“அதுக்காக…..உன் க்ரீன் கார்டுகாக…?” சிற்பியோ இன்னும் கோபத்தைக் குறைப்பதாய் இல்லை…..
“புரியாம பேசாதீங்க சார்….. க்ரீன் கார்ட்னா சும்மாவா…? அதுக்காக நான் எவ்ளவு இயர்ஸ் அண்ட் மனி ஸ்பென்ட் பண்ணிருப்பேன்…. அதோட எவ்ளவு ப்ளான்ஸ் அண்ட் ட்ரீம்ஸ்…” செபின் பல்லை கடித்தபடி தொடர….
இதற்குள் ப்ரியாவோ…. “விடுங்க சிற்பி…. ரொம்ப. டயர்டா இருக்குது…..ஒரு ஆட்டோ பிடிச்சு தாங்களேன் ப்ளீஸ் வீட்டுக்குப் போய்டுவேன்….” குரல் முகம் எல்லாவற்றிலும் களைப்பு தெரிய கேட்டாள்…… அதோடு செபினுடனான இவளது திருமண ஏற்பாட்டுக்கும் அவள் முற்றுப் புள்ளி வைக்கிறாள் என்பது சிற்பிக்கும் புரிகிறதுதானே….
நடப்பதை மௌன குமுறலுடன் பார்த்துக் கொண்டிருந்த ராகாவோ…
“இப்போ ப்ரியா இருக்ற நிலமைக்கு முதல்ல ரெஸ்ட் எடுக்கட்டும் சிபி.…ஷாக் சரியானதும் நாம பேசிக்கலாம்…” என செய்ய வேண்டியதை துரிதபடுத்த….
அடுத்து சிற்பி அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டிலிருந்து அழைத்து வந்த ஆட்டோவில் ப்ரியாவும் ராகாவும் பயணிக்க தொடங்கினர்…
“அரும்பாக்கம் சிக்னல் பக்கம் போய்டுங்க…” ராகா ஆட்டோ ட்ரைவரிடம் சொல்ல ப்ரியா மறுப்பேதும் சொல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்…..அங்கு தான் ராகாவின் வீடு.….
ராகா வீடு ஒற்றை படுக்கை அறை ஃப்ளாட்ஸ்…..
இது தான் முதல் முறை ப்ரியா இங்கு வருவது…… உள்ளே நுழையவும் அந்த குட்டி வரவேற்பறையை பார்வையால் துளவினாள்….
“உட்கார் ப்ரியா….” ராகா உபசரிக்க…
“இல்ல இருக்கட்டும்…” என தடுமாறத்தான் வருகிறது இவளுக்கு…
“ப்ச்….என்ன ப்ரியா நீ…” அவள் கையைப் பற்றி இழுத்து உட்கார வைத்த ராகா….
“ இத உன் வீடு மாதிரி நினச்சுக்கோ…..நோ பார்மாலிட்டீஸ்…” என்றபடி ஒரு ஆறுதல் கலந்த புன்னகையை தர…
கடமைக்கு உதடுகளை இழுத்து வைத்துக் கொண்டாள் ப்ரியா…
அவளுக்கு இயல்பாய் இருக்க ஆசைதான்…… எதுவும் நடக்கவில்லை எதுவும் மாறிவிடவில்லை…..எல்லாத்தையும் சமளித்துக் கொள்ளலாம் ….இது நம்ம ராகா வீடுதானே….என்றெல்லாம் நினைக்கத்தான் பிடிக்கிறது…….ஆனால் அதை செயல் படுத்ததான் முடியவில்லை…..
‘இப்படி செய்துட்டானே இந்த விவன்…? விட்டுவிட்டு போகதானா இத்தனை இழுத்தடித்தான் அந்த செபின்…? இவன நம்பி வேலைய விட்டாச்சு…..வீடை வேற இன்னைக்கு காலி செய்தாகனும்….எங்க போக…? சேவிங்க்ஸ்னு பெருசா எதுவும் இல்ல….இருந்த கொஞ்சத்தையும் இந்த மேரேஜ் ப்ரிப்பரேஷன்னு கரச்சாச்சு….அதோட பூர்விக்காவோட லாஸ்ட் விஷ்….. என்னவெல்லாம் தான் மனதில் வந்து குத்தி கும்மி அடிக்கிறதாம் இவளுக்கு….? நடந்துவிட்டதை நினைத்து அழவா…? இல்லை நாளை இவள் நிலை என்ன என நினைத்து கதறவா…?
அவள் படும் பாடை பார்த்த ராகாவோ….”நீ கொஞ்ச நேரம் படு….அப்பதான் பெட்டரா ஃபீல் பண்ணுவ…..” என்றபடி இவளை கைபற்றி அழைத்துப்போய் தன் படுக்கை அறை பெட்டை காண்பித்தவள்…
“அழுறதுன்னா கூட அழுதுடு ப்ரியா…. அடுத்து மனசு லேசாகிடும்….என்ன செய்யன்னு அடுத்து யோசிக்கிறப்ப தெளிவா திங்க் பண்ண முடியும்…” ராகாவின் வார்த்தைகளுக்கு தலையை கூட ஆட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் இவள்….அடைத்துக் கொண்டுதான் வருகிறது அழத்தான் முடியவில்லை….
“காலைல சாப்டியா நீ…..இல்ல அவசரத்துல சாப்டாம வந்துட்டியா…?சட்டுன்னு கீழ விழுந்துட்ட…. இரு உனக்கு சாப்ட எதாவது டிஃபன் எடுத்துட்டு வர்றேன்……” ராகா கிளம்பிப் போனதும் சற்று தயக்கமாக இருந்தாலும் கூட கடலளவு கணத்த மனமும் மற்றும் உடலில் ஏற்பட்டிருக்கும் சோர்வும் உந்திதள்ள மெல்ல படுக்கையில் சுருண்டு கொண்டாள்….
இப்போது காலிங் பெல் அடிக்கும் சத்தம்….. இவள் எழும்ப வேண்டுமா?
இதற்குள் கதவு திறக்கும் சத்தமும் கூடவே “வாங்க சிபி…” என்ற ராகாவின் குரலும் கேட்கிறது…..
சட்டென எழுந்து உட்கார்ந்தாள் இவள்…… சிற்பி இவள பார்க்க வந்தா இவ இங்க படுத்துறுக்கது நல்லாவா இருக்கும்?
ஆனால் சிற்பி மற்றும் ராகாவின் குரல் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொண்டு போக…..அவர்கள் சமயலறை பக்கமா செல்கின்றனர் என இவளுக்கு புரிகிறது….
என்னதான் இருந்தாலும் அடுத்த வீட்ல எவ்ளவுதான் தங்கிட முடியும்…? அதுவும் சிங்கிள் பெட்ரூம் வீடு…. எங்க போய் ஒதுங்க? ராகாவும் சிற்பிக்கும் அடுத்த மாசம் மேரேஜ்…அடுத்து இந்த வீட்லதான் குடித்தனம்…..ஆஃபீஸ்க்கு இதுதான் பக்கமாயிருக்குதுன்னு இப்டிப் ப்ளான்…..இதில் இவ இங்க எவ்ளவு நாள் இருந்துட முடியும்….? சீக்கிரம் வீடு பார்க்கனும்….
படு படு என்ற உடலின் கெஞ்சலில் இப்போது இவள் மீண்டுமாய் ஒரு சுருளல்….