(Reading time: 35 - 69 minutes)

வன் சொன்னதும் கண்ணை மூடினாள்... ஆனால் என்ன எடுக்கப் போறான்... இவக்கிட்ட என்ன இருக்கு என்று யோசிக்கும் போதே... அவன் மூச்சுக் காற்று இவள் முகம் அருகில்... அய்யோ ஏதோ ஏடாகூடாமா செய்யப் போறான் போல... என்று இவள் கண்களை திறக்கும் போதே... அவன் இதழ்களால் இவள் இதழ்களை அவன் சிறைப் பிடித்து இருந்தான்... திறந்த கண்களை அப்படியே மூடிக் கொண்டாள்..

வெவ்வேறு பேரோடு...

வாழ்ந்தாலும் வேறல்ல...

நான் வாங்கும் மூச்சுக் காற்று...

உனதல்லவா...

உன் தேகம் ஓடும் ரத்தம்...

எனதல்லவா...

நீயென்றால் நான் தான் என்று...

உறவரிய... ஊரறிய...

ஒருவரின் ஒருவரின் உயிர்க்கரைய...

உடனடியாய்... உதடுகளால்...

உயில் எழுது...

லேசா லேசா... நீயில்லாமல்..

வாழ்வது லேசா...

நேசா நேசா... நீண்டக் கால...

உறவிது நேசா...

"என்ன அண்ணி... அண்ணன் கூட இருந்த ரொமான்டிக் மூவ்மென்ட நினைச்சுக்கிட்டு இருக்கீங்களா..??"

"ம்ம்.."

அன்று அவன் செய்த அந்த செயலில் முதலில் மெய்மறந்திருந்தாலும்... பின் அவன் எப்படி அதுபோல் செய்யலாம்... என்று அவனிடம் கோபித்து, சண்டைப் பிடித்து... திருமணம் வரை அப்படி ஏதும் செய்யமாட்டேன் என்று அவன் வாயால் உறுதியும் வாங்கிவிட்டாள்... ஆனாலும் அந்த நாளை நினைக்கும் போதெல்லாம், உடம்புக்குள் ஒரு சிலிர்ப்பும்... அவனின் ஸ்பரிசம் இன்னும் இவள் இதழில் பதிந்திருப்பது போலும் தோன்றும்...

இப்போதும் அதே போல் தோன்றியதால்... தானாகவே அவள் விரல்கள் உதடுகளை தொட்டுப் பார்த்தது... அப்போது உள்ளே நுழைந்த பிரணதி... கவி நின்றிருந்த நிலையைப் பார்த்து தான் கேளியாக அப்படிக் கேட்டாள்... ஆனால் நினைவு உலகில் இருந்து நிஜ உலகிற்கு வராத கவியோ... ம்ம்.. என்று அதற்கு பதில் சொன்னாள்... ஆனால் அடுத்த நொடியே அவள் நிஜ உலகிற்கு வந்துவிட்டாள்...

"ஹே..ஹே.. அப்படியெல்லாம் ஒன்னுமில்ல... தர்ஷினி ரொம்ப லிப்ஸ்டிக் போட்டுட்டாளோன்னு தொட்டுப் பார்த்தேன் அவ்வளவுதான்... "

"ம்ம் நம்பிட்டேன்.. நம்பிட்டேன்... நீங்க ஏன் உதட்டை தொட்டுப் பார்த்தீங்கன்னு நான் கேக்கவே இல்லையே.." என்று பிரணதி சொன்னதும்... உளரிவிட்டதை நினைத்து நாக்கை கடித்துக் கொண்டாள் கவி...

"அண்ணி... உங்க முகம் வெட்கத்துல இப்படி சிவந்துப் போனதை பார்த்தாலே நீங்க சொன்னதை நம்பி தான் ஆகனும்..." என்று சொல்லி பிரணதி கண்ணடித்தாள்..

"ஹே.. இது ஒன்னும் வெட்கத்துல சிவந்தது இல்லை... தர்ஷினி போட்ட ரோஸ் பவுடர்..."

"அண்ணி... உங்களுக்கு ரோஸ் பவுடர் தேவையே இல்லை... அப்படி முகம் சிவந்துப் போயிருக்கு..."

"அதெல்லாம் வெள்ளையா இருப்பவங்களுக்கு தான் சிவக்கும்... எனக்கு அப்படியெல்லாம் சிவப்பாகாது..."

"கலர் கம்மியா இருந்தாலும் உங்களுக்கு சிவந்துப் போயிருக்குன்னா... கண்டிப்பா நீங்க சொன்னதை நம்பியே ஆகனும் அண்ணி..." என்று அவள் முடிக்கும் முன்னரே பிரணதியின் காதை திருகினாள் கவி...

"அய்யோ அண்ணி விடுங்க... வலிக்குது..."

"ரொம்ப கிண்டல் பண்ற... இரு உன்னோட மேரேஜ்க்கு இதோட டபுள் மடங்கு செய்றேன்.."

"சரி அண்ணி... இனி கிண்டல் பண்ண மாட்டேன் விடுங்க..."

"சரி போனாப் போகுதுன்னு விட்றேன்..." என்று பிரணதியின் காதை விடுவித்தாள் கவி...

"ஆமா இப்போ தான் வந்தியா.."

"ஆமாம் அண்ணி... வந்ததும் உங்களை தான் பார்க்க வந்தேன்... அம்மாவும், அப்பாவும் வெளிய இருக்காங்க..."

"நீங்க 3 பேர் தான் வந்தீங்களா... ஆமாம் சம்யுக்தா மகாராணி வரலையா.."

"நாங்க கிளம்பனப்போ தான் அண்ணி குளிச்சிக்கிட்டு இருந்தாங்க... அண்ணன் தான்... நீங்க ஒரு ஆட்டோ பிடிச்சு முதல்ல போங்க... நானும், யுக்தாவும் பின்னாடி கார்ல வரோம்னு சொல்லுச்சு... நாங்களும் கிளம்பி வந்துட்டோம்... அண்ணாவும், அண்ணியும் வருவாங்க..."

"ஓ.. சரி.."

"சரி அண்ணி... நீங்க ரெடியா தான் இருக்கீங்க... அதனால என்னோட ஹெல்ப் தேவையிருக்காது... நான் போய் தேவா அண்ணாவை பார்த்துட்டு வரேன்..."

"ம்ம்.."

பிரணதி வெளியே போனதும்... "எல்லோரும் வந்துட்டாங்க... சம்யூவை இன்னும் காணோம்... அவக்கிட்ட நிச்சயத்தப்போ என்ன சொன்னேன்... அவ என்ன செய்யறா..." கோபமாக மனசுக்குள் புலம்பிய கவிக்கு அன்று தன் நிச்சயதார்த்தம் அன்று யுக்தாவிடம் பேசியது ஞாபகம் வந்தது...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.