கடகடவென போய் அந்த D2 கதவை ஓங்கி ஓர் உதை……. இருந்த ருத்ர கோபத்தில் அதுதான் தோன்றுகிறது…..ஆனால் கதவு பூட்டபடாமல் திறந்திருக்கும் போலும்….இவள் கால் படவும் படாரென திறந்து கொள்ள….
பட்டு வேஷ்டி சட்டையில் எதிரில் நின்றிருந்தான் விவன்…..
“வா ரியாம்மா…..நானே உன்னைப்….” அவன் என்ன சொல்ல வந்தானோ நேரே போய் அவன் முன் தடாலென முழங்காலிட்டவள்….. “தயவு செய்து நான் உன்ன திட்னதுக்கெல்லாம் என்ன மன்னிச்சிடு….”
“ஹேய்…என்ன …” இதை எதிர்பாராத அவன் ஏதோ சொல்லி பதறி விலக…..அதை சற்றும் கண்டு கொள்ளாமல் கண்ணீர் மல்க தான் இதை கேட்டாள்…..ஆனால் அடுத்த நொடி எழுந்தவள் அவன் சட்டையின் இருப்பக்க காலரையும் இரண்டு கைகளாலும் பற்றிக் கொண்டு
“இப்ப என் லைஃப்ல நீ அழிச்சதெல்லாம் ரெஸ்ட்டோர் செய்டா பார்ப்போம்….” என உறுமினாள்….. ஒரு கணம் அவளை ஆழப் பார்த்தவன் கத்தி போல் அவனை குத்திக் கிழித்துக் கொண்டிருக்கும் அவள் கண்களை ஊடுருவியபடி
சற்றும் அசையாமல் அழுத்தம் திருத்தமாக சொன்னான்….. “நான் எதையுமே அழிக்கலையே ரியூ….நீ என் வைஃப், அது நம்ம பேபி….”
“இல்ல…..பொய்…..நமக்கு மேரேஜும் ஆகல….நான் கன்சீவாவும் இல்ல….எனக்கு எந்த அம்னீசியாவும் இல்ல…..” சொல்லிக் கொண்டிருந்தவள் இருந்த உணர்ச்சி மிகுதியில் அடுத்துமாய் அந்த நாளின் இரண்டாம் மயக்கத்திற்குள் ப்ரவேசிக்க….
தன் கைகளுக்குள் சரிந்தவளை தாங்கிப் பிடித்த அவன் முகத்தில் எதிர்பாரா நொடியில் ஒங்கி விழுகிறது ஒரு குத்து…
“நாயேஏஏஏஏ…..எவ்ளவு திமிர் இருந்தா…” வேற யார் சிற்பி தான்….கால் பண்ணதும் வரச் சொல்லிட்டு வந்தவள் ஹேண்ட் பேக்கை மொபைலோடு கீழேயே விட்டு வந்திருந்தாள்…..அதை கவனிக்கவும் ராகாவும் சிற்பியும் அவசரமாக மேலே கிளம்பி வந்திருந்தனர்…..
அப்போதுதான் இப்படி வரவேற்றுக் கொண்டிருந்தான் இந்த விவன் ப்ரியாவை…
“அச்சோ அடிக்காதீங்க சிபி….. எதுனாலும் முதல்ல பேசுங்க…” ஓடிப் போய் சிற்பியை பிடித்தது ராகா….
“விழுந்துட்டு இருக்ற அவள பிடிச்சுட்டு இருக்கார்…இன்நேரம் போய் அடிக்கிறீங்க…..” தன்னவனை சமாளித்தபடியே…
“நீங்க அவள…” என விவனைப் பார்த்து அவள் எதோ சொல்ல தொடங்க……. இதற்குள் ப்ரியாவை தன் கையில் அள்ளியபடி அந்த வீட்டின் ஒரு அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தான் அவன்….
முதிர்ந்து வரும் முதுவேனில் காலத்தின் கரு நீல வான வீதியில் மேகவஸ்திரம் எதுவும் புனையாத பிறை சந்திரன் தன் சிறு உருவத்துக்கு ஒவ்வாவமல் சற்று மிகையாகவே பால் ஒளியை சிதறவிட்டுக் கொண்டிருந்தான்…. சந்திர காந்தி அதிகமானதால் ஆகாய மார்க்கமெங்கும் அந்த பாதமற்ற பால் நிலவு பவனிக்கென வீசி இரைத்திருக்கும் விண்மீன் புஷ்பங்கள் இன்று விழி சிமிட்டவில்லை…. இவ்வாறு தாரகை தோழியர் துணை இன்றி தனித்து நின்ற மதி மங்கை தளர்ந்துவிடக் கூடாதென்று எண்ணியது போலும் அந்த கோலகொண்டா கோட்டையின் தீபந்தங்கள்….. அவை துணைவர நாங்களிருக்கிறோம் என்பது போல காற்றில் ஆடி ஆடி எரிந்து நிலவுக்கு தூதுவிட்டுகொண்டிருந்தன.
கடந்த அரை நூற்றாண்டு காலமாக அந்த காகதீய ப்ராந்தியம் பலவகை போர்களை பார்த்துவிட்டதால் போலும் கிடைக்கும் சிறு சாந்தியையும் ஏகமாய் கொண்டாடுகிறதோ?.... கோட்டைக்குள்ளும் வெளியேயும் அபரிதமாய் நிசப்தமும் ஆழ்ந்த சாந்தியும் நிலவிக் கிடந்தது…
எங்கு சாந்தி எவ்வளாவாய் நிலவினாலும் இதயத்தில் அது இல்லை என்றால் போர்களம் தானே மன ப்ராந்தியத்தில்…..அதை தான் அனுபவித்துக் கொண்டிருந்தது அந்த ஒடிசலான உருவம்…
கோட்டையின் அக்கினி பந்தங்களுக்கும் அம்புலிக்கும் இடைப்பட்ட உறவுநிலையை பரந்து விரிந்து அது அமர்ந்திருக்கும் குன்று முழுவதையும் வியாபித்திருந்திருந்த அக்கோட்டையின் உள்ளே அமைந்திருந்த அந்தபுர பள்ளி அறை சாளரத்தின் வழியாய் சில பல மணிதுளிகள் உற்றுநோக்கிய அவ்உருவம் இப்போது அச் சாளரத்தின் வழியாயே இறங்கலாயிற்று…..
சாளர்த்தின் வெகு கீழ் இருந்த அந்த திட பாறையில் பாதம் பதித்த அந்த உருவம் தன் உடையை ஒரு முறை சரி செய்து கொண்டது….. கால்சராயும்…அதற்கு மேலாடையாக வளமான வணிகர்களின் அங்கி ஒன்றையும் உடையாக அணிந்து…தலையில் பட்டு துணியாலான ஒரு தலைபாகையையும் அணிந்து கம்பீர புருஷனாய் அழுந்த நடை நடந்து அங்கிருந்த படிகளை நோக்கி அது நடக்க……
அதன் ஒடிசலான உடல்வாகுக்கும்…..அழுந்த படிந்த புருஷ நடைக்கும் எதோ ஒவ்வவில்லை…..
படிகளில் சற்று தூரம் இறங்கிய அவ்வுருவம் இப்போது பாதையை விட்டு விலகி சர சரவென அங்கிருந்த பாறைகளின் மீதேறி…. சற்றாய் ஊர்ந்து என அந்த குறிப்பிட்ட இடத்தை அடையவும்….ஒரு கணம் நிதானிக்கிறது….
பின் ஆழ்ந்த மூச்சு ஒன்றை இழுத்து விட்டுக் கொண்ட அது கண் முன் விரிந்திருந்த அந்த இருண்ட பெரும் பள்ளத்தைப் பார்க்கிறது….. கண் மூடி வானம் நோக்கி மௌனமாய் மனதில் ஏதோ உச்சாடனம் செய்து எம்பி அந்த மரண குழிக்குள் குதிக்கவிருந்த நேரம்…..
பின்னிருந்து இறுகப் பிடிக்கிறது ஒரு இரும்புக் கரம்….
“ஏனிந்த முடிவு குழந்தாய்?” என்கிறது அந்த கரத்திற்கு ஏற்ற ஒரு ஆண்மைக் குரல்….
“குழந்தையா….நானா?” வெகுண்டு திரும்பியது அவ்வுருவம் இந்நேரம்….
தொடரும்
{kunena_discuss:1063}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.