொண்ட சிறு குரலில் பல்லை கடித்தபடி சீறிக் கொண்டிருந்தான் சிற்பி….”கேட்க ஆள் இல்லைனதும் என்ன வேணாலும் செய்வியோ..…?”

சிற்பி அப்படி ஒன்றும் ப்ரியாவிற்கு பழக்கம் கிடையாது…..அவள் இந்த அலுவலகத்திற்கு வேலைக்கு வந்து இன்னும் முதல் மாத சம்பளம் கூட வாங்கி இருக்கவில்லை….இங்கு வந்தபின் தான் ராகா அறிமுகம்……அந்த அறிமுகம் சட்டென நட்பாக மாறி துளிர்க்க….அவளை மணக்க இருப்பவன் என்ற அடிப்படையில் மட்டுமே சிற்பியை இவளுக்கு தெரியும்….

பார்த்தால் “ஹாய் ப்ரியா” என்பதோடு கடந்துவிடும் அளவிற்கு தான் அவன் சுபாவமும்…. இதில் இவளுக்காக இப்படி நடு ரோட்டில் நின்று சண்டைக்கு போவதென்றால்….?

“ரோட்ல எதாவது ஆக்சிடெண்ட்னா பார்த்துட்டு சும்மா வந்துடமாட்டாங்க அவங்க…. போய் ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டுதான் வருவாங்க….அதுமாதிரி ஆம்புலன்ஸ் எதாவது ட்ராஃபிக்ல மாட்றத பார்த்தா…உடனே இவங்க டூ வீலர்ல முன்ன போய் ட்ராஃபிக் கிளியர் செய்துட்டே கூட்டிப் போய்….ஆம்புலன்ஸ் ட்ரைவர்க்கு ட்ராஃபிக் இல்லாத ஆல்டர்நேட் ரூட் வரை காமிச்சுட்டுதான் வருவாங்க..” ராகா சிற்பி பத்தி சொன்னது ஞாபகம் வருகிறது இவளுக்கு….

ஓ அந்த குணம் போலும் இது….

இதற்குள் செபின் தன் காலரிலிருந்த சிற்பியின் கையை எந்த பதிலும் சொல்லாமல் மெல்ல உருவி எடுத்தான்…

“இந்த ஸ்டேஜ்ல கொண்டு வந்து கல்யாணத்த நிறுத்துறது நான் இல்ல…. அங்க சர்டிஃபிகேட்ல பார்த்தீங்களே அந்த அவன்…..எதோ ஜெரோம்னு போட்றுந்துதே……கேட்கிறதுன்னா அவன போய் கேளுங்க சார்…. லீகலி அவ்ளவு டாகுமென்ட்லயும் ப்ரியா அவன் வைஃப்னு ரிகார்ட் ஆகி இருக்குது…...இதுல எப்டி இவங்களுக்கு நான் விசா வாங்கி…..யூ எஸ் கூட்டிப் போக…..? நான் க்ரீன் கார்டுகாக மூவ் பண்ணிட்டு இருக்கேன் அங்க…..அதனால நினச்ச நினச்ச நேரம் இண்டியா வந்து போக கூட முடியாது…... விசா இல்லைன்றதால மேரேஜ்க்கு பிறகு ப்ரியாவை நான் இங்க விட்டுட்டுப் போறதுன்னு வந்தா, ரெண்டு பேரும் பார்த்துகிறதே அபூர்வம்ன்ற மாதிரி ஆகும்…..அதோட எங்க மேரேஜ் யூஎஸ்ல இருந்து டாகுமென்ட் வெரிஃபிகேஷன் செய்றதுல இல்லீகல் மேரேஜ்னு வேற தெரிய வர சான்ஸ் அதிகம்…..முக்கியமா என் வைஃப் இங்க இருக்றதால நான் இன்டியால இருக்க ஆசைப்படுறேன்னு அவங்களுக்கு தோணும்….அப்ப என் க்ரீன் கார்ட நான் மறந்துட வேண்டியதான்….” செபின் எகிறி குதிக்காமல்தான் விளக்கம் சொன்னான்….. ஆனால் குரலில் தொனியில் எரிச்சல் மண்டிக் கிடந்தது…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.