(Reading time: 13 - 26 minutes)

மேகங்கள் விமானத்தின் மீது மோதிக்கொண்டு விலக அவற்றை தவிர்த்து விலகுவதற்காக அவனது கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் ஹெட்டிங் டயலை சற்றே நகர்த்த சில டிகிரிகள் சாய்கிறது விமானம்.

அந்த பூக்களின் வாசத்துடன் சேர்ந்து காக்பிட்டில் சுற்றிக்கொண்டிருந்த அந்த கூலர் மின் விசிறிகளின் சத்தம் அவன் தலைக்குள்ளே ஊடுருவவது போல் ஒரு உணர்வு. அவன் தடுமாறுகிறான் என புரிகிறது அவளுக்கு.

மேகங்களை கடந்த அடுத்த நொடி விமானம் மறுபடி விமானம் மற்றொரு திசையில் சாய வேண்டிய சூழ்நிலை......ஒரே ஒரு கணம் தடுமாறுகிறது அவனது கவனம். விமானம் ஒரே பக்கமாக சாய்ந்து சாய்ந்து...

சட்டென அந்த சூழ்நிலையை சமாளித்து விட அவளால் முடியும் ஆனாலும் இதழோரம் தேங்கிய சின்ன புன்னகையுடன் அவனையே பார்த்திருக்கிறாள் ஹரிணி.

'தெரிய வேண்டும்!!! அவன் தடுமாறுகிறான் என எல்லாருக்கும் புரிய வேண்டும்!!! அவன் தோற்றுப்போக வேண்டும்!!!  

சரியாக அந்த நொடியில் 'டேய்....' அப்பாவின் குரல் அதட்டுவது போன்றதொரு உணர்வு அவனுக்கு

அடுத்த நொடி.... அடுத்த நொடி... தன்னிலை உணர்ந்து  சுதாரித்துக்கொண்டான் அவன். அவன் விரல்கள் சட்டென விளையாட சரியான கோணத்தில் நிலைக்கொண்டது விமானம். என்ன நிகழந்தது என்பது அவர்கள் இருவருக்கும் மட்டுமே தெரியும். அவன் உடல் ஒரு முறை குலுங்கி ஓய்ந்தது.

'ச்சே.... என்னவாகிறது??? என்னவாகிறது எனக்கு??? என்னை நம்பி எத்தனை உயிர்கள் இங்கே??? ஒரு சின்ன ரோஜாப்பூ என்னை தடுமாற வைப்பதா???

'ஃபேஸ் பண்ணு...  உன்னோட எல்லா வீக்னெஸ்சையும் தைரியமா 'ஃபேஸ் பண்ணு' இதுவும்  அப்பா கற்றுக்கொடுத்த பாடம்தான்.

.ஒரு ஆழமான சுவாசத்துடன் ஹரிணியின் பக்கம் திரும்பினான் விவேக். அவள் சற்றுமுன் பேசிய போது என்னை தடுமாற வைக்க ரஞ்சனி கொடுத்த யோசனையாக இருக்க வேண்டும் இது என புரிந்தது அவனுக்கு.

'என்னை தடுமாற வைக்க, ஏன் அழ வைக்க கூட முடியும் இந்த ரோஜாப்பூக்களால். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.!!! ஆனால் இங்கே விமானத்தில் என்னை நம்பி இருக்கும் இத்தனை  உயிர்களை பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாமல் எப்படி இந்த ஹரிணி??? எப்படி பட்ட விமானி இவள்?? ' உள்ளுக்குள் பற்றி எரிந்தது விவேக்குக்கு.

'இல்லை!!! இந்த நொடி முதல் இந்த ரோஜாப்பூக்கள் என்னை ஒன்றும் செய்ய போவதில்லை.!!!

ஒரு முடிவுடன் சற்றே குனிந்து அந்த ரோஜாப்பூக்களை கையில் எடுத்துக்கொண்டான் விவேக். அவற்றை அவன் நுகர உயிர் வரை சென்று சேர்ந்தது அந்த வாசம்.

அவனது கண்களின் ஓரங்களில் சின்னதாக ஒரு நீர்த்துளி. சட்டென சுண்டிவிட்டுக்கொண்டான் அதை. இப்போது எந்த நடுக்கமும் இல்லை அவனிடத்தில். அந்த ரோஜாப்பூக்களை மடியில் வைத்துக்கொண்டான் அவன்.

மெல்ல திரும்பி அவளை பார்த்தவனின் இதழ்களில் மிளிர்ந்தது ஒரு வெற்றி புன்னகை. அவள் முகமெங்கும் வியப்பின் ரேகைகள். ஒரு முறை அவளை பார்த்து கண் சிமிட்டி விட்டு திரும்பிக்கொண்டு புது உற்சாகத்துடன் தனது மேக காதலிகளை மறுபடியும் முத்தமிட துவங்கி இருந்தான் விவேக்!!!

தொடரும்......

Episode # 02

Episode # 04

{kunena_discuss:1049}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.