(Reading time: 35 - 69 minutes)

ன் காதலை வெளிப்படுத்திய பின்னர்... சீக்கிரம் அம்மாவிடம் திருமணம் குறித்து பேசப் போகிறேன் என்று தேவா சொன்னது போலவே அவன் அம்மாவை சீக்கிரம் சம்மதிக்க வைத்துவிட்டான்... பத்து நாட்களிலேயே நிச்சயதார்த்தம் என்றும் மூன்று மாதம் கழித்து திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது... பத்து நாட்களில் நிச்சயதார்த்தம் என்பதால்... பிருத்வியும், யுக்தாவும் ஹனிமூன் செல்வதையும் தள்ளி வைத்தனர்...

தேவாவின் அன்னை லஷ்மி, உறவினர்களோடு நிச்சயம் செய்ய மாதவன் வீட்டுக்கு வந்தாள்... கூட வந்திருந்த தாத்தா, பாட்டிக்கு பிருத்வி, யுக்தாவை ஒன்றாக பார்த்ததில் சந்தோஷம்... பிருத்வியும், யுக்தாவும் அவர்கள் இருவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்... பின் நிச்சயதார்த்த சடங்குகள் ஆரம்பித்தது....

தேவா வீட்டிலிருந்து எடுத்து வந்த புடவையை கவி கட்டியதும்.... யுக்தா அவளை அழைத்து வந்தாள்... எல்லோருக்கும் சேர்த்து பொதுவாக, கவி அனைவர் முன்னும் விழுந்து வணங்கினாள்...

"லஷ்மி... கவிக்கு குங்குமம் வச்சு விடு..." என்று பாட்டி சொன்னதும்... லஷ்மி கவிக்கு குங்குமம் வைத்துவிட்டாள்... அருகிலேயே யுக்தா நின்றுக் கொண்டிருக்க.. அவளுக்கும் குங்குமம் வைத்துவிட்டாள் அவள்...

திடிரென்று லஷ்மி செய்த செயலில் கவி, யுக்தா இருவரும் லஷ்மியை ஆச்சர்யமாக பார்த்தனர்...

"அன்னைக்கு பேசினத மனசுல வச்சுக்காத யுக்தா... ஏதோ கோபத்துல பேசிட்டேன்... நீ இப்போ தான் உன் புருஷன் கூட சேர்ந்து வாழ ஆரம்பிச்சிருக்கன்னு அண்ணனும், அண்ணியும் சொன்னாங்க... சந்தோஷமா இரும்மா..." என்று லஷ்மி பேசியதும் சந்தோஷப்பட்ட யுக்தா... பிருத்வியோடு சேர்ந்து, லஷ்மி மற்றும் அவள் கணவனிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்... அதைப்பார்த்து எல்லோர் மனதிலுமே ஒரு நிறைவு இருந்தது..

தன் அத்தை தன்னை மருமகளாக ஏற்றுக் கொண்டதை விட, யுக்தாவிடம் உள்ள கோபத்தை மறந்து... அவளை ஆசிர்வதித்தது தான் கவிக்கு சந்தோஷமாக இருந்தது... சொன்னது மட்டுமல்லாமல் அதை செய்தும் காட்டிய தேவாவை அவள் பார்க்க... அவனோ அவளை தான் வெகுநேரமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்...

பிறகு மோதிரம் மாற்றிக் கொள்ளும் நேரம் வர... தேவா அவளுக்கு ஏற்கனவே மோதிரம் அணிவித்ததால்... கவி மட்டும் அவனுக்கு மோதிரம் அணிவித்தாள்... அப்போது யாருக்கும் கேட்காத வண்ணம் அவளிடம் அவன்...

"என்ன இன்னொரு அச்சாரம் கிடைக்குமா..??" என்றுக் கேட்டு கண்ணடிக்க.. அவளோ அவன் கையில் நறுக்கென்று கிள்ளினாள்..

அவனோ... "ஆ.." என்று வலித்தது போல் கத்த... எல்லோரும் என்ன நினைப்பார்களோ என்று இவள் முழிக்க... "டேய்.. என்னடா என் பேத்திக்கிட்ட வம்பு பண்ற..." என்று தாத்தா அவனை மிரட்டினார்...

பின் சடங்குகள் முடிந்து கவியும், யுக்தாவும் அறைக்குள் நுழைந்ததும்... தன் சகோதரியை கட்டிக் கொண்டாள் கவி...

"கவி என்னாச்சு..."

"உனக்கு தெரியாது சம்யூ... நம்ம ரெண்டுப்பேர்ல, நான் தான் உன் மேல அதிக பாசமா இருக்கேன்னு எனக்குள்ள ஒரு கர்வம்... ஆனா இப்போ அதெல்லாம் எங்கேயோ போயிடுச்சு...

நான் சொல்லாமயே என் மனசுக்குள்ள என்ன இருக்குன்னு புரிஞ்சு வச்சிருக்க... இன்னிக்கு எனக்கும் தேவாக்கும் கல்யாணம் நடக்கப் போகுதுன்னா.. அதுக்கு நீ தான் காரணம் சம்யூ...

ஆனா பிருத்வி விஷயத்துல நான் உன்னை புரிஞ்சிக்கலையே... நானும் உன்னை சந்தேகப்பட்டு, உன்மேல கோபப்பட்டு, உன்கிட்ட பேசாம இருந்து உன்னை கஷ்டப்படுத்தியிருக்கேன்... இப்போ அதை நினைச்சு பார்க்கும் போது கஷ்டமா இருக்கு..."

"ஹே லூசா நீ... நீ என்னை புரிஞ்சு வச்சுக்கலன்னு யார் சொன்னது..?? உனக்கு தெரியாது... சின்ன வயசுல இருந்து யாராவது என்னை குறை சொன்னா உனக்கு பிடிக்காது... யாரும் என்னை குறை சொல்ற மாதிரி நடந்துக்க நீ விட மாட்ட... அப்படி இருக்கப்போ... அன்னைக்கு பிருத்வி என் மேல ஒரு பழியைப் போட்டப்போ.... அதை நான் செய்யலன்னு நிருபிக்கனும்னு என்னை விட நீதான் அதிகமா துடிச்ச... ஆனா நான் தான் அதை செஞ்சதா எல்லோர் முன்னாடியும் ஒத்துக்கிட்டு... என்னை நானே தாழ்த்திக்கிட்டதால தான் என் மேல உனக்கு கோபம்... அதை தான் நீ அப்படி காட்டின...

ஏற்கனவே சொன்னது தான்... இருந்தாலும் இப்பவும் சொல்றேன்... அன்னைக்கு அப்பா, அம்மா கூட நான் செஞ்ச தப்புக்கு கண்டிக்காதப்போ... நீ என் மேல கோபப்பட்டதுக்கு நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன்..."

"பார்த்தியா... இந்த விஷயத்துல கூட நீ என்னை நல்லாப் புரிஞ்சு வச்சிருக்க... என்ன சொல்ல சம்யூ... இன்னொரு ஜென்மம்னு ஒன்னு இருக்குன்னா... அப்போ நான் உனக்கு பொண்ணா பொறக்கனும்..."

"ஹே... என்னை விட நீ மூனு மாசம் பெரியவளா இருக்கறதால... அடுத்த ஜென்மம் என்னை ரொம்ப பெரிய மனுஷி ஆக்கிடாத... நீ சொல்ற மாதிரி இன்னொரு ஜென்மம்னு ஒன்னு இருந்தா... அப்போதும் நாம இப்படியே பொறக்கனும்... ஆனா இப்போ மாதிரி நம்மல பிரிச்சிடாம, ஒன்னா இருக்கற மாதிரி கடவுள் வைக்கனும்..."

"கண்டிப்பா அது நடக்கும்.. ம்ம் அப்புறம் நீயும், பிருத்வியும் சந்தோஷமா தானே இருக்கீங்க..."

"பார்த்தாலே தெரியலையா...?? ரொம்ப சந்தோஷமா இருக்கோம்.."

"அப்போ இப்பயாவது அந்த போதை மருந்தை நீ கலக்கலன்னு பிருத்விக்கு சொல்லலாமில்ல..."

"அதுக்கு அவசியமே இல்ல... ஏன்னா இதை செஞ்சது யாருன்னு பிருத்விக்கே தெரிஞ்சிடுச்சு..."

"என்ன சொல்ற சம்யூ.. யார் அதை செஞ்சது..."

"வேற யாரு எல்லாம் அந்த சப்னா தான்..." என்று எல்லா விஷயத்தையும் கவியிடம் கூறினாள் யுக்தா..

"இவ்வளவு செஞ்ச சப்னாவை பிருத்வி ஏன் சும்மா விடனும்... அவ திரும்பவும் ஏதாவது பிரச்சனை பண்ணப் போறா.."

"அவளுக்கு அவங்க வீட்ல கல்யாண ஏற்பாடு செய்யறதா தான் பிருத்வி சொன்னாரு... இனி அவ ஏதாவது பிரச்சனை பண்ணா சும்மா விடமாட்டேன்னு பிருத்வி வார்ன் பண்ணியிருக்காரு... அதனால அவ எதுவும் செய்யமாட்டான்னு தான் தோனுது... அப்படி திரும்பவும் வந்து எங்க லைஃப்ல டிஸ்டர்ப் பண்ணா நான் சும்மா இருப்பேனா... ஃபர்ஸ்ட் பிருத்வி அவளை லவ் பண்ணாரேன்னு அமைதியா இருந்தேன்... ஆனா இப்போ பிருத்வி என்னை தான் காதலிக்கிறான்னு தெரிஞ்சிடுச்சே..." என்று அவள் சொன்னபோது யுக்தா முகத்தில் சந்தோஷமும், பிருத்வி அவளை தான் காதலிக்கிறான் என்ற கர்வமும் அதில் தெரிந்தது... யுக்தாவின் மகிழ்ச்சியை பார்த்து கவியும் மகிழ்ந்தாள்...

"கவி... பிருத்வி நாங்க ஹனிமூன் போக ப்ளான் பண்ணியிருக்காரு... உன்னோட எங்கேஜ்மென்ட்க்கு தான் வெயிட்டிங்... இப்போ போனோம்னா அதோட உன்னோட கல்யாணத்தன்னைக்கு தான் வருவோம்..."

"ம்ம்.. நாள் ரொம்ப குறைச்சலா இருக்கே... என் கல்யாணம் முடிஞ்சதும் திரும்ப ஹனிமூன் போங்க... ஆனா என்னோட கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பத்து நாளாவது நீ என் கூட இருக்கனும்... என்ன தான் தேவா தான் மாப்பிள்ளையா இருந்தாலும் எனக்கு கொஞ்சம் படபடப்பா இருக்கும்.. அதனால நீ என்கூட இருக்கனும்... வேணும்னா பிருத்விக்கிட்ட ஸ்பெஷல் பர்மிஷன் வாங்குறேன்..."

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், நாங்க 10 நாள் தான் ப்ளான் பண்ணியிருக்கோம்.... அதுக்கப்புறம் வந்து உன்னோட கல்யாண கலாட்டா தான்... பிருத்விக்கிட்டேயும் நான் சொல்லிட்டேன்... ஆனா கவி.. கல்யாணத்துக்கு முன்னாள் வரைக்கும் தான் நான் உன் கூட இருக்கனும்... அப்புறம் நானே இருக்கேன்னு சொன்னாலும் என்னை துரத்தி விட்டிடுவ போல..." என்று கிண்டல் செய்ய சினுங்கினாள் கவி.

அன்று சொன்னது போல நேற்று வரைக்கும் இவளோடு தான் இருந்தாள் யுக்தா... நேற்று மாலை வீட்டுக்குப் போய்ட்டு வரேன்... என்று சென்றவள் இன்னும் வரவில்லை... இவள் படபடப்பாக இருக்கிறாள் என்பது மட்டுமல்ல... இதன்பின் திரும்பவும் எப்போது சந்தர்ப்பம் கிடைக்குமோ... நேற்று இரவு இருவரும் நீண்ட நேரம் கதை பேசி உறங்கியிருக்கலாம்... இந்த சம்யூ ஏன் இப்படி செய்கிறாள்.?? என்ற கேள்வியோடு அவளை எதிர்பார்த்திருந்தாள் கவி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.