(Reading time: 35 - 69 minutes)

துவரையிலும் யுக்தாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த கவி... இருவரையும் பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டாள்... கவியின் கோபத்தை யுக்தா புரிந்துக் கொண்டாள்... இருந்தும் அதை அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை...

"கவி எவ்வளவு அழகா ரெடியாகி இருக்க... இப்போ மட்டும் தேவா உன்னைப் பார்க்கனும்... அப்புறம் தான் தெரியும் கதை..." அப்போது கூட அவள் பேசவில்லை...

"என்ன கவி கோபமா..??"

"செய்யறதெல்லாம் செஞ்சுட்டு கோபமான்னு கேக்கறியா..?? நீ ஏன் இப்படியெல்லாம் செய்யறேன்னு எனக்கு புரிஞ்சிடுச்சு சம்யூ..."

"எதுக்காம்..??"

"நான் உன்னோட கல்யாணத்துக்கு வரலைன்னு தானே நீ இப்படியெல்லாம் செய்யற..." என்று கவி சொன்னதும் யுக்தா சிரித்தாள்...

எதற்கு சிரிக்கிறாள் என்று கவி பார்க்க... பிருத்வியுமே புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்..

"எதுக்கு இப்போ சிரிக்கிற..??"

"அதில்ல கவி... எங்க கல்யாணத்துக்கு நாங்களே போகமாட்டோம்னு ரெண்டுப்பேரும் அடம்பிடிச்சோம்... எங்களை கட்டாயப்படுத்திக் கூட்டிட்டுப் போய்ட்டாங்க... இதுல நீ வரலைன்னு நான் ஃபீல் பண்றன்னு நீ சொன்னதும் சிரிப்பு வந்துடுச்சு..." என்றவள்...

"இன்னும் கொஞ்சம் அடம்பிடிச்சிருக்கலாமோன்னு எனக்கு இப்போ தோனுது... அப்ப இந்த கல்யாணம் நடந்திருக்காதுல்ல..." என்று சொல்லிக் கொண்டே ஓரக்கண்ணால் பிருத்வியைப் பார்க்க... யுக்தா அப்படி சொல்லியதில் அவளை பார்த்தவன்...

"யுகி செல்லம்... நாம ஹனிமூனெல்லாம் போய்ட்டு வந்ததுக்குப் பிறகு நீ இதை யோசிக்கற... ஏன் ரெண்டு குழந்தை பெத்ததுக்குப் பிறகு யோசியேன்.." என்றான்.

"அப்போ பொதுவா எல்லா கப்பிள்ஸும் அதை யோசிப்பாங்க ரித்வி... இந்த மூஞ்சியெல்லாம் நமக்கு எப்படி பிடிச்சுதுன்னு நினைச்சிப்பாங்க... அதான் நான் கொஞ்சம் முன்னாடியே யோசிக்கிறேன்..." என்று அவள் சொன்னதும்... பிருத்வி அவளை முறைத்தான்...

"ஹேய்... உங்க ரெண்டுப்பேரை பத்தி எனக்கு தெரியாது..?? மனசுல நிறைய ஆசையும், காதலையும் வச்சிக்கிட்டு...  இந்த கல்யாணம் பிடிக்காத மாதிரி ரெண்டுப்பேரும் சீன் போட்டு... ஏன் இவங்க ரெண்டுப்பேருக்கும் இந்த கல்யாணம் பிடிக்கலன்னு எல்லோரையும் யோசிக்க வச்சவங்க தானே நீங்க..?? கல்யாணத்துக்கு வரலைன்னாலும் நானும் எல்லாம் கேள்விப் பட்டேன்..." என்று கவி சொன்னதும் இருவரும் சிரித்தனர்.

உண்மை தான்... அன்று இருவரும் அவர்களுக்கு திருமணம் நடந்த சூழ்நிலையை தான் விரும்பவில்லையே தவிர, இருவரும் அவர்கள் திருமணத்தைக் குறித்து உள்ளுக்குள் மகிழ்ந்தனர்.. என்ன அவர்கள் இருவருக்கும் இருந்த மனநிலை அந்த திருமணத்தை அவர்களால் ரசிக்க முடியவில்லை... அதனால் தான் என்னவோ... அவர்கள் திருமணம் அப்படி நடந்துவிட்டதே என்று இருவரும் இதுவரையிலும் வருத்தம் கொண்டதில்லை.

"ஆமாம் நேத்து நைட் நீ போனதுக்கும்... இப்போ இவ்வளவு லேட்டா நீ வந்ததுக்கும்... இன்னும் என்ன காரணம்னு நீ சொல்லவே இல்லை சம்யூ... " என்று கவி கேட்க...

"அது என்னால தான் கவி.." என்று பிருத்வி சொன்னதும் கவி அவனை புரியாமல் பார்க்க...

"திரும்பவும் வில்லன் ரேஞ்சுக்கு என்னைப் பார்க்காத கவி... அது என்னன்னா.." என்று பிருத்வி சொல்ல வருவதற்குள்....

"நான் தான் சொல்லுவேன்... நான் தான் சொல்லுவேன்..." என்று பிருத்வியை இடை மறித்த யுக்தா... கவியின் கையைப் பிடித்து தன் வயிற்றின் மேல் வைத்தாள்...

கவி எதோ புரிந்தும், புரியாமலும் அவளைப் பார்க்க... " நம்ம ரெண்டுப்பேரையும் அம்மான்னு கூப்பிட ஒரு குட்டி வரப்போகுது கவி..." என்றதும் கவி யுக்தாவை கட்டிப்பிடித்து தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள்..

"கல்யாண பிசியில நாள் தள்ளிப் போனதையே கவனிக்கல கவி... நேத்து திடிர்னு தலை சுத்தற மாதிரி இருந்துச்சு... சரி யாரையும் டென்ஷன் பண்ண வேண்டாம்னு தான் பிருத்வியை கூட்டிக்கிட்டு வீட்டுக்குப் போனேன்... போற வழியில தான் இப்படி இருக்குமோன்னு டவுட் வந்து... டாக்டர்க்கிட்ட போய் கன்பார்ம் பண்ணிக்கிட்டோம்... உன்கிட்ட தான் முதல்ல சொல்லனும்னு நைட்டே வீட்டுக்கு வர இருந்தேன்... ஆனா பிருத்வி தான் நைட் நல்லா தூங்கி ரெஸ்ட் எடு... அப்போ தான் கல்யாணத்துல ப்ரஷா இருக்க முடியும்னு வீட்டுக்கே கூட்டிட்டுப் போயிட்டாரு... இன்னும் வீட்லக் கூட யார்க்கிட்டேயும் சொல்லல.." என்று யுக்தா சொன்னதும்...

"ஹேய் சம்யூ நீ முதல்ல உட்காரு... ரொம்ப டயர்டா இருப்ப.." என்றவள் உடனே எல்லோருக்கும் அந்த சந்தோஷ செய்தியை தெரியப்படுத்தினாள்...

தாத்தா, பாட்டி, அத்தை, மாமா , பெரியப்பா என்று எல்லோருக்கும் ப்ரமோஷன் கிடைக்கப் போற சந்தோஷத்தை சிறிது நேரம் அனைவரும் கொண்டாடினர்...

தேவாவுக்கோ கவியின் தரிசனம் கிடைத்த டபுள் சந்தோஷத்தில் அவளை சின்சியரா சைட் அடித்துக் கொண்டிருந்தான்... அவளும் அப்பப்போ தேவாவைப் பார்த்து... வேஷ்டி சட்டையில் அழகாய் இருந்தவனை தன் மனதில் பதிய வைத்துக் கொண்டாள்.

பின் எல்லோரும் கோவிலுக்கு கிளம்பி செல்ல... குறித்த முகூர்த்ததில் சங்கவியை தன் மனைவியாக்கிக் கொண்டான் தேவா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.