(Reading time: 19 - 38 minutes)

'வெறும் கனவுதானே. இதற்கு ஏன் இப்படி பதறுகிறாய்??? அவள் அறிவு சொன்னாலும் மனம் கேட்கவில்லை...'

'குட் மார்னிங் அங்கிள்...' பாத்ரூமுக்கு வெளியே பரத்தின் குரல் கேட்க படாரென கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தவள்... இமை கொட்டாமல் அவன் முகத்தையே பார்த்தபடி நின்று விட்டாள் சில நொடிகள்.

'மார்னிங் அபர்ணா..' என்றான் அவன். அவள் முகத்தில் பரவிக்கிடந்த திகிலை பார்த்தபடியே.

'கு.. குட் மார்னிங்...' என்றாள் அவள். கொஞ்சம் சுதாரித்து இடம் வலமாக தலை அசைத்து கொண்டு தன்னை நிதானப்படுத்திக்கொண்டாள் அபர்ணா. ஏதோ ஒரு குழப்பத்தில் அவள் இருக்கிறாள் என புரிந்த போதும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை பரத்.

அரை மணி நேரம் கடந்திருக்க...

அவனது காரில் அவனது வீடு நோக்கி பயணித்துக்கொண்டிருந்தனர் நால்வரும். அபர்ணா மட்டும் தீராத யோசனையுடனே...

வீட்டு வாசலுக்கு வந்து நின்றது கார். அவனுக்குள்ளே வார்த்தையில் வெளிப்படுத்த மூடியாத பரபரப்பு எழுந்தது நிஜம். பின்னே!!! அவனவள் முதல் முதலாக வீட்டுக்கு வருகிறாள் என்றால்???

மற்றவர்கள் இறங்கிவிட....... இறங்குவதில் கொஞ்சம் தயக்கம் அபர்ணாவுக்கு. வீடு முழுவதும் என் புகைப்படங்களை நிரப்பி வைத்திருப்பானோ??? எல்லாருக்கும் எல்லாம் தெரிந்துவிடுமோ??? எனக்கு தெரிந்தவரை என் புகைப்படம் எதுவும் அவனிடம் கிடையாதே??? மனம் என்னென்னவோ யோசிக்க.. இடையிடையே அந்த கனவும் அவள் கண்முன்னே படமாக விரிந்துக்கொண்டிருந்தது.

அதற்குள் அவள் பக்க கதவை திறந்து சொன்னான் பரத். 'வா அபர்ணா...'

அவன் முகத்தில் பரவிகிடந்த சந்தோஷ ரேகைகளை படிக்க தெரியாதவள் இல்லை அவள். அவனை பார்த்துக்கொண்டே இறங்கினாள் அவள். வீட்டை சுற்றி இருந்த தோட்டத்தில் பார்வையை சுழற்றியேபடியே நடந்தாள் அவள்.

வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கும் போது சொன்னான் அவன் 'வெல்கம் கண்ணம்மா...'.

அந்த 'கண்ணம்மா...' அவனது உதட்டசைவின் அளவில் மட்டுமே இருக்க.... அது கூட அவளுக்கு கேட்டிருக்க வேண்டுமோ என்னவோ. சடக்கென திரும்பி பார்த்தாள் அவனை. அவன் முகத்தில் இருந்த சந்தோஷ சிரிப்பில் எந்த மாற்றமும் இல்லை.

அவள் பயந்ததை போல் கூடத்தில் அவள் புகைப்படங்கள் எதுவும் கண்ணுக்கு தட்டுப்படவில்லை. 'போய் எல்லாரும் குளிச்சிட்டு ஃபிரெஷ் ஆயிட்டு வாங்க சாப்பிடலாம் என்றான் அவன்.'

ஒரு அறைக்குள் போய் புகுந்துக்கொண்டவள் கைப்பேசியை எடுத்து அருணை அழைத்தாள்... . இங்கே வந்திருப்பதை  அவனிடம் சொல்லிவிட துடித்தது அவள் மனம். இன்னமும் பரத்தை பற்றிய எல்லாவற்றையும் அவனிடம் சொல்ல சரியான சந்தர்பம் கிடைக்கவில்லையே??? எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் அவனிடம்!!! முயன்றாள் அவள். ஆனால் அழைப்பு ஏற்க படவில்லை. அவள் மனம் நிலைகொள்ளவில்லை.

அப்போது உள்ளே வந்தாள் அஸ்வினி. இரண்டு நாட்களாகவே நடப்பதை கொஞ்சம் யூகித்துதான் இருந்தாள் அஸ்வினி.

'என்னாச்சு... அருண் ரெண்டு நாளா உன் கிட்டே பேசறது இல்லையா??? ' அபர்ணாவை பார்த்து மிகத்தெளிவாக கேட்டாள் அவள்.

கொஞ்சம் அதிர்ந்து போனாள் அபர்ணா. 'இவள் எப்படி கண்டு பிடித்தாள்???'

'எனக்கு தெரியும். நீ மறுபடி மறுபடி கால் பண்ணிட்டு இருக்கே அவருக்கு. அவர் எடுக்கலை. நீ சொல்லலைனாலும் எனக்கு தெரியும். அதுதான் நடக்குது ரெண்டு நாளா...... நீ ரொம்ப டல்லா ஆயிட்டே  ... திஸ் இஸ் டூ மச் அப்பூ.....'

பதில் பேசாமல் வேறு திரும்பிக்கொண்டாள் அபர்ணா. அருணை எந்த சந்தர்ப்பத்திலும் யாரிடமும் விட்டிக்கொடுத்துவிட தோன்றுவதில்லை அவளுக்கு.

'அருண் என்னை காப்பாத்தி இருக்கார். இல்லைன்னு சொல்லலை. அதுக்கு நாம காலம் பூரா அவருக்கு தேங்க்ஸ் சொல்லணும்.. அது ஒகே..... அதே நேரத்திலே அருண்ன்னு இல்லை... வேறே யார்கிட்டேயும் கூட உன் தன்மானத்தை விட்டு நீ கீழே இறங்குறதிலே எனக்கு உடன்பாடே இல்லை...' தொடர்ந்தாள் அஸ்வினி.

...........................................

'ஸீ.... நமக்கும் நம்மை சுத்தி இருக்கறவங்களுக்கும் நடுவிலே ஒரு பிரச்சனை வந்தா அதை சால்வ் பண்றதுக்கு முதல்லே முன்னாடி வர கை நம்ம கையாதான் இருக்கணும். ரொம்ப கரெக்ட்... பட் அதை மத்தவங்க புரிஞ்சுக்கலைன்னா... திரும்ப திரும்ப அதையே செய்யறது முட்டாள்தனம்.. எப்பவுமே நீயே விட்டுக்கொடுத்திட்டு இருக்க முடியாது.... அவ்வளவுதான்.... பார்த்துக்கோ .'

மெதுவாக நடந்து பாத்ரூமுக்குள் புகுந்துக்கொண்டாள் தங்கை. யோசித்தபடியே அமர்ந்திருந்தாள் அக்கா..

குளித்து விட்டு உணவு மேஜையில் வந்து அமர்ந்தாள் அபர்ணா. பரத் வீட்டில் சமையல் வேலை செய்யும் லலிதா எல்லாருக்கும் பரிமாற ஆரம்பிக்க..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.