(Reading time: 8 - 15 minutes)

ருமை கலாய்க்கிறியா என்னை. இரு இரு நீயும் பேசுவ தான அவர்கிட்ட. அப்போ வச்சுக்குறேன் உன்னை”

“ஹாஹா”

“என்ன சிரிக்குற?”

“கல்யாணமே பிடிக்கலையாம். இதுல போன்ல வேற பேசுவாங்களா? சித்தப்பாக்கு மேரேஜ் முன்னாடி போன்ல பேசுறதெல்லாம் பிடிக்காது. அதை சொல்லி நான் எஸ்கேப் ஆகிடுவேன்ப்பா. நான் எல்லாம் பேசமாட்டேன்”

“அதையும் பார்ப்போம். நீ பேசதாண்டி போற, என்னை விட அதிகமா. இந்த லவ் படுத்தும் பாடு உனக்கு இனி தான் புரியும்” என்றபடி ஏதோ அறுவை லெக்சர் கொடுக்க வந்தவளை தடுத்து,

“அம்மா தாயே போதும் உன் லவ் புராணம். எனக்கு லவ் வந்தா அப்போ பார்த்துக்கலாம். இப்போ வேற ஏதாச்சும் பேசுறியா?”

“இல்லடி நான் கிளம்பணும். இவர் வேற போன் பண்ணிட்டே இருக்காரு. அம்மாவும் தேடுவாங்க. நான் கிளம்புறேன்” என்றபடி கிளம்ப எத்தனித்தாள்.

“ஓ அப்படியா சரி ம்ம். மேரேஜ் ஆகிட்டா என்னை மறந்துற மாட்டியே” சிறு கலக்கத்துடன் கூறினேன்.

“சீ லூசு அதெப்படி மறக்க முடியும்? எனக்கு அக்கா தங்கச்சி கிடையாது. கூடப்பொறந்தவ மாதிரி உங்கிட்ட தான் பழகுறேன். மேரேஜ் ஆனாலும் எப்பவும் உங்கிட்ட டச்ல இருப்பேன் சரியா? இப்படி மண்டு மாதிரி இனி கேட்காத”

“சரி இந்த அலையன்ஸ் ஓகே ஆகிட்டு. சோ எப்படியும் டென் டேஸ்ல என்கேஜ்மென்ட் வைப்பாங்க. அதுக்கும் வந்துருடி. நீ எங்கூடவே இருக்கணும் சரியா?”

“இல்லடி வர சான்ஸஸ் இல்ல. இன்னும் டூ வீக்ஸ்ல மேரேஜ், வெளிய அனுப்ப மாட்டாங்க. என்னால என்கேஜ்மென்ட் வரமுடியாது. என்கேஜ்மென்ட்க்கு வர முடியாதுன்னு தான் இப்போ வந்தேன். சாரி செல்லம். கண்டிப்பா உன் மேரேஜ்க்கு ஜோடியா வந்து ஆசீர்வாதம் பண்ணுறேன். நீ ஒழுங்கா என் மேரேஜ்க்கு வந்து சேரு சரியா?”

“உன் மேரேஜ்க்கு நான் இல்லாமலா? என்ன டூ டேஸ்க்கு முன்னாடியே உன் வீட்டுக்கு வந்து உங்கூட ஸ்டே பண்ணி உனக்கு மெஹந்தி போட்டு அலங்காரம் பண்ணி, உன்னை நல்லா கிண்டல் பண்ணி, நிறைய போட்டோ எல்லாம் எடுத்து, உங்கூட டைம் ஸ்பெண்ட் பண்ண ஆசப்பட்டேன். மேரேஜ் ஆகிட்டா நீ மிஸஸ் அமிழ்தினி மது ஆகிடுவல்ல. மிஸ் அமிழ்தியா நீ இருக்குற நிமிஷத்துல உங்கூட இருக்கணும்னு நினைச்சேன். பட் அது முடியாது. மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிட்டு. சோ கண்டிப்பா வீட்டுல அனுப்ப மாட்டாங்க”

“சரி விடு. ஃபீல் பண்ணாத. கூல். நீ மட்டுமா நானும்தான் ஆசப்பட்டேன். உன் மேரேஜ்க்கும் என்னால உங்கூட இருக்க முடியாது தான? நாம ஆசப்படுற எல்லாம் நடக்கவா செய்யுது? நான் கூட இன்ஜினியர் ஆகணும்னு ஆசப்பட்டேன்” என்று ஆரம்பித்து விட்டாள்.

“அய்யோ சாமி உனக்கு கோடி கும்பிடு. தயவு செஞ்சு உன் ஃப்ளாஷ் பேக்ஸ் ஸ்டாப் பண்ணு. நீ ஆரம்பிச்சா நிறுத்தமாட்ட. மிஸ்டர் வினோதன் உன் பேச்சை எப்படித்தான் சகிச்சுக்கிறாரோ. பாவம்டி மனுஷன்”

“பாத்தியா இப்படி சொல்லுற. என் பேச்சை வினோத் எவ்வளவு ரசிப்பார் தெரியுமா? நீ ரசிக்க தெரியாத பக்கி போடீ பிசாசு” என்று உதட்டை சுழித்தபடி முகம் திருப்பிக்கொண்டாள்.

“சரி சரி சும்மாதான. நான் பாவமில்லையா. நானும் எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரி நடிக்கிறது?”

“ஹேய் உன்ன” என்றபடி அடிக்க பொருள் தேடியவளை சமாதானம் செய்து

“சரி கூல் நீ கிளம்பு. அப்புறம் உன் வுட்பீ போன் வந்துரும்”

“சரிடி பை டேக் கேர். உன் பேர் தெரியாத வுட்பீய கேட்டதா சொல்லு. நான் கிளம்புறேன்” என்றபடி விடை பெற்று சென்றாள்.

வள் சென்ற பிறகு, கசகசப்பாக இருக்கிறதென நகை எல்லாம் கழற்றிக்கொண்டிருந்தேன்.

அங்கு வந்த ரமேஷ்,

“அக்கா என் ஃப்ரெண்ட் உங்கிட்ட பேசணுமாம்”

“எந்த ஃப்ரெண்டுடா?”

“பேசு தெரியும்”

போனை வாங்கி காதில் வைத்தபடி, “ஹலோ” என்றேன்.

“ஹலோ” என ஒரு ஆணின் குரல் வந்தது.

“நான் சந்தோஷ் பேசுறேன்”

“சந்தோஷா யாரு சந்தோஷ்?” என குழம்பியவளாக

“சந்தோஷ்ன்னு உனக்கு ஃப்ரெண்ட்ஸ் கிடையாதே. யாரு லைன்ல பேசுறதுன்னு சொல்லு”  என்றேன் கடுப்புடன் ரமேஷிடம்.

“அடிப்பாவி அக்கா. கட்டிக்கப்போற மாப்பிள்ளை பேர் தெரியாமதான் மண்டையை ஆட்டுனியா. மாப்பிள்ளை லைனில் இருக்குறார் லூசு பேசு” என்றான் கிசுகிசுப்பாக.

“மாப்பிள்ளையா? அட லூசே” என்றபடி டக்கென்று லைனை கட் செய்துவிட்டேன்.

“லூசாடா நீ. அவருக்கு ஏன் போன் பண்ணின?”

“போக்கா, நீ தான் லூசு. படிச்சிருக்கியே தவிர சரியான பட்டிக்காடு நீ”

“யாரு நான் பட்டிக்காடா இரு இரு உன்னை என்ன பண்ணுறேன் பாரு” என்றபடி அவனை அடிக்க துரத்தி வேகமாய் ஓடி, கவனிக்காமல் யார் மீதோ மோதி கீழே விழ இருந்தவளை தாங்கி இருந்தது ஒரு கரம்.

இதயம் படபடப்பாக என்னை தாங்கியது யார் என முகம் பார்க்கையில், மந்தகாச புன்னகையுடன் இமைக்க மறந்து என்னைப் பார்த்துக்கொண்டிருந்தான் சந்தோஷ்.

தொடரும்

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1065}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.