(Reading time: 22 - 44 minutes)

ள்ளே அதர்வாவும் விநாயக்கும் அமர்த்தப்பட்டிருக்க இவர்கள் அனைவரும் உள் நுழைந்தனர்..அப்போதும் அதர்வா ராமை தான் முறைத்துக் கொண்டிருந்தான்..அமர்நாத் அதை கவனித்துவிட்டு,அவனை ஏன்டா முறைக்குற??தப்பெல்லாம் உன்னோடது..ஏன் அதர்வா இப்படி பண்ண..நானும் உங்க அம்மாவும் இத தான் உனக்கு சொல்லி குடுத்து வளர்த்தோமா??சட்டத்துக்கு பயப்படலனாலும் உன் மனசாட்சிக்கு பயந்திருக்க வேண்டாமா??என உணர்ச்சிவசமாய் பேச ராம் தான் அவரை நிதானப்படுத்தினான்..

விநாயக்கின் முகத்தில் ஒரு வெற்றி புன்னகை ராமிற்கோ அங்கேயே அவனை நாலு சாத்து சாத்தலாம் போலிருந்தது..என்ன மிஸ்டர் A.K தி க்ரேட் பிஸ்னஸ் மேன் இப்படி உடைஞ்சு போய் உக்காந்துட்டீங்க??இப்போ தெரியுதா அவமானத்தோட வலி என்னனு??இப்படிதான் எனக்கும் இருந்தது..இந்த நிமிஷத்துக்காக தான் காத்திருந்தேன்..உன்ன இந்த நிலைமைல பாக்கத்தான் எல்லாத்தையும் இழந்தப்பறம் கூட உயிரோட வாழ்ந்துட்டு இருக்கேன்..

ஏன்டா உன்ன வளர்த்துவிட்ட பாவத்துக்கு எனக்கு இவ்ளோ நன்றிகடன் பண்றியா??இதுக்கு நீ என்ன ஓரேடியா கொன்னுருக்கலாம் விநாயக்..

ம்ம் நானும் அப்படிதான் ப்ளான் பண்ணேண் ஆனா உன் போறாத காலம் உனக்கு வெட்டின குழியில என் கூட பொறந்தவ வந்து விழுந்துட்டா என்ன பண்றது எனக்கும் நீ தப்பிச்சுட்டியேநு வருத்தமாதான் இருந்தது ஆனா நீ இவ்ளோ அனுபவிக்கனும்நு தான் அன்னைக்கு நீ தப்பிச்சுட்ட போல என்றான் அசால்ட்டாய்..

அமர்நாத் ஒரு நிமிடம் மூச்சே நின்றுவிட்டதை போல் உணர்ந்தார்..டேய் என் மீராவ???நீதான்???

ம்ம் நானே தான் என் அருமை மாமா..உங்க பொண்டாட்டி என்ன பேச்சு பேசினாங்க..அவ உயிரோட இருக்குறவர ஒரு பைசா தரமாட்டேன்னு சொன்னா??அதான் அனுப்பி வச்சுட்டேன் என்ன ஜோடியா போவீங்க சொத்து எனக்கு வரும்நு நெனைச்சேன் அதான் நடக்கல..அவன் பேச பேச அதர்வா வெறிபிடித்தவனாய் மாறிக் கொண்டிருந்தான்..

பாத்தியா நீ யாரோட கூட்டு வச்சுருந்துருக்கநு பாத்தியா உன் அம்மா அக்காவ கொன்ன கொலைகாரனையே நீ நம்பிருக்க ஏன்டா இப்படி பண்ணிண..என அவர் தலையில் அடித்து கொள்ள..ராமும் பரணியும் அவர் அருகில் வந்து சமாதான படுத்தினர்..தன்னை சமாளித்து கொண்டவர் இருவரிடமும்,இது உங்களுக்கு ஏற்கனவே தெரியும் இல்லையா பரணி??அவன் அமைதி காத்தான்..அதனால தான் என்ன வர வேண்டாம்நு சொன்னியா ராம்??

A.K ப்ளீஸ் எமோஷனல் ஆகாதீங்க..இத உங்ககிட்ட சொல்றதால மட்டும் போனவங்க திரும்ப வந்துர போறதில்ல எதுக்கு வீணா உங்க அமைதிய கெடுக்கனும்நு தான் மறைச்சுட்டோம்..சாரி..

ம்ம்ம் எங்கிருந்தோ வந்த உங்க ரெண்டு பேருக்கும் என் மேல இருக்குற அக்கறை கூட என் புள்ளைக்கு இல்லாம போச்சே..

கமிஷ்னர் சார் அதுமட்டுமில்லாம இந்த விநாயக் தான் அவரோட முதல் மனைவிய குடி போதைல கழுத்தை நெறிச்சு கொலை பண்ணிருக்காரு அத மறைச்சு அவங்க பாய்சன் சாப்ட்டு இறந்த மாறி கேஸை முடிச்சுட்டாரு..இத A.K சார் வீட்டுல ரொம்ப வருஷமா வேலை பாக்குற ஒரு பெரியவர் மூலமா தெரிஞ்சுகிட்டோம்..

அவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே அதர்வா அவன் பக்கத்திலிருந்த இன்ஸ்பெக்டரின் துப்பாக்கியை எடுத்து விநாயக்கை சரமாரியாய் சுட்டுவிட்டான்..என்ன நடக்கிறது என்பதை எல்லோரும் உணரும் முன் எல்லாமே முடிந்துவிட்டிருந்தது..அமர்நாத்தின் காலில் விழுந்து கதறினான் அப்பா உங்களுக்கு ரொம்ப தொந்தரவு குடுத்துட்டேன் என்ன மன்னிச்சுருங்கநு கேக்குற அருகதை எனக்கு இல்ல..ஆனா இப்போ இவன கொன்னு என் பாவத்தை நா கழிச்சுட்டேன்னு நம்புறேன்..பரணி..சாரி மாப்ள எங்க சாக்ட்சிய நல்ல படியா பாத்துக்கோங்க..குழந்தை அவ..சின்ன வயசுலயே பெத்தவங்களை இழந்து ரொம்ப கஷ்டப்பட்டுட்டா இனி அவ சந்தோஷமாயிருக்கனும் இருப்பா..ராம் ஐ அஅம் வெரி சாரி..உங்ககிட்ட நா ரொம்ப மோசமா பிகேவ் பண்ணிட்டேன்..பட் சத்தியமா உங்க வைப்க்கு நடந்த ஆக்ஸிடெண்ட்க்கும் எனக்கும் சமந்தமில்லை என் ஆட்கள் தான் என் மேலிருந்த அன்பால ஏதோ பண்ணிட்டாங்க டெரிப்பிலி சாரி..

எப்போ உங்க தவற உணர்ந்துட்டீங்களோ அப்போவே எல்லாரும் உங்கள மன்னிச்சுட்டோம் பட் சட்டபடி என்ன தண்டனையோ அத அனுபவிச்சுதான் ஆகணும்..தண்டனை முடிஞ்சு வரும் போது உங்கள ஒரு புது அதர்வாவா A.K சார் பாக்கனும் தைரியமாயிருங்க..-ராம்..

அனைவரும் வெளியே வந்து கிளம்ப எத்தனிக்க,அமர்நாத் பரணியை அழைத்தார்..பரணி இனி சாக்ட்சியோட புருஷனா நீங்க தான் இந்த எஸ்.எம் குரூப்போட பொறுப்பேத்துக்கனும்..

ஒரு நொடி ராமை பார்த்தவன்,சாரி சார் அது மட்டும் என்னால முடியாது...ப்ளீஸ் தப்பா எடுத்துக்காதீங்க..உங்க வீட்டுப் பொண்ணா அதர்வா வர வரைக்கும் சாக்ட்சி பொறுப்பெடுத்துகட்டும் நா எதுவுமே சொல்லல பட் என்னால முடியாது சார்..

என்ன பரணி இப்படி சொல்றீங்க??

இல்ல சார் இதான் சரியா வரும் இன்னும் ஆறு மாசமோ ஒரு வருஷமோ சாக்ட்சி எல்லாத்தையும் கவனிக்கட்டும் அதுக்கப்பறம் கல்யாணத்தை வச்சுக்கலாம்..கல்யாணத்துக்கு அப்பறமும் அவ உங்க பிஸ்னஸ பாத்துக்கட்டும் நா எதுவும் சொல்ல மாட்டேன்..நானும் ராமும் ஏற்கனவே IPS எக்ஸாமுக்கு ப்ரிபேர் பண்ணிட்டு இருக்கோம் அது எங்க கனவு அத எந்த காரணத்துக்காகவும் என்னால விட்டு குடுக்க முடியாது தப்பா எடுத்துக்காதீங்க சார்..

மனம் நிறைந்து போனது பெரியவருக்கு..என் பேத்திக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சுடுச்சு இதுக்கு மேல எனக்கு என்ன ஆனாலும் கவலயில்லை..என கண்கலங்கினார்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.