(Reading time: 13 - 25 minutes)

ஹோட்டல் லாபியில் கொஞ்சம் நிறைய பேர் வருவது தெரிந்தது. அதிலும் வருண் முகம் தெரிய, நன்றாக பார்த்த மிதுன்

“டேய்.. உனக்கு மச்சம் தாண்டா.. அங்கே பாரு சிஸ்டர் அவங்க பாமிலி யோட வராங்க..”

எங்கே என பார்த்த அர்ஜுன் அவர்களை கண்டு கொண்டு மகிழ்ந்தான்..

அவர்கள் உள்ளே வரும்போதே அர்ஜுனை பார்த்து விட , எல்லோரும் அவர்கள் அருகே சென்றனர்.

சுபத்ரா “தேங்க்ஸ் அர்ஜுன்.. உங்க wishes & பொக்கேக்கு ..” என, அர்ஜுன் தலையசைத்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

ராகுல், மிதுன் இருவரும் அவளை விஷ் செய்தனர். பின் கிருஷ்ணன் அவர்களையும் டின்னேர்க்கு அழைக்க,

மிதுன் “அங்கிள் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. இது என் சித்தப்பா ஹோட்டல் தான்.. இதோ நான் ஒரே வரிசையா நமக்கு டேபிள் போட சொல்றேன்.. “ என்று செல்ல,

எல்லோரும் காத்து இருந்தனர். அந்த நேரத்தில் அர்ஜுன் கிருஷ்ணனிடம் பொதுவாக பேசிக் கொண்டே , எதிரில் இருந்த கண்ணாடி வழியாக சுபத்ராவை பார்த்துக் கொண்டு இருந்தான்.

அன்று அவள் அணிந்து இருந்த மயில் கழுத்து வண்ண சுரிதார் , அதற்கு ஏற்ற மயில் வடிவில் காதில் ட்ராப்ஸ், கழுத்தில் அதே டிசைன் பெண்டண்டோடு சேர்ந்த சிறய செட் என அழகு மயிலாக இருந்தாள்.

சிறிது நேரத்தில் டேபிள் ரெடி ஆக, எல்லோரும் உணவருந்த சென்றனர். சற்று நேரத்தில் வர்ஷாவும் வர அவளை சுராவிற்கு அறிமுகபடுத்தினார்கள்.

அந்த ஹோட்டலில் வீக் எண்டு என்றால் சிறு மெல்லிசை கச்சேரி இருக்கும்.  மிதுன் சென்று அவர்களிடம் ஏதோ சொல்லிவிட்டு வர , அவர்கள் அந்த பாடல் முடிந்த பின் அடுத்து ஹாப்பி பர்த்டே சாங் வாசித்தனர்.. அப்போது இவர்கள் ஹோட்டல் சார்பாக மிதுன் ஆர்டர் செய்து இருந்த கேக் வர , பாட்டோடு கேக் வெட்டினாள்.. சுபத்ரா..

அதற்குள் மெல்லிசை குழுவில் anchor அர்ஜுனை பாட வருமாரு அழைக்க , அவன் சிறு தயக்கத்தோடு சென்றான்.. இது எப்போதும் நடப்பதுதான் .. இந்த கச்சேரி குழு இவர்கள் நடத்தும் அந்த டிரஸ்ட் சேர்ந்தவர்கள் தான்.. இதில் வரும் வருமானம் டிரஸ்ட்க்கு போகும்.. அவர்களுக்கு அர்ஜுனை நன்றாக தெரியும் அதலால் அவனை பாட அழைத்தனர். அர்ஜுன் பாட ஆரம்பித்தான்.

தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ

கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ

தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்

காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ

 

கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம்

இதழ்களிலே பௌளர்ணமி வெளிச்சம்

கண்ணில் தோன்றும் ஜாலங்கள் கார்கால மேகம்

இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்

விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா

அன்னமும் இவளிடம் நடை பழகும்

இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்

 

பூமி எங்கும் பூந்தோட்டம் நான் காண வேண்டும்

புதுத் தென்றலும் பூக்களில் வசிக்கும்

ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்

அந்த மழையில் மலர்களும் குளிக்கும்

அருவிகளோ ராகம் தரும் அதில் நனைந்தால் தாகம் வரும்

தேவதை விழியிலே அமுத அலை

கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை

அர்ஜுன் மனதில் தானே எஸ்.பி.பியாக மாறி பாடிக் கொண்டு இருந்தான். அவனின் mind வாய்ஸ் “டேய் நீ என்னவோ உன்னை எஸ்.பி.பி.ன்னு நினைச்சுட்டு இருக்க.. இது மட்டும் அவளுக்கு தெரிந்தது .. உனக்கு மைக் மோகன் ன்னு பட்டம் கொடுத்துடுவா பார்த்துக்கோ.” என்றது.

ஆனால் அவன் எதிர்பாராதது .. இந்த பாட்டு சுபத்ராவிற்காக பாடியது என்று மற்றவர்கள் உணர்ந்து கொண்டு இருப்பார்கள் என்று.

மழை பொழியும்

Episode 23

Episode 25

{kunena_discuss:1031}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.