“ரியாம்மா இந்த ப்ராபோசல்ல உனக்குதான் இஷ்டம் இல்லையா…..இல்ல உன் பூர்விக்கா எதுவும் வேண்டாம்ன்ற மாதிரி சொன்னாங்களா..?” என எதோ பூர்விக்காதான் அவங்க செல்ஃபிஷ்னஸ்க்காக இவள் மேரேஜை தடுத்து வைத்திருப்பது போல் அவன் ஆரம்பிக்க…. இங்க இந்த ரியாம்மா பாசமான மா இல்ல…..ஸ்கூலைப் பொறுத்த வரை இவளது பேரே ரியாம்மா தானே அதைத்தான் சொல்கிறான் அவன் என அவளுக்கு புரிந்தாலும் அள்ளி ஏறிக் கொண்டு வருகிறது அப்பர் பாட்டம் லேயர் ஏதுமற்ற அடங்கா கோபம்.
ஏற்கனவே இஷ்டம் இல்லை என அத்தனை முறை அவாய்ட் செய்த பிறகும் ஆஃபீஸில் வந்து ப்ளாக்மெயில் செய்யாத குறையாக இப்படி வெளியே கூட்டி வந்த கொதிப்பு….இதில் இப்படி பூர்விக்காவை அவன் குறை சொன்னது எல்லாம் சேர்ந்ததால் போலும்…..கூடவே அடிமனதில் அவன் மேல் இல்லாத மரியாதை….
சட்டென இடம் மறந்து செயல் மறந்து சிந்தனையும் அழிந்து காச் மூசென கடையே அதிரும் வண்ணம் கத்திவிட்டாள் இவள்….என்னவெல்லாம் சொல்லி திட்டினாள் என இவளுக்கு ஞாபகம் இல்லை…..ஆனால் அவனுக்கு கட்டாயம் ஞாபகம் இருக்கும் என இவள் அடித்து சொல்லலாம் அந்த அளவுக்கு இருந்தன இவள் வார்த்தை தேர்வு என்பது மட்டும் தெளிவாய் நியாபகம் இருக்கிறது இவளுக்கு…….
அதற்குத்தான் இந்த பழி வாங்கலோ….???
அடுத்து அவன் அவளை தொடரவில்லை தொடர்பும் கொள்ளவில்லை என நிம்மதியிலும்….. சற்று நாட்கள் செல்ல கொஞ்சம் ஒழுங்கா பேசி அனுப்பி இருக்கலாமோ என்ற சிறு உறுத்தலிலும் இவளிருக்க அவன் இப்படி செய்து வைத்திருக்கிறான் இவள் வாழ்வை அழிக்கவென….
இது வரை அடுத்து என்ன என்றே நினைக்க முடியாத நிலையில் இருந்தவள் இப்போது கடகவென எழுந்து கிளம்பினாள்…..ஹேண்ட் பேக்கும் கையுமாக ஹாலுக்கு வந்து நின்ற இவளை சிற்பியும் ராகாவும் கேள்வியும் கலக்கமுமாக பார்த்தனர்….
“நான் அந்த விவன போய் ஒரு டைம் பார்த்துட்டு வந்துடுறேன்…” இவள் பார்வை இவள் செருப்பு எங்கிருக்கிறது என தேடுகிறது…. ராகாவை நேருக்கு நேர் பார்க்க தயக்கம்…. அவள் போகாதே என சொல்லி மீறிப் போக வேண்டிய நிலை வேண்டாமே…
இவள் மனம் ராகாவுக்கு புரிதிருக்க வேண்டும் போலும்… “சரி போகலாம்…..ஆனா சாப்டுட்டு கிளம்பு….கூட நாங்களும் வருவோம்…”
அடுத்த பத்தாம் நிமிடம் வளசரவாக்கத்தில் அந்த விவனின் முகவரியாக கொடுக்கப் பட்டிருந்த வீடை நோக்கி போய்க் கொண்டிருந்தனர் இவர்கள் மூவரும்…. ஆற்காடுரோட்டிலேயே இருந்தது அது…. சிர்ரஸ்…..
ஆட்டோவில் இருந்து இறங்கிய ப்ரியா….அந்த காம்பஸ் முன் நின்று ஒரு முறை அதை நிமிர்ந்து பார்த்தாள்…. கூடவே இறங்கிய ராகாவிடம்…. “தப்பா எடுதுக்காதீங்க…..நான் முதல்ல போய் ஒரு ஃப்யூ மினிட்ஸ் அவன்ட்ட பேசிக்கிறேன்……அடுத்து நீங்க வாங்க……நான் தனியா வந்திருக்கேன்ற நினைப்பில் குத்தி காமிக்றதுக்காகவாவது அவன் உண்மைய சொல்வானா இருக்கும்…..பட் ஆட்களோட போனா அவன் எப்டி இத செய்தான்னு சொல்வானானே தெரியலை…..அப்றம் எப்டி இதுல இருந்து வெளிய வர….?”
ப்ரியாவின் மன ஓட்டத்திற்கு ரொம்பவும் குறுக்கே நிற்க கூடாது என நினைத்திருந்த ராகாவும் சிற்பியும் இப்போது இதற்கு சம்மதிக்க……”கீழ தான் நின்னுட்டுறுப்போம்…..எதுனாலும் ஜஸ்ட் ஒரு கால் குடு…. வந்துடுவோம்…..” என முடிக்க…
ஒரு சம்மத தலையாட்டலுடன் செக்யூரிடி ரிஜிஸ்டரில் சைன் செய்துவிட்டு லிஃப்டை தேடிப் போனாள்…..அவனிருந்த 5த் ஃப்ளோரில் இவள் இறங்க…..முதல் அதிர்ச்சி…..அந்த நாள்ள அது எத்தனையாவதோ…..ஆனா இப்போதைக்கு அது முதல் அதிர்ச்சி…..
செபின் இவள் லிஃப்டில் இருந்து இறங்கிய இத்திலிருந்து சற்று தொலைவில் இருந்த அந்த T வடிவ காரிடாரில் இவளுக்கு முது காட்டி வெளியே பார்த்து நின்று கொண்டிருந்தான்….இங்க என்ன செய்றான் அவன்…? இவள் வந்ததை கூட கவனிக்காமல் மொபைலில் பேசிக் கொண்டிருந்தான் அவன்…
“அதெல்லாம் ஒன்னுமில்ல…. அவ ஒரு வாயில்லா பூச்சி நானோ என் அம்மாவோ கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் அட்ஜஸ்ட் செய்துட்டு போய்டுவான்னு தான் நான் இந்த மேரேஜ்க்கு ப்ளான் செய்ததே….. பார்த்தா அவளுக்கு ஏற்கனவே மேரேஜ் ஆகி இருக்குது….அதுல மெடிகல் ரிப்போர்ட் ப்ரெக்னென்ட்னு வேற வந்திருக்குது….. அதான் என்ன வச்சு ஏன் இப்டி ட்ராமா……………………………. அது இங்க விசா ஃபார்மலிட்டீஸ்க்காக மெடிகல் ரிப்போர்ட் கேட்டோம் ஒரு ஹாஸ்பிட்டல்ல…….அவங்க ஒரு செட் ஆஃப் டெஸ்ட்ஸ் கொடுத்தாங்க அதுல இதுவும் உண்டு போல…..இப்பதான் ரிப்போர்ட் மெயில் செய்துறுந்தாங்க……..ம்…அதான் அந்த அவன் வீட்டு அட் ரெஸ்தான் இருந்துச்சு வந்து என்ன வச்சு என்ன ப்ளான் செய்றாங்கன்னு………..பயமா இருக்குதுடா…..எல்லாம் க்ரிமினல் கோஷ்டியா இருக்குது…..என்ன ப்ளான் செய்றாங்கன்னு தெரியலையே……நான் டிக்கட்டை ப்ரீ போன் செய்து இன்னைக்கே கிளம்புறேன்……எதாவது க்ரிமினல் கேஃஸ்ல என்னை லிங்க் செய்துடுவாங்களோன்னு டென்ஷனா இருக்குது….”
கேட்டுக் கொண்டிருந்த ப்ரியா திக்ப்ரமித்துப் போய் நின்றிருந்தாள்…… ப்ரெக்னென்சியா…..????? இவளா???? காதுகளோடு சேர்த்து கிண்னென்றிருந்த தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு சற்று நேரம் அசையாமல் நின்றவளுக்கு அப்போதுதான் மெல்ல மெல்ல உறைக்கிறது வெட்டிங் சர்டிஃபிகேட் போல் இதிலும் என்ன கோல் மால் செய்திறுக்கிறான் இந்த விவன்….????