(Reading time: 19 - 38 minutes)

'லிதா...' என்றான் பரத். 'நீங்க உள்ளே வேறே ஏதாவது வேலை இருந்தா பாருங்க நான் இதை பார்த்துக்கறேன்....'

லலிதாவின் இதழ்களில் சின்ன புன்னகை. அஸ்வினியையும் அபர்ணாவையும் மாறி மாறி பார்த்துவிட்டு நகர்ந்தாள் அவள். அவள் ஏன் அப்படி பார்த்தாள் என புரியவில்லை அபர்ணாவுக்கு.

அவன் அவளுக்கு பரிமாற, அவனது மனமும் எண்ண ஓட்டங்களும் புரியாமல் இல்லை அவளுக்கு. அவள் தலை நிமிர்த்தாமல் சாப்பிட்டுக்கொண்டிருக்க..

'சாப்பாடு பிடிச்சிருக்கா அபர்ணா...' திடீரென அவன் குரல் இதமாக அவள் செவிகளை வருட கொஞ்சம் குலுங்கி நிமிர்ந்தாள். 'இதெல்லாம் நானே பண்ணது...' என்றான் அவன் புன்னகையுடன்.

'ஆங்.??? ம்??? நல்லாருக்கு..' அவள் தடுமாறி சொல்ல... அவன் விழிகளில் வானத்தையும் பூமியையும் ஒரு சேர வென்று விட்ட மகிழ்ச்சி. தனது தட்டிலும் உணவை போட்டுக்கொண்டு அவள் அருகில் அமர்ந்துவிட்டிருந்தான் அவன்.

சில நொடிகள் கழித்து மெதுமெதுவாக விழி நிமிர்த்தினாள் அபர்ணா. அவன் கண்கள் சட்டென அவளை சந்திக்க... புன்னகைத்தான் அவன். உடல் மொத்தமும் குலுங்கியது அவளுக்கு. ஏனோ அந்த கனவு மறுபடியும் கண் முன்னே வந்து போனது. பட்டென பார்வையை தாழ்த்திக்கொண்டாள் அபர்ணா.

ன்று மதிய உணவிற்கு பிறகு அப்பாவும் அஸ்வினியும் உறங்கிவிட பரத் வீட்டு கூடத்தில் அமர்ந்து ஏதோ ஒரு பத்திரிக்கையை புரட்டிக்கொண்டிருந்தாள் அபர்ணா. மனம் அதில்  லயிக்கவில்லை என்பதுதான் உண்மை. பரத் எங்கேயோ வெளியில் சென்றிருந்தான். அப்போது அங்கே வந்தாள் பரத் வீட்டில் வேலை செய்யும் லலிதா.

'மேடம் என்னோட ஒரு நிமிஷம் மேலே வரீங்களா???'

'எதுக்கு???'

'நான் உங்களுக்கு ஒண்ணு காட்டணும் வாங்க..' அவள் கையை பிடித்து அழைத்து சென்றாள் மாடியில் இருந்த அந்த அறைக்குள்!!! அது பரத்தின் தனிப்பட்ட அறையாக இருக்க வேண்டும். நின்றே விட்டாள் அபர்ணா. காலையில் அவள் நினைத்துக்கொண்டே வந்ததுதான்!!!

அந்த அறையில் ஆங்காங்கே அவள் புகைப்படங்கள்!!!. சுவற்றில் பெரிதாய்... கடிகாரத்தின் நடுவில்... மேஜையின் மேலே கட்டிலின் அருகில்... கண்களை மூடிக்கொண்டு ஒரு பெருமூச்சை எடுத்துக்கொண்டாள் அபர்ணா.

இது நீங்க தானா???........ இது லலிதா.

'ஆம் என தலை அசைத்தாள் அபர்ணா...'

'இது நீங்களா உங்க தங்கச்சியான்னு எனக்கு சந்தேகம். ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கீங்களா அதுதான். சார்க்கு உங்களை ரொம்பவும் பிடிக்கும். பாருங்க எங்கே திரும்பினாலும் நீங்கதான். இந்த ரூமுக்குள்ளே யாரையும் விட மாட்டார். நான் மட்டும் க்ளீன் பண்ண அப்பப்போ வருவேன். அப்போ பார்த்திருக்கேன். அதான் காலையிலே உங்களை பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா ஆயிடுச்சு... நீங்க சீக்கிரமா சாரை கல்யாணம் பண்ணிட்டு இந்த வீட்டுக்கு வந்திடுங்க...'

அவளிடம் என்ன சொல்வதாம். புன்னகையையே பதிலாக்கினாள் அபர்ணா.

இந்த புகைப்படம்..... அவள் கோவையில் பாட்டி வீட்டில் இருந்த போது வேண்டாமென கிழித்தெறிந்த புகைப்படம். அது இவன் கை சேர்ந்திருக்கிறதா??? அதை வைத்தே இத்தனை புகைப்படங்கள். ஒரு நீண்ட மூச்சுடன் அவற்றை எல்லாம் பார்த்துவிட்டு திரும்ப அங்கே நின்றிருந்தான் பரத்.

அவன் பார்த்த பார்வையில் லலிதா அங்கிருந்து சட்டென நகர்ந்து வெளியே ஓடி இருந்தாள். அந்த கனவு மறுபடி மறுபடி அவளுக்குள் சுழல அவனுருகில் வந்தாள் அபர்ணா. அழகான புன்னகையுடன் நின்றிருந்தான் அவன்.  

'ஏன் பரத் இப்படி எல்லாம் பண்றீங்க???' என்றாள் குரலில் தவிப்பு மேலிட

'ஏன்னு கேட்டா என்ன சொல்றது அபர்ணா' என்றான் நிதானமாக. 'எனக்கு உன் கேள்வி புரியலை. ஸீ... இது கண்டிப்பா உன்னை இம்ப்ரெஸ் பண்றதுக்காக பண்ணது இல்லை. இதுதான் என் உலகம். இதிலேதான் பல வருஷமா வாழந்திட்டு இருக்கேன்.'

'நான் அதுக்கு சொல்லலை.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு பரத். எனக்கு... எப்படி சொல்றதுன்னு தெரியலை... காலையிலே இருந்தே எனக்கு மனசு சரியில்லை...

'ஏன்டா...' அவன் குரல் இறங்கியது.

'எனக்கு.... இன்னைக்கு காலையிலே ஒரு கனவு....' என்றாள் கண்களை மூடிக்கொண்டு . எனக்கும் அருணுக்கும் கல்யாணம் ஆகுறா மாதிரி... அதுக்கு அப்புறம் நீங்க தற்கொலை...' அதை சொல்லும்போதே நடுங்கியது அவள் குரல்.

பார்வையில் வியப்பும் இதழ்களில் சின்ன புன்னகையுமாக அவளையே பார்த்திருந்தான் பரத். சட்டென கண் திறந்து அவன் முகம் பார்த்தாள் அவள்.

'பரத். உங்களை கனவிலே அப்படி பார்த்தது எனக்கு எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. ப்ளீஸ் பரத்... உங்களுக்கு அப்படி எல்லாம் எதுவும் ஆக கூடாது. நீங்க ரொம்ப நல்லவங்க... உங்களுக்கு அப்படி ஏதாவது ஒண்ணுன்னா என்னாலே தாங்க முடியாது. நான் ரொம்ப அழுவேன் பரத்.....காலம் பூரா அழுவேன்... ப்ளீஸ்...பரத்....' அவள் சொல்லிக்கொண்டிருக்க தன்னாலே அவள் கண்களில் கட்டிக்கொண்டது கண்ணீர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.