Page 3 of 3
“இல்லை.”
“அப்படின்னா நீ இங்கே இருக்கலாம்.”
சொன்னவன் அப்போதே வேலைக்காரர்களை கூப்பிட்டு கணக்கு தீர்த்து அனுப்பினான்.
“எல்லா வேலைகளையும் நீதான் பார்க்கனும்.”
அவள் முகம் மாறவேயில்லை. சம்மதத்துடன் தலையசைத்தாள்.
ராமுவை அழைத்தான். தன்னைப் பற்றிய விசயம் தந்தைக்கு அவனால்தான் தெரிய வந்தது என்று அவனுக்கு தெரியும். அன்பரசி மேல் அவன் வைத்திருக்கும் அன்பும் தெரியும்.
“இந்தா! ராமு. உனக்கு ரொம்ப நாளா ஒரு வண்டி வாங்கனும்னு ஆசைதானே? இனி நீ சொந்தக் கார் வாங்கி ஓட்டலாம்.”
அவன் நீட்டிய பணத்தை துச்சமாக பார்த்தான்.
“வேண்டாம் முதலாளி. நான் அளவுக்கதிகமா ஆசைப்படறதில்லை. உழைத்து என்னால் எப்ப முடியுதோ அப்ப வாங்கிக்கிறேன்.”
...
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:979}