(Reading time: 14 - 28 minutes)

21. அனு என் அனுராதா - VJ G

Anu en Anuratha

ரு வாரம் ஓடி விட்டது சிவாவின் கல்யாணம், கோவிலிலே வைத்துக் கொண்டனர் எல்லோரும் வந்தார்கள், ரஞ்சனா ரெண்டு நாள் முன்னாடியே ஹெல்ப்க்கு போய் விட்டாள்.

சுந்தரமும் ராதாவும் தாலி கட்டும் நேரத்துக்கு வந்தனர்

நன்றாக கல்யாணம் நடந்து முடிந்தது

ஒரு மாதம் ஆகியது ராஜேந்திரன் உடம்பு சரியாகி வீட்டுக்கு கூட்டி வந்தனர், நன்றாக தேறி வந்தார், தினம் காலையிலும், மாலையிலும் வாக்கிங் போக காரில் போய் பீச்சில் நடந்து விட்டு வருவார்கள், காலையில் சுந்தரதுடனேயே போவார்கள், ரம்யாவும், ரஞ்சனாவும், ஆனந்தனுடன் டென்னிஸ் ஆட போவார்கள் சீனுவும் அங்கே வந்து அவர்களுடன் சேர்ந்துக் கொள்வான், நிறைய கிண்டல் செய்துக் கொள்வார்கள் எல்லாரும், வீக்கெண்டில் இவர்கள் நாலு பேரும் சினிமா, பிக்னிக் என்று கிளம்பி விடுவார்கள், இவர்களோடு சிவாவும், சுமதியும் சில சமயங்கள் சேர்ந்து கொள்வார்கள்.

சுந்தரம், ராஜேந்திரன் தேறியவுடன் ரம்யா, ஆனந்தன் கல்யாணத்தைப் பற்றி பேசினார்,

 ‘நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் எனக்கு சரி’

‘அவள் எவ்வளவு வேண்டுமானாலும் படிக்கட்டும் ஆனால் சின்ன பசங்க சீக்கிரம் கல்யாணம் செய்துவிட்டால், நல்லது’ என்றார் சுந்தரம்

‘சரி’ என்றார்

திடீர் என்று ராதா வாஷ் பேசினுக்கு ஓடினாள், என்னவென்று சுந்தரம் பின்னாடியே ஓடினார் அங்கு அவள் வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள்,என்ன ஆச்சும்மா என்றார் சுந்தரம்

‘தெரியலை?’ என்றாள்,

‘ஆனந்தா,’ என்று கூட்டார்,

‘என்ன டாடி’ என்று வந்தான் ஆனந்தன், அம்மா என்னம்மா ஆச்சு ?

ஆனந்த் ‘கால் டாக்டர் அஸ்வினி,’ உடனே வரச் சொல் என்றார்

அவன் போன் புக்கை பார்த்து கால் செய்தான், சுந்தரம் பேரைச் சொன்னவுடன் இதோ இன்னும் இருபது நிமிஷத்தில் அங்கு இருப்பேன் என்றாள் டாக்டர்

சுந்தரம் ‘இஸ் தட் எ பேபி?’ என்று கேட்டார் ராதாவிடம், அவள் தலை குனிந்தாள்

‘நாம் இதைப் பத்தி ஏற்கனவே பேசிவிட்டோம் அனு, ஐ டூ நாட் வான்ட் திஸ் சைல்ட். யு நோ, வாட், ஐ வெண்ட் த்ரூ, நான் இதுக்கு ஒத்துக்க மாட்டேன், நமக்கு மூனு குழந்தைகள் போரும், ரெண்டு பொண்ணு, ஒரு பையன், என்ன சொல்லறே, ப்ளீஸ் மா, இப் திஸ்……இட், யு அக்ரீ டு அபார்ட் இட் ,ப்ளீஸ் ஐ வான்ட் யு......,’ என்று அழுதார்,

வெளியே இருந்து ஆனந்தன் கேட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கும் கண்ணிலிருந்து கண்ணீர்,

அங்கே ஓடி வந்தாள் சாந்தி, ‘என்ன ஆச்சு கண்ணா? என்ற அவளின் கையை பிடித்து அழைத்துக் கொண்டு போனான்

‘ஒண்ணுமில்லை பாட்டி,’ என்றானே தவிர அவன் கண்களிலிருந்து தண்ணி வந்துக் கொண்டிருத்தது

‘என்னம்மா என்ன ஆச்சு? ராதா வாந்தி எடுத்தாளா?’ அவள் அம்மா சந்தோஷத்துடன்

ஆனந்தன் ஒன்றும் சொல்லாமல் இருந்தான்

‘வில் யு ப்ளீஸ் ப்ராமிஸ் மீ தட் யு அக்ரீ டு அபார்ட் திஸ்?’ என்று கேட்டார் ராதாவிடம்

‘சுந்து ப்ளீஸ் ட்ரை டு அண்டர்ஸ்டாண்ட்’

டாக்டர் பெல் அடித்தது கேட்டது

ஆனந்த் போய் கதவைத் திறந்தான் டாக்டர் வெளியே நின்றிந்தாள், ‘வாங்க’ என்று கூட்டிக் கொண்டு தன் அம்மாவின் ரூமுக்குள் கூட்டிச் சென்றான் ஆனந்தன்

சுந்தரம் தன் மனைவியை காண்பித்து செக் பண்ணுங்கள் என்றார், முகத்தை இருக்கமாக வைத்துக் கொண்டு

டாக்டர் செக் செய்துவிட்டு ‘வாழ்த்துக்கள்,’ என்றாள் டாக்டர் அஸ்வினி

ஆனால் சுந்தரம் கேட்டார், ‘ஐ வான்ட் டு அபார்ட் திஸ் சைல்ட், ப்ளீஸ் டாக்டர், என்று அழுதார்,’ ராதாவின் கண்களிலும் கண்ணீர், ஆனந்தனும் அப்பாவின் தோளைப் பிடுத்து அழுத்தி ‘காம் டவ்ன் டாடி’ என்றான்

‘என்ன சொல்கிறார் உங்க அப்பா’ என்று கேட்டாள் டாக்டர்

அவன் சொன்னான் ‘மை டாடி இஸ் எ மல்டி மில்லியனர், ஆனால் அவர் வெல், ஐ தின்க் வி டூ நாட் ஹவ் டு டாக் அபௌட் இட் என்னாலே இத பத்தி பேச முடியாது என்னாலே சொல்ல முடியாது,’ என்றான் ஆனந்தன்

‘என்ன விஷயம் சுந்தரம் சார்?’ என்றாள் டாக்டர்

ஆனால் சுந்தரம் சொன்னார்,’ இந்தக் குழந்தையைக் கலைத்து விடுங்கள், ‘

‘எனக்கு இந்த குழந்தை வேண்டாம்’ என்றார் சுந்தரம்

‘உங்க மனைவி என்ன சொல்றாங்க? ‘என்று கேட்டார் டாக்டர்

‘இல்லை டாக்டர், என் கணவருக்கு வேண்டாம் என்றால் எனக்கும் வேண்டாம்,’ என்றாள் ராதா, எனக்கு என் கணவர்தான் முக்கியம் என்றாள்

‘என்னம்மா சுந்து சரியா நீங்கதாம்மா எனக்கு முக்கியம்’ என்றாள் ராதா

சுந்தரம் அவளை தாவிஅனைத்துக் கொண்டு,’ என் கண்ணம்மா எனக்கு நீ தான் முக்கியம்,’ என்றார்

‘சரிங்க’ என்றாள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.