(Reading time: 22 - 44 minutes)

ன்னத்த சமாளிக்குறது..கரெக்ட்டா உனக்கு அக்ஸிடெண்ட் ஆன அன்னைக்கு இவங்க மாத்தி அவங்க கால் பண்ணிட்டே இருந்தாங்க..என்னென்னவோ சொல்லி பேசி முடிச்சேன்.ஆனா உனக்குதான்டீ அந்த மேஜிக் தெரியும் உன்ன சுத்தி இருக்குறவங்கள எல்லாத்தையும் உன் பக்கமே மெஸ்மரைஸ் பண்ணி வச்சுருவ..மோகினினினி,.

ஹா ஹா நா என்னப்பா பண்ணேன்..என பாவமாய் கேட்க,

பின்ன கல்யாணமே வேண்டாம்நு இருந்த என்ன இப்படி உன் பின்னாடியே குட்டி போட்ட பூனை மாறி சுத்த வச்சுருக்க..அதகூட ஒத்துக்கலாம்..ஆனா எங்கம்மா,தன்வி,பரணி,சாக்ட்சி எல்லாருக்குமே நீ பெட்..எல்லாத்துக்கும் மேல அப்பா சான்சேயில்ல..அப்பறம் நீ மோகினியில்லாம வேறன்ன என்று கண்சிமிட்டி கூறினான்..

உண்மைதான் ராம் நானே இதெல்லாம் யோசிச்சுருக்கேன்..ஆனா என்னோட எல்லா ஸ்டேஜ்லயுமே எனக்கு தேவையான உறவுகளை பாத்து பாத்து கடவுள் அமைச்சு குடுக்குறாரு..அந்த விதத்துல நா ரொம்ப ரொம்ப லக்கி தெரியுமா..ஆனா இப்போ இருக்குற இந்த அத்தனை உறவுகளும் எனக்கு கிடைக்க காரணமாயிருந்தது நீங்கதான்..நீங்க எனக்கு கிடைச்சதுல நா இன்னும் ரொம்ம்ம்ம்பபப லக்கி என அவனை கட்டிகொள்ள..இன்னுமாய் தன்னவளை தன்னோடு இறுக்கிக் கொண்டான் அந்த அன்புகாதலன்..

ராம் கவிதை எதாவது கேக்கனும் போல இருக்கு நீங்கதான் அழகா சொல்லுவீங்களே..உங்களுக்கு பிடிச்ச எதாவது ஒரு கவிதை சொல்லுங்கப்பா..

ம்ம்ம்..இருக்கவே இருக்காரு நம்ம வைரமுத்து சொல்லிட்டா போச்சு..நம்ம சுஷ்ஷுவேஷன்க்கு இதான் தோணுது குட்டிமா..

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித் துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைத்த காலம்
தொண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தை கலக்குதடி

பார்வையிலே சில நிமிடம்..
பயத்தோடு சில நிமிடம்..
கட்டியணைத்தப்படி கண்ணீரில் சில நிமிடம்
இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்….

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித் துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே…..
எது நியாயம்…?எது பாவம் ..?
இருவருக்கும் தோன்றவில்லை..
அது இரவா..?அது பகலா..? அதை பற்றி அறியவில்லை..!
யார் தொடங்க ? யார் முடிக்க ?
ஒரு வழியும் தோன்றவில்லைஇருவருமே
தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை

அச்சம் களைந்தேன்ஆசையினை நீ அனைத்தாய்
ஆடை களைந்தேன்வெட்கத்தை நீ அனைத்தாய்
கண்டத் திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித் துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

கவிதையை கேட்டபடியே அவனை அவள் பார்த்திருக்க,என்ன மகி ஏதோ கேக்கனும்னு நினைக்குற??என்னனு சொல்லு என்றவாறு அவள் தலையை வருடிக் கொடுக்க,மெச்சுதலாய் ஒரு பார்வையோடு மெதுவாய் வாய்திறந்து ராம் அப்போ சீக்கிரமே நமக்கு குட்டிப் பாப்பா வந்துடுமா என்றாள் ஆசையாய் சிறிது பயமும் தான்..

பாருடா என் குட்டிமாக்கு குட்டிபாப்பா வேணுமாம்..நீயே கேட்ட அப்பறம் நா என்ன வேண்டாம்னா சொல்ல போறேன் வர வச்சுட்டா போச்சு என தன்னவளை தன்னோடு சேர்த்துக் கொண்டான்..

ரு வருடத்திற்க்கு பிறகு,..

ராமின் வீடே திருவிழா போன்று ஆரவார பட்டுக்கொண்டிருந்தது..விஜி,ராஜி ராஜசேகர்,தன்வி அவள் கணவர் அவர்களின் குட்டி தேவதையென அனைவரும் டெல்லி வந்திருந்தனர்..மகியின் சீமந்தத்திற்காக..அது மட்டுமில்லாமல் நாளை மறுநாள் பரணியின் திருமணம் மகிழ்ச்சி ஒன்றே நிறைந்திருக்க அனைவரும் பரபரப்பாய் வேலை செய்து கொண்டிருந்தனர்..ராம் தான் ரொம்ப முக்கியமான வேலை பாத்துட்டு இருக்காரு வாங்க பாப்போம்..அவனறையில்,

ராம்ப்பா எத்தனை தடவை சொன்னாலும் தப்பா தான் பண்றீங்க டைம் ஆச்சு சீக்கிரம்..

ஹேய் இவ ஒருத்தி எனக்கென்ன முன்னபின்ன பழக்கமா இருக்கு..இதுக்கு தான் கல்யாணம் ஆன உடனே ட்ரெய்ண்ங் குடுத்துருக்கனும் இப்போ வந்து என்ன குறை சொன்னா வெயிட் பண்ணு….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.