(Reading time: 14 - 28 minutes)

வர்களை தனியே விட்டு டாக்டரும் ஆனந்தும் வெளியே போனார்கள்

‘என்ன ஆச்சு ஆனந்தன்?’ என்றாள் டாக்டர் அஸ்வினி

அவன் முழு கதையையும் சொன்னான், அவளுக்கே ஆச்சர்யம்! ‘என்ன இது பியாண்ட் சைன்ஸ்,’ என்று சொல்லி ஆனாலும் ‘இவ்வளவு பேர் பிள்ளை பெத்துக்கறாங்க , அவங்கல்லாம் செத்துபோயிடல்ல, அதனால எப்போதும் அதே நடக்கும் என்று இல்ல, இப்படி இருந்தா யாரும் குழந்தை பெத்துக்க மாட்டாங்க, எவ்வளவோ பேருக்கு குழந்தை செத்துப் போயிருக்கு அதனாலே அவர்கள் அதுக்கு அப்புறம் குழந்தை பெத்துகாமே இல்ல , ஸோ உங்க அப்பாக்கு எடுத்துச் சொல்லுங்க ‘என்று கிளம்பி போய்விட்டாள்.

டாக்டர் போனவுடன் ஆனந்தன் ரொம்ப யோசித்தான், அப்பாவோட பயம் அவனுக்குப் புரிந்தது, ஆனால் அம்மாவுக்கு இது தான் முதல் குழந்தை, டாக்டர் சொல்கிற மாதிரி, அப்போ நடந்தா மாதிரி, இப்பவும் நடக்குமா என்ன? உலகத்தில் எத்தனையோ பேருக்கு குழந்தைப் பிறக்கிறது, எல்லோருமா இறந்து விடுகிறார்கள்? அப்பாவிடம் பேசவேண்டும், ஆனால் அப்பா கண்ணால் பார்த்தார் அம்மாவுடைய டெத்தை, அதனால் அவருக்குப் பயம், அதையும் தன்னால் புரிந்துக் கொள்ள முடியுது, என்று வேறு வேறு விதமாக நினைத்துக் கொண்டிருந்தான், இப்போது நான் அப்பாவோட இருக்கணும் என்று உள்ளே போனான்,

இல்லை மாப்பிள்ளை நீங்க புரிஞ்சுக்கணும் எப்போதும் இப்படி நடக்குமா என்ன? என்று அட்வைஸ் செய்து கொன்டிருந்தாள்

'இல்லம்மா, எனக்கு என் பொண்டாட்டிதான் முக்கியம் எங்களுக்கு என்ன ஆசைக்கு ரெண்டு பெண்கள் ரம்யா, ரஞ்சனா, ஆஸ்திக்கு ஆனந்தன், இத விட என்ன வேணும், எனக்கு என் பொண்டாட்டி தான் முக்கியம், '

'பாட்டி, இப்போ எதுவும் பேசவேண்டாமே, அப்புறம் இதைப் பத்தி பேசலாம், ப்ளீஸ் பாட்டி......'

அவள் வெளியே போய்விட்டாள்

அவன் அப்பாவிடம் போனான், அம்மா பெட்டில் படுத்துக் கொன்டிருந்தாள், கையைப் பிடுத்து அழுத்தினான், அவனை இடுப்போட கட்டிக் கொண்டார்? கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது,

ராதாவைப் பார்த்தான் அவள் தப்பு என்ன இருக்கு பாவம்.

‘அப்பா, வாட்'ஸ் யுவர் ப்ராப்லம் ? ஏன் ஓவர் ரியாக்ட் பண்ணறே? ‘

‘என்னடா, உனக்கு தெரியாதா என் வாழ்க்கையில் நான் எவ்வளவு கஷ்டப் பட்டுறிக்கிறேன், உங்கம்மாவை இழந்து, இன்னொரு முறை நான் அதையே அனுபவிக்கனுமா?’

‘இல்லப்பா ஒரு முறை நடந்தா, அடுத்த முறையும் அதே நடக்குமா என்ன?’

'மே பி யு ஆர் ரைட் , பட் ஐ அம் நாட் ரெடி டு டேக் எனி சான்செஸ்’

’நான் உன் அம்மாவை இழந்தபோது, துடித்த, துடிப்பு, உங்க மாமா, மாமியை கேளு, அவர்களுக்குத் தெரியும், இவள் இல்லாமல் நான் உயிரோடு இருந்த காரணமே நீதானடா இல்லாவிட்டால், நானும் இவளோடையே போயிருப்பேன், நான் அழக்கூட இல்லை, ஏன் தெரியுமா தட் வாஸ் யுவர் பர்த்டே டூ, உன் அம்மா உனக்கு ஆனந்தன் பேர் வைத்ததே நாங்கள் ஆனந்தமாக வாழ்ந்ததற்கு அடையாளம் என்பதற்காக, அதனால் அந்த இழப்பை நினைத்து ஒவ்வொரு நாளும் நான் செத்துக் கொண்டிருந்தேன். இதை தக்க வைத்தால் இன்றிலிருந்து இவள் டெலிவரி ஆகி வீடு வந்து சேரும் வரை நான் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருப்பேன், என்னால் இவளுக்கு சந்தோஷத்தை கொடுக்க முடியாது, ஐ வான்ட் ஹெர், ஐ டூ நாட் வான்ட் டு ஜெபார்டைஸ் அவர் லைப்.’

ஆனந்தன் தன் அம்மாவைப் பார்த்தான்,

அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள், 'அப்பா சொல்வதுபோல் தான் நான் செய்வேன், அவர் போன முறை என்னை இழந்து எவ்வளவு வேதனையை அனுபவித்திருக்கிறார் என்று தெரியுது, நான் நீங்கள் சொல்வது போலவே அபார்ட் பண்ணிடலாம், நீங்கள் சீக்கிரமே டேட் வாங்கிக்கங்க, எனக்கும் உங்களோட சந்தோஷமா வாழனும், உங்க சந்தோசம் தான் முக்கியம், எனக்கு நீங்க ரஞ்சனா பேசினா எப்படி சிரிப்பீங்களோ, அதே மாதிரி சிரிச்சுகிட்டிருங்க ப்ளீஸ்'

அவர் எழுந்து அவளிடம் போய், ‘என்னடா, என் மேல் கோபமா?’

‘இல்லைங்க என்னால், உங்களை இப்படி வேதனையோடுபார்க்க முடியாது, நான் என்ன, நம்ம ஆனந்தனாலேயும் பார்க்க முடியாது, எனக்கு நீங்கள் தான் வேண்டும், உங்கள் சந்தோசம் தான் வேண்டும்,மத்த எதுவும் வேண்டாம்’ என்று கதறினாள்

அதைப் பார்த்த ஆனந்தன் உறைந்து நின்று விட்டான்.

சுந்தரம்,’ எனக்கு இந்த குழந்தை வேண்டாம் அனு, ப்ளீஸ் எனக்கு வேண்டாம்'

‘சரிம்மா, வேண்டாம், இங்கே வா ஆனந்தா, எங்களோடு வந்து உட்கார், ப்ளீஸ்,' என்றாள்

அவனும் வந்து அவர்களோடு உட்கார்ந்தான், அவளை கட்டிக் கொண்டான், கொஞ்ச நேரம் கழித்து அம்மா நீ ரொம்ப வருத்தப் படாதே,எல்லாம் சரியாயிடும் என்று இப்ப எப்படியிருக்கே ஏதாவது சாப்பிட்டியா?'

கிச்சன் பெல்லை அழுத்தினான், ஆள் வந்தவுடன் ‘சாத்துக்குடி ஜூஸ் கொண்டுவா,’ என்றான் ‘மூன்று பேருக்கும் கொண்டுவா,'என்றான்

'சரி நம்ம ஹால்ல போய் உட்காரலாமா?'

'இல்லைடா கொஞ்ச நேரம் இப்படியே இருக்கலாம்'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.