(Reading time: 14 - 28 minutes)

னந்தன் அப்பாவிடம் சொன்னான், 'நாம நம்ம ஹாஸ்பிடலுக்கு போய் அங்க ஒரு ஸ்பேஷலிஸ்ட் கிட்ட போய் ஒரு கௌன்செலிங் பண்ணுவோம் பிறகு டிசைட் பண்ணுவோம்'

'இல்லைடா நான் டிசைட் பண்ணியாச்சு ஏற்கனவே '

'சரி டாடி, அப்பகூட அப்பாய்ன்ட்மென்ட், வாங்கணும் இல்லையா? நேரே போவோம் ஒரு கௌன்செலிங் போவோம், அப்புறம் அப்பாய்ன்ட்மென்ட் வாங்குவோம், என்ன சொல்கிறாய்'

'ஆனந்தா டாடியை கன்புயுஸ், பண்ணாதே'

‘நான் கன்பியுஸ் பண்ணலே மாம், டாடி மனச சரி பண்ணறேன்,’

அவர்கள் காலை டிபன் முடித்துக் கொண்டு ஹாஸ்பிடல் சென்றார்கள்

அங்கு ஸ்பெஷலிஸ்ட்டை பார்த்தார்கள்

எல்லா விஷயத்தையும் டாக்டரிடம் சொன்னவுடன், 'என்ன சுந்தரம் சார் நீங்கள் ரொம்ப ஆப்டிமிஸ்டிக் என்று நினைத்தேன், எப்படி? நீங்கள் இந்த மாதிரி நினைகிறீர்கள், ஐ வில் காரண்டீ, தட் நத்திங் வில் ஹாப்பேன் டு யுவர் வைப், நானே டெலிவரி பார்க்கிறேன், நான் கூடவே இருக்கிறேன், இப்போலேந்தே நானே உங்க மனைவியை பார்கிறேன், நான் உங்க வீட்டுக்கே வந்து பார்கிறேன். கவலையே படாதீங்க, டெக்னாலோஜி எவ்வளவு அட்வான்ஸ் ஆகி இறுக்குது, பி ஆப்டிமிஸ்டிக், ஒன்றும் ஆகாது, அதனால் அபார்ட் எல்லாம் பண்ணவேண்டாம், என்று கூறி அவரை அங்கு இருக்கிற சைகாலாஜிஸ்ட் கிட்ட போகச் சொன்னார், உங்க மன பாரத்தை இப்பவே குறைத்து விடுங்கள், வீட்டுக்கு போகும் போது மனசுல சஞ்சலம் இல்லாமல் போங்க’

வெளியே வந்து இருவரும் கிளம்பினர்,' வழியில், ரம்யாவையாவும்,ரஞ்சன்னாவையும், காலேஜிலிருந்து கூட்டிக்கொண்டு போகலாமா?' என்று கேட்டான் ஆனந்தன்

'சரி'

ரஞ்சனா என்னெனவோ பேசினாள், ஆனால் சுந்தரத்திற்கு எதிலும் பிடிப்பில்லை வீட்டுக்கு சென்றவுடன், நேரே தன் மனைவிக்கு.

மனைவியைப் பார்க்க அவள் ரூமுக்குச் சென்றார், அவளிடம் சென்று 'சாரி அனு, நான் என்னைப் பத்தியே நினைத்தேனே தவிர உன்னைப் பத்தி யோசிக்கவே இல்லை சாரி' என்றார்

'இல்லவே, இல்லை நீங்கள் என்னைப் பத்தி யோசித்துதான் அப்படி பேசியிருக்கிறீர்கள் அதனால் நீங்கள் என்ன முடிவெடுத்தாலும் நான் கேட்கிறேன்'

‘சரி, கடவுள் மீது பாரத்தைப் போட்டு நாம் இந்தக் குழந்தையை வைத்துக் கொள்வோம் சாரி நான் அபார்ட் பண்ணுவதைப் பற்றி பேசியிருக்கக் கூடாது’ என்று மபடியும் புலம்பினார்

ஆனந்தன் கேட்டான்,’ நாமெல்லாம் எங்கேயாவது பிக்னிக் போகலாமா?’

‘சுந்தரமும் போகலாம்’ என்றார்

ஒரு மாதத்தில் ஆனந்துக்கும், ரம்யாவுக்கும் கல்யாணம் செய்து வைத்தார்கள், சுந்தரம் நிறைய நகை வாங்கிப் போட்டார், கிராண்டாக கல்யாணம் செய்து வைத்தார், எக்ஸ்போர்ட் டிவிஷனுக்கு அவனை MD ஆக்கினார், ஆனந்தும், ரம்யாவும் சேர்ந்து அங்கேயே கம்பனியை பார்த்துக் கொண்டனர்

ராதாவுக்கு மூன்று மாதம் ஆனபோது ஸ்கேன் செய்தார்கள், அதில் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் என்று தெரிந்தது, சந்தோசம் ஒரு புறம் இருக்க, கொஞ்சம் கலக்கமாகவும் இருந்தது சுந்தரத்திற்கு

ஒன்பது மாதம் ஆனவுடன் சுந்தரம் நாம் ஹாஸ்பிடல் அபர்ட்மெண்டில் இருக்கலாம் என்று அங்கே போய்விட்டார்,பெண்டாட்டியை விட்டு நகரவில்லை, டெய்லி டாக்டர் வந்து செக் செய்து விட்டு போனார். பத்து நாளில் வலி எடுத்தது, உடனே அட்மிட் செய்து விட்டார், அவர் டெலிவேரிக்கு கூடவே இருந்தார், அவள் வலி எடுத்தபோது டாக்டரிடம்

‘பேசாம சர்ஜெரி பண்ணிடலாமே’ என்றார் சுந்தரம்

டாக்டர்,’ இல்லை நார்மல் டெலிவரி ஆகிடும் ஒன்னும் ப்ராப்லம் இல்லை அதனால் சர்ஜெரி போகவேண்டாம்,’ என்றார்

சுந்தரமோ 'என்னால் தாங்க முடியவில்லை அவள் படும்

வலி யும் வேதனையும்'

'பரவாயில்லை இது பெண்களுக்கு ஒரு சுகம் சுந்தரம்'

பேசிக் கொண்டிருந்தபோதே வீல் என்று கத்தல், குழந்தையின் தலை தெரிந்தது, டாக்டர் சுறுசுறுப்பானார், எல்லோரும் பரபரப்பானார்கள், சுந்தரம் உடம்பு இருகினார்

அடுத்த ஒரு மணிக்குள் இரண்டு குழந்தையும் வெளியே வந்தார்கள், ராதா ரொம்ப டயர்ட் ஆகிவிட்டாள் அவள் பக்கத்திலேயே இருந்தார், டாக்டர் சொல்லியும் இல்லை நான் இங்கேயே இவளுடந்தான் இருப்பேன் என்றார், வெங்கடேசனையும் அவர் மனைவியையும் முன்னாடியே வரவழைத்தார்,

குழந்தைகள் ரொம்ப அழகாக இருந்தார்கள் ஒரு பெண் ஒரு பையன்’ என்ன மேடம் எப்படியிருக்கிங்க?’ என்று விசாரித்தார் மனைவியிடம்

எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது எனக்கு,’ இந்த ரெண்டு பிஞ்சுகளும் எவ்வளவு அழகு பார் என்றார் சுந்தரம் கண்களில் தலும்பியிருந்த கண்ணீருடன், நீ எவ்வளவு வலியுடன் கஷ்டப் பட்டாய், ‘

‘அதெல்லாம் இந்த அழகான குழந்தைகளையும், இந்த பெரிய குழந்தையை பார்த்தவுடன் எல்லாம் பஞ்சாய் பறந்து போச்சு’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.