(Reading time: 14 - 28 minutes)

வள் சொன்ன அந்த பெரிய குழந்தை என்ற வார்த்தையைக் கேட்டு பூரித்துப் போய் அவளை அப்படியே அனைத்து முத்தம் கொடுத்தார்,

‘அப்பா என்ன இது இன்னொன்றுக்கு ஏற்பாடு நடக்கிற மாதிரி இருக்கு’ என்று ரஞ்சனாவின் குரல் கேட்டவுடன் சுந்தரம் திரும்பி பார்த்து 'ஏ வாலு நீ வந்துட்டியா வரச்சேயே என்னை வம்புக்கு இழுத்துட்டு வரே’

‘இத பாரு உனக்கு போட்டியா ரெண்டு வாலுங்க, உன்னை என்ன பாடு படுத்தப் போறாங்க பாரு’

‘இவருக்கு நான் பாடு படறதுல என்ன குஷி அப்பப்பா....’

எல்லோரும் அங்குதான் இருந்தனர், ரெண்டு குழந்தைகளையும், ராதாவையும் மாத்தி மாத்தி கவனித்தனர்

ராதா, குழந்தைகளும் வீட்டுக்கு வந்தனர், அவர்களுக்கு பேர் வைக்கும் பங்க்ஷன்

‘அஜய், அபூர்வா’ என்று பெயர் வைத்தார்கள் எல்லோரும் சந்தோஷத்துடன் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துக் கொண்டிருந்தனர்

அப்போது சுந்தரம் சீனுவிடமும், ரஞ்சனாவிடமும், 'அடுத்த வாரம் உங்களுக்கு கல்யாணம் முடித்துவிடலாம் என்றிருக்கிறேன், என்ன சொல்றீங்க?' என்று கேட்டார்.

‘சரி மாமா ‘என்றான் சீனு

ரஞ்சனா சடக் என்று சீனுவைப் பார்த்தாள், அவன் அவளைப் பார்த்து சிரித்தான், அவன்தான் அவளையே சுந்தரத்தை இனிமே நீ அப்பான்னு கூப்பிடு உங்கள் பேரில் அவருக்கு ரொம்ப பிரியம் வைத்திருக்கிறார் என்று இப்போ அவரை மாமா என்று கூப்பிட்டு அவரை பெருமை படுத்தினான்

சுந்தரம் அவனையும் ரஞ்சனாவையும் இழுத்து கட்டிக் கொண்டார்

அவர்கள் கல்யாணமும் முடிந்தது , ஆனந்தனும், ரம்யாவும் அமெரிக்கா கிளம்பி போனார்கள், ராதா அவனை போக வேண்டாமென்றாள், சுந்தரம்தான் வேண்டாம் அவர்கள் படிப்பை தொடரட்டும், நீ முட்டுகட்டையாய் இருக்கக் கூடாது என்று சொன்னார்

அவர்கள் கிளம்பி போனவுடன், ராதா சுந்தரத்தின் மார்பில் சாய்ந்து கொண்டிருந்தாள், அவர் நினைத்துக் கொண்டார் இந்த வாழ்வு தான் எதிர்பார்க்காத ஒன்று இந்த பாசம், நேசம்,அரவணைப்பு, காதல், கொஞ்சல்,எல்லாம் ஒரு மனுஷனுக்கு எத்தனை ஒரு நிறைவான வாழ்வை கொடுக்கிறது, ஒவ்வொரு மனிதனும் அவன் மனைவியை நேசிக்கவேண்டும், காதலிக்க வேண்டும், பாசத்தை கொட்டவேண்டும், அதைப் புரியப்படுத்த வேண்டும், எத்தனை வயதானாலும் அதே நேசத்துடனும், காதலுடனும் ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்துகொண்டு தங்கள் வாழ்வை என்றென்றும் மலர வைத்துக் கொள்ளவேண்டும்,என்று நினைத்துக் கொண்டு, ராதாவை இறுக்கி அனைத்துக் கொண்டு அவளின் நெற்றியில் முத்தம் கொடுத்து ‘எனக்கு இந்த அருமையான வாழ்வை கொடுத்ததுக்கு தேங்க்ஸ் டு யு கண்ணம்மா,’ என்றார் சுந்தரம் அவளும் அவரை இறுக்கிக் கட்டிக் கொண்டு ‘தேங்க்ஸ் டு யு, நாம ரெண்டு பேரும் கடவுளுக்கு நன்றி சொல்லணும்’ என்று அவள் அவரிடம் இழைந்து, குழைந்தாள்.

முற்றும்!

எல்லோருக்கும் வணக்கம்.

அனு என் அனுராதா என்னோட முதல் கதை. இந்த கதை எழுதும் போது எனக்கு தெரியாது நான் இப்படி ஒரு கதை எழுவேனென்று.... இது ஒரு வித்யாசமான கதை, இதே மாதிரி கதைகள் ஏற்கனவே வந்ததுண்டு, ஆனால் என் முதல் கதை ஒரு வித்யாசமான காதல் கதை, இந்த கதையை நிறைய பேர் ஒவ்வொரு வாரமும் உங்கள் வேலைகளுக்கு நடுவில் என் கதையை படித்து நல்ல நல்ல காமெண்ட்ஸ் கொடுத்தக்கு ரொம்ப நன்றி ......

எந்த உறவையும் கொச்சை படுத்த எழுதியது இல்லை இந்த கதை.....

ராதா கேட்ட படி அந்த காதல் உண்மை காதல் என்றால், ஒன்று அவர்கள் தனிமையாகவே இருந்து தன் வாழ்க்கையை பாழடித்துக் கொள்வார்கள், இல்லையென்றால் தற்கொலை செய்துக் கொள்வார்கள், என்ன எல்லா காதலர்களுமா அனுவை போல மறு பிறவி  எடுத்து வருவார்கள், எவ்வளவு காதல் ஜாதி மதம் என்று காரணம் காட்டி பிரித்து வைக்கிறார்கள், எவ்வளவு பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் இல்லை விதியே என்று வேறொருவரை கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.

நான் எழுதும் கதை முற்றிலும், கற்பனை கதை. ஆம்! கற்பனை கதையே, இவர்களை உறவு சொல்லி பிரித்திருந்தால் படிப்பவர் எல்லோருக்கும் மனது வருத்தமாக  இருக்கும், எனக்கும்  வருத்தமாக  இருக்கும், அதான், ரம்யாவையும் ஆனந்தனையும் சேர்த்து வைக்க முடிவு செய்தேன், இந்த முடிவு யார் மனதையேனும் பாதித்திருந்தால் தயை கூர்ந்து  என்னை மன்னியுங்கள்.

எனக்கு இந்த ஆதரவை கொடுத்த சில்சீ குழுவினருக்கும், எனக்கு நல்ல காமெண்ட்ஸ் கொடுத்து என் மனதை குளிர வைத்து என்னை ஊக்குவைத்த சில்சீ ரீடர்ஸுக்கும் என் மனமார்ந்த  நன்றி நன்றி நன்றி.

Episode # 20

{kunena_discuss:1005}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.