(Reading time: 35 - 69 minutes)

ல்யாணத்துக்கு வர்றவங்க சாப்பிடுவதற்கு சாப்பாடெல்லாம் ஹோட்டலில் சரியா அரேன்ஞ் செய்திருக்கிறார்களா... என்று தெரிந்துக் கொள்ள தேவா போனில் பேசிக் கொண்டிருந்த போது வரூன் வந்துக் கொண்டிருந்தான்...

"அட வாங்க.. வாங்க வரூன்... பொண்ணுக்கு அண்ணன் இவ்வளவு லேட்டாவா வர்றது... "

"அட போ தேவா... சீக்கிரம் எழுந்து குளிச்சாச்சு... அம்மாவும், அப்பாவும் ஒரு க்ரக ப்ரவேசத்துக்கு போயிட்டு கோவிலுக்கு நேரா வர்றேன்னு சொன்னாங்க... நீயும், பிருத்வியும் ட்ரஸ் கோட் வேஷ்டி, சட்டைன்னு சொன்னீங்களா..?? அப்பா கிளம்பறதுக்கு முன்னாடி... " வேஷ்டி கட்டத் தெரியுமில்லன்னு கேட்டதுக்கு பந்தாவா தெரியும்னு சொல்லிட்டேன்... அவரும் கிளம்பிட்டாரு... அப்புறம் எனக்கும் வேஷ்டிக்கும் ஒரு போராட்டமே நடந்ததுன்னா பார்த்துக்க..."

"அப்புறம் என்னாச்சு வரூன்..."

"அப்புறம் என்ன.. பிருத்விக்கு போன் பண்ணி... போனை ஸ்பீக்கர்ல போட்டுட்டு... அவன் சொல்ல சொல்ல கட்டினேன்..."

"சீக்கிரமா கல்யாணத்துக்குள்ள வேஷ்டி கட்ட கத்துக்க வரூன்..."

"அதை அப்போ பார்த்துக்கலாம்... இப்போ என் வேஷ்டி எல்லார் முன்னாடியும் என் மானத்தை வாங்கறதுக்கு முன்னாடி நீங்க சீக்கிரம் கல்யாணத்தை நடத்துனா சரிதான்..." என்றதும் தேவா சிரித்தான்...

"ஆமாம் எல்லோரும் கல்யாணத்துக்கு வந்தாச்சா..??" என்று வரூன் யாரையோ தேட...

"பிரணதி தானே வந்தாச்சு... இப்போ தான் என் கூட பேசிக்கிட்டு இருந்தா..  அதுக்குள்ள யாரோ கூப்பிட்டாங்கன்னு போனா.."

"ஆமாம் பிருத்வி இன்னும் வரல..??"

"ம்ம்.. பொண்ணுக்கு அண்ணனே இப்போ தான் வர்றீங்க... அவர் இந்த வீட்டு மாப்பிள்ளை இல்லையா..?? மெதுவா வருவாரு..."

"ம்ம்.. போதும் போதும் தேவா... கவிக்கிட்ட காதலை சொன்னதும், கல்யாணம் வரைக்கும் போனதால ரொம்ப பந்தா பண்ணாத..."

"ஆமாம் வரூன்... நானே கேக்கனும்னு இருந்தேன்... பிருத்வி, யுக்தாக்காக தான் நீங்க கல்யாணத்தை தள்ளிப் போட்டீங்க... இப்போ அவங்க சேர்ந்தே 3 மாசம் ஆகப் போகுது... அப்புறம் ஏன் வரூன் உங்க கல்யாணத்துக்கு இன்னும் தேதி குறிக்காம இருக்கீங்க..."

"அட ஏன் தேவா அதை கேக்கற... பிரணதிக்கு அவங்க அண்ணன், அண்ணி மேல நம்பிக்கை இல்லாம, அவங்க சேர நாளாகும்னு ஏதோ ஒரு கோர்ஸ்ல ஜாயின் பண்ணிட்டா... இதுங்க என்னடான்னா ஒரு மாசம் கூட முடியல அதுக்குள்ள சேர்ந்துடுச்சுங்க...

சரி நாம எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம்னு பிரணதிக்கிட்ட கேட்டா... கோர்ஸ் முடிய ஆறு மாசம் ஆகும்... அப்புறம் தான் மேரேஜ்னு சொல்லிட்டா... ஏன்னா ஏதோ முக்கியமான கோர்ஸாம்... டிஸ்டர்ப் ஆக கூடாதாம்...  இப்போ 3 மாசம் முடிஞ்சிடுச்சு.. இன்னும் 3 மாசம் இருக்கு... இதுல இன்னோரு கொடுமை என்ன தெரியுமா தேவா..??"

"என்ன..??"

"நான் ஜெர்மனியில இருக்கப்போ எப்படா கல்யாணம் செஞ்சுக்கப் போறன்னு எங்க அம்மா நச்சரிப்பாங்க... இப்போ என்னடான்னா.. ஏண்டா மருமக படிச்சு முடிச்சதும் தான் கல்யாணத்தை வச்சுக்கலாமே... ஏன் அவசரப்பட்றன்னு கேக்கறாங்க... மாமியார், மருமகள் கூட்டணி அவ்வளவு ஸ்டார்ங் ஆயிடுச்சு..'

"ஆமாம் வரூன்... இங்கேயும் அதே கதை தான்... சங்கு என்கிட்ட பேசறத விட... எங்கம்மாக்கிட்ட பேசறது தான் நிறைய... இவங்கல்லாம் மதி அம்மாவையும், யுக்தாவையும் பார்த்து கெட்டுப் போயிட்டாங்கன்னு நினைக்கிறேன்..."

"ஆமாம் அப்படிதான் இருக்கும்... என்னவோ நம்ம தலையை உருட்டாம இருந்தா சரி தான்..." வரூன் சொல்லிக் கொண்டிருந்த போதே... பிரணதி வாட்சைப் பார்த்துக் கொண்டே வாசலுக்கு செல்வது தெரிந்தது... இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை அவள் கவனிக்கவில்லை...

"உன்னை தான் தேட்றான்னு நினைக்கிறேன் வரூன்... போய் அவளைப் பாரு... என்று வரூனை அனுப்பி வைத்தவன்... இன்னும் நம்ம ஆளை கண்ணுலக் காட்டலையே... அவ ரெடியாயிட்டாளா..?? எப்போ அவளைப் பார்ப்பது என்று தேவா மனதில் புலம்பினான்.

வாசலைப் பார்த்துக் கொண்டே பிரணதி போனில் ஒரு நம்பரை அழுத்த... திடிரென்று போனின் ரிங் டோன் பின்னாலிருந்து கேட்டதும்.... இவள் உடனே திரும்பி பார்த்தாள்... பின்னால் தான் நின்றுக் கொண்டிருந்தான் வரூன்... இவள் கட்டியிருந்த லேவண்டர் நிற பட்டுப் புடவைக்கு மேட்சாகும் படி அதே நிற சட்டையும்... வேஷ்டியும் கட்டிக் கொண்டு வந்திருந்தான்... இருவரும் திட்டமிட்டு வாங்கியது தான்... இருந்தும் அவனை அந்த உடையில் பார்க்கும் போது ஒரு வித இதம் மனதில்...

"ஹாய் பிரனு..."

"எப்போ வந்தீங்க..."

"இப்போ தான் ஒரு பத்து நிமிஷத்துக்கு முன்னாடி வந்தேன்... தேவாக்கிட்ட பேசிட்டு உன்னை பார்க்க வரலாம்னு இருந்தேன்... அதுக்குள்ள ப்ரணுக் குட்டியே என்னை தேட ஆரம்பிச்சிடுச்சு..."

"இன்னும் வரலையேன்னு பார்த்தேன்... ஆமாம் அத்தை, மாமா வரல...??"

"அவங்க ஒரு க்ரக் ப்ரவேசத்துக்கு போயிருக்காங்க... நேரா கோவிலுக்கு வந்துடுவாங்க... ப்ரணு... ப் ர ணு..."

"என்ன வரூன்.."

"ப்ரணு... நாமளும் இன்னைக்கே கல்யாணம் செஞ்சுக்கலாமா..??"

"என்ன வரூன் உளர்றீங்க... கல்யாணம்னா உங்களுக்கு சாதாரணமா போச்சா... நம்ம கல்யாணம் திருப்பதில நடத்தனும்னு அத்தை வேண்டியிருக்கறத மறந்துட்டீங்களா..??

"அப்ப வா... நாம இப்பவே திருப்பதி போகலாம்..."

"என்ன வரூன் ஜோக் அடிச்சிக்கிட்டு..."

"ஜோக்கா... ஏன் சொல்லமாட்ட... நமக்கு அப்புறம் தான் தேவாக்கும், கவிக்கும் எங்கேஜ்மென்ட் ஆச்சு.. இன்னைக்கு அவங்களுக்கு கல்யாணம்... தெரியுமில்ல..."

"போங்க வரூன்... இன்னும் 3 மாசம் வெய்ட் பண்ணமாட்டீங்களா..??"

"இப்படி என் முன்னாடி புடவையெல்லாம் கட்டிக்கிட்டு நடமாடினா... இன்னும் 3 மாசம் நான் தாக்குப் பிடிப்பேனான்னு தெரியல..."

"என்ன வரூன்... வாசல்ல நின்னுக்கிட்டு இப்படியெல்லாம் பேசறீங்க..." பிரணதி வரூனிடம் சிணுங்கி கொண்டிருந்த போதே... அவர்களின் கார் வந்து வாசலில் நிற்க... அதிலிருந்து பட்டு வேஷ்டி சட்டையோடு பிருத்வியும், மயில் நீல நிறத்தில் பிங்க் பார்டர் போட்டப் பட்டு புடவையில் யுக்தாவும் பாந்தமாக வந்து இறங்கினர்... அவர்கள் இருவரையும் பார்த்து அசந்துப் போன வரூன் விசிலடித்தான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.