(Reading time: 13 - 25 minutes)

24. பாயும் மழை நீயே - தேவி

Paayum mazhai neeye

ல்லோரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினர். ராகுல், நிஷா இருவருக்கும் கிளம்ப மனதே இல்லை..

அர்ஜுன் சுபத்ராவிடம் “ஹேய்.. என்ன உங்க படை தளபதி காணோம்.. “ என்று வினவ, ராகுல், மிதுன் இருவரும் அர்ஜுனை முறைத்தனர்.

ராகுல் அர்ஜுன் காதில் “ஏன்டா.. இந்த கொலைவெறி.. சுத்தி கூட்டத்த வச்சிக்கிட்டு லவ் பண்ற நிலைமையிலே நான் இருக்கேன்.. இதுலே அவனை வேற கூப்பிடுற..”

அர்ஜுன் ராகுலை பார்த்து அசடு வழிய சிரிக்க, சுராவோ சீரியஸ் ஆ பதில் சொன்னாள்..

“நான் அவனுக்கும் போன் பண்ணேன் கேப்டன்.. ஆனால் அவன் ப்ராஜெக்ட் விஷயமா friends ஓட இருக்கானாம்.. நேரே ஸ்டேஷன்க்கு வரேன்னு சொல்லிட்டான்.. “ என்றாள்.

மேலும் சிறிது நேரத்தில் கிளம்ப ஆரம்பிக்க , அர்ஜுன் மட்டும் முன்னாடி சென்று கொண்டிருந்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்..

எல்லோரும் பார்க்கிங் வர, அர்ஜுனும் வந்தவன் கையில் பஞ்சு மிட்டாய் இருக்க, சுபத்ரா ஆவலாக பார்த்தாள்.

அர்ஜுன் அவள் கையில் கொடுத்து “இந்தா.. பீச் வந்து நீ மிச்சம் வைச்சது இது ஒண்ணுதான்.. அதுவும் வாங்கி கொடுத்துட்டேன்.. அப்புறம் இத வாங்கி குடுக்காததால எனக்கு அடுத்த பேரு செலக்ட் பண்ணிடாத..”

“தேங்க்ஸ் பாஸ்.. நீங்க நல்ல நல்லவங்க.. நானும் அப்போவே கேட்டுருப்பேன்.. இருந்தாலும் என்ன சின்ன புள்ளைன்னு நினைச்சிட்டா என்ன பண்றதுன்னு விட்டுட்டேன்..”

அப்போது மகிமா “கேப்டன் சார்.. எனக்கு எல்லாம் கிடையாதா..? சுறா எனக்கு கொஞ்சம் கொடுடி” என்று வினவ,

சுராவோ “அஸ்க்கு.. புஸ்க்கு.. இது எனக்கு மட்டும் தான்.. “ என்று சண்டை போட, நிஷா சிரித்தாள். மிதுனும், அர்ஜுனும் தலையில் அடித்துக் கொண்டனர்.

இந்த சிரிப்போடு எல்லோரும் கிளம்பினர். அன்று இரவு நிஷா கிளம்ப, அவளை வழி அனுப்ப சுறா வீட்டில், மகிமா, வருண் எல்லோரும் ஸ்டேஷன் சென்றனர்.

இரவு வீட்டிற்கு வந்த பின் தாங்கள் பீச்க்கு சென்றதை சொல்லலாம்னு நினைத்த சுறா, பின் அது நிஷாவோட விவரம் என்பதால் சொல்ல தயங்கினாள். ஆனால் அவளால் அவள் அப்பா, அம்மா விடம் மறைக்கவும் முடியவில்லை.

கொஞ்ச நேரம் தயங்கியவள் பின் முடிவெடுத்தவளாக

“அப்பா, அம்மா கொஞ்சம் இங்கே வாங்களேன்.. “ என்று அழைத்தாள்.

“என்னடா.. “

“உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்.. “

“சொல்லுமா..”

“அப்பா, எங்க ட்ரைனிங் கேப்டன் ராகுல் இருக்கார் இல்லியா.. அவர் நம்ம நிஷாவ ப்ரோபோசே பண்ணிருக்கார் .. “

“ஒஹ்.. அதற்கு நிஷா என்ன சொன்னாள்?”

“அவளுக்கும் பிடிச்சு இருக்குபா..”

“ஹ்ம்ம்.. நல்ல பையன்தான்.. அவங்க பாமிலி பத்தி சொன்னப்பவும் பிரச்சினை எதுவும் இல்லாத மாதிரி தான் தெரியுது. ஆனால் நிஷா வீட்டில் என்ன சொல்றாங்களோ தெரியல..?” என்றார் கிருஷ்ணன்.

“ஆமாம்.. அப்பா.. அவங்க நல்ல டைப் தான்.. “

“சரி ..அத இப்போ என்ன தீடிர்னு சொல்ற?”

“அது வந்து.. என்னை திட்டாதீங்க.. இன்னிக்கு நிஷா ஊருக்கு போறதாலே.. ராகுல் அண்ணா அவளை பார்க்கனும்னு சொன்னார். அதுதான் evening நாங்க பீச்க்கு போனோம்.. வீட்டில் எல்லோரும் இருக்கும் போது இதை பத்தி சொல்ல வேண்டாம்னுதான் உங்க கிட்ட பொய் சொல்லிட்டு போனேன்.. ஆனால் உங்ககிட்ட சொல்லலைன்னா எனக்கு கஷ்டமா இருக்கும்.. அதான் இப்போ சொல்லிட்டேன்..”

இப்போ ருக்மணி “இது தப்பு இல்லையா சுபா.. நிஷாவோட அப்பா, அம்மா உன்னை நம்பிதானே அனுப்பி வைச்சாங்க.. நாளைக்கு இத பத்தி தெரிய வந்தா நம்மள பத்தி தப்பா நினைக்க மாட்டாங்களா.. ?”

“ஐயோ. .எனக்கும் ரொம்ப தப்பு பண்ற பீலிங் தான்.. ஆனால் அவளுக்கு அவங்க கிட்ட சொல்லாம போக மனசு வரல.. அதான் கிளம்பினோம்.. வரும்போது ரெண்டு பேருமே அதை பத்தி தான் யோசிச்சுட்டு வந்தோம் .. அவ இன்னிக்கு ஊருக்கு போகும்போதே அவங்க அப்பா கிட்டே சொல்லிடுறேன்னு சொல்லிருக்கா.. அதே சமயம் நானும் உங்ககிட்ட சொல்லிடனும்நு சொல்லிட்டேன்..”

“ஹ்ம்ம்.. இது தப்பு குட்டிமா.. இனிமேல் இப்படி செய்யாத.. எதுவானாலும் எங்ககிட்ட சொல்லிடு,,”

“சரிப்பா..”

“என்னங்க.. நிஷா அப்பா அம்மா எதுவும் தப்பா நினைப்பாங்களா?”

“அது பார்த்துக்கலாம் ருக்மணி.. ஆனால் அவர் கேட்டா நல்ல பையன் தான் . அப்படின்னு சொல்லலாம்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.