(Reading time: 22 - 44 minutes)

ன்ன A.K இன்னும் கொள்ளு பேரன் பேத்தியெல்லாம் வளர்க்கனும் எவ்ளோ பெரிய பொறுப்பிருக்கு அதுகுள்ள எஸ்கேப் ஆகனும்னு பாத்தா எப்படி என்று கூறி சிரித்தான் ராம்..

அன்றிரவு ராமோடு பால்கனியில் அமர்ந்திருந்தாள் மகி..கங்கிராட்ஸ் ராம்..ரொம்ப ஹாப்பியா இருக்கு அந்த அஸைண்மெண்ட்ட ஸக்சஸஸ் புல்லா முடிச்சது..

ம்ம்ம் அதுக்கு காரணமே நீதான் குட்டிமா உன் சப்போர்ட்னால தான் இத என்னால கம்ளீட் பண்ண முடிஞ்சுது..

இதுல நா என்னப்பா பண்ணேண்??

என்ன நம்பி இப்படி டெல்லில வந்து உக்காந்திருக்கியே அது போதாதா??

அழகாய் சிரித்தாள்..ஆனா குட்டிமா இப்போதான் வீடு வீடாயிருக்கு..இவ்ளோ நாளும் நீ இந்த அளவு பேசவே மாட்ட..ஏதோ ஒருமாறி அமைதியாவேயிருப்ப அதுக்கேத்தா மாறியே சூழ்நிலையும் அமைஞ்சுடும்..ஆனா மகி உன்ட்ட கேக்கனும்னு நினைச்சேன் அப்போலா நீ எதுக்கெடுத்தாலும் அழுதுருவடா..இப்போ இருக்குற மாறி ஸ்ட்ராங் மகி அப்போ இல்லவேயில்ல ஏன் டா??

இல்ல ராம் பொதுவா நா கொஞ்சம் சைலண்ட் தான் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்கிட்ட மட்டும் தான் நல்லா பேசுவேன்..அழுறதுக்கு காரணம்…நா பயங்கர அப்பா பெட் சோ அம்மா திட்டினா கூட அப்பா அவங்கள திட்டிருவாரு..யாரையும் என்ன ஒரு வார்த்தை சொல்ல விட மாட்டாரு..பட் அவரு போனப்பறம் அம்மாவோட டென்ஷன்,ப்ரஷர் கூட என்கிட்ட தான் காட்ட முடியும் அந்த மாறி டைம்ல நா ரொம்பவே வீக் ஆய்ட்டேன்..என் மனசுக்கு பிடிச்சவங்க என்ன எதாவது சொல்லிட்டா என்னால தாங்கவே முடியாது சட்டுனு அழுதுருவேன்..சென்னைக்கு ஜாப்க்குநு வரும் போது தான் என்ன நா நிறைய மாத்திக்கிட்டேன்..தனியா இருக்க போறோம் அதுவும் ஆபீஸ்ல எவ்ளவோ பேரோட பேச வேண்டியது இருக்கும் அப்போ இந்தமாறி அழுதுட்டு இருந்தா நல்லாயிருக்காதுநு என்னென்னவோ சொல்லி என்ன நானே பக்குவ படுத்திக்கிட்டேன்..அப்போ கூட வேலைல சேர்ந்த புதுசுல ரொம்பவே கஷ்டப்பட்டேன்..நைட் ரூம்ல உக்காந்து அழுவேன்..ஆனாலும் வெளில யார்ட்டையும் காட்டினதில்ல..மேபி அதான் ரீசனாயிருக்கும்..

ம்ம்ம் ஆனா இந்த மகி தான்டா நல்லாயிருக்கா நீ இப்படியேயிரு..

ஏன் ராம் நா அப்படி அழுதா நீங்க என்ன பண்ணீங்க??

ம்ம் நல்லா திட்டிருவேன் அவ்ளோ ஏன் ஒரு தடவை அடி கூட வாங்கின அப்பறம்தான் வழிக்கு வந்த..பட் அத நினைச்சு எத்தனை நாள் தவிச்சுருக்கேன் தெரியுமா..ரீயலி சாரி குட்டிமா..வேணும்னு பண்ணல என அவள் கன்னத்தை மிருதுவாய் தடவினான்..

ராம் நா உங்களை எந்த அளவு படுத்திருந்தா நீங்க அடிக்குற அளவு போய்ருப்பீங்க என்னவோ எல்லாம் கெட்ட கனவா நினைச்சு மறந்துருங்கப்பா..சரி பீலீங்க்ஸ்லா கொஞ்சம் தள்ளி வச்சுட்டு வேற எதாவது காமெடி இன்ஸ்டெண்ட் சொல்லுங்க..

காமெடி தான ஓஓஓ இருக்கே ஆனா என்ன அத சொன்னப்பறம் என் லைவ் ட்ராஜெடி ஆகாமயிருந்தா சரி..

அப்படி என்ன சொல்ல போறீங்க என்றாள் ஒரு வித ஆர்வத்தோடு..

பெருசாலா ஒண்ணுமில்லடா குட்டிமா ஒரே ஒரு தடவ நமக்கு…நமக்கு..பர்ஸ் நைட் நடந்துருச்சு..

என்னது????????????

குட்டிமா சத்தியமா அதுல என் தப்பு எதுவுமே இல்ல நா எவ்வளவோ சொன்னேன் நீ தான் கேக்கல நானும் எவ்ளோ நேரம் தான் நல்லவனாவே நடிக்குறது..எனக்கு பேசுறதுக்கு நீ வாய்ப்பே குடுக்கலடா..

ராம் பண்றதெல்லாம் பண்ணிட்டு நா தான் காரணம்நு வேற சொல்றீங்களா??போங்கப்பா..நீங்க ரொம்ப மோசம் என விறு விறுவென்று உள்ளே சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள்..

மகி நிஜமாடா நீ தான் எதையும் கேக்குற நிலைமைல இல்ல என நடந்ததை ஒன்றுவிடாமல்  கூறினான்..நம்புடீ..இதான் நடந்தது..என் மேல தான் தப்புனா இப்போ கூட நா இத உன்கிட்ட சொல்லிருக்க மாட்டேன்ல..என்றான் பாவமாய்..

ஒரு நிமிடம் அவனையே உற்று நோக்கியவள் சட்டென அவனை இறுக அணைத்துக் கொண்டாள்..சில நிமிடத்தில் விலகி நின்றவள்,லவ் யு சோ மச் ராம்..என அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்..

என்னடீ பண்ற நா என்ன சொல்லிட்டு இருக்கேன்..??

ராம் நடந்ததுக்கு காரணம் நாதான் அப்பறம் என்ன??இருந்தாலும் ஆமாண்டி நடந்துருச்சு நா உன் புருஷன் தானேனு சொல்லாம எனகிட்ட வந்து நீங்க தப்பு பண்ண மாறி பாவமா பேசிட்டு இருக்கீங்க..எத்தனை பேருக்கு இந்த மனசு வரும்..என் உணர்வுகளை மதிச்சு இவ்ளோ தூரம் பேசுறீங்களே அதுவே எனக்கு போதும்..அதுமட்டுமில்லாம நா என்ன குழந்தையே பெத்துக்க மாட்டேன்னா சொன்னேன்..இப்படி என்னை பாத்துக்குற என் ராம்க்காக எத்தனை குழந்தை வேணா பெத்துப்பேன்..என சலுகையாய் அவன் மீது சாய்ந்து கொண்டாள்..உன்ன புரிஞ்சுக்கவே முடில டீ பொண்டாட்டி..என அவள் தலையில் முத்தமிட்டான் அவளின் அன்பு கணவன்..

ராம் அத்தம்மாவும் எங்கம்மாவும் நேத்து பேசினாங்க ஒண்ணுமே கேக்கலப்பா என்னபத்தி..ஊருக்கு போனவுடனே இருக்கு ரெண்டு பேருக்கும்..

ஹே மகி அவங்களுக்கு இங்க நடந்த எதுவுமே தெரியாது..நாளைக்கு தான் நானே கால்பண்ணி எல்லாத்தையும் சொல்லலாம்நு இருக்கேன்..

எப்படிப்பா எதுவும் சொல்லாம சமாளிச்சீங்க..??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.