(Reading time: 13 - 25 minutes)

ராகுலை சுத்தி சுத்தி வந்து, மேலும் கீழும் பார்த்து விட்டு “அது எப்படி டா.. சிரிக்க தெரியாத உன்னோட ப்ரோபோசல ஏத்துகிட்ட அந்த அப்பாவி பொண்ணு யாருடா..?” என,

எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

ராகுல் தன் அம்மாவை முறைக்க, பின் சற்று நேரத்தில் அவனும் சிரித்து விட்டான்.. பிறகு நிஷாவை பற்றி சொன்னவன் , அவளின் குடும்பம் பற்றிய விவரங்கள் சொன்னான்.

அவன் அப்பா , அம்மாவிற்கு திருப்திதான்..

“சரிடா.. என் மருமக போன் நம்பர் கொடு .. உன்னை பத்தி நல்லதா நாலு வார்த்தை சொல்லி வைக்கிறேன்..”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தெய்வாவின் "காதல் கீதம்" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“யாரு நீங்க..? அது எல்லாம் ஏற்கனவே உங்க உத்தம புத்திரனுங்க தேவையான அளவுக்கு damage பண்ணிடாங்க.. நீங்க ஒன்னும் புது பில்டிங் கட்ட வேண்டாம்..”

அவன் அப்பாவோ “விளையாட்டு போதும்.. ஏண்டா .. இந்த காஷ்மீர் duty இருக்கும்போது சொல்லிருக்கியே.. அந்த பொண்ணு வீட்டிலே பயப்பட மாட்டாங்களா.. கொஞ்சம் பொறுமையா handle பண்ணிருக்கலாம்..”

“இல்லை பா. என்னவோ என்னாலே சொல்லாமல் இருக்க முடியல.. சாரி “

“சரி விடு.. ஆனால் என்ன முடிவு பண்ணிருக்க..”

“இந்த மூணு வருஷம் communicate எல்லாம் கொஞ்சம் கஷ்டம்தான்.. உங்களுக்கு எப்படி மெசேஜ் பண்ணுவேனோ .. அதே மாதிரி அவளுக்கு safe பத்தி மெசேஜ் மட்டும் பண்ணுவேன்.. அதுக்கு அப்புறம் கல்யாணம் பத்தி பேச போறேன் “

“சரிப்பா.. “ என, எல்லோரும் சந்தோஷத்தோடு சிரித்தனர்.

மிதுன், அர்ஜுன் வீட்டிற்கு செல்லும் வழியில் “அது எப்படிடா மச்சான்.. நாம ரெண்டு பேரும் வருஷ கணக்கா ட்ரை பண்றோம்.. ஒன்னும் நடக்க மாட்டேங்குது.. அவனுக்கு மட்டும் உடனே நடக்குது.”

“அவனுக்கு கிடைச்சது நல்லா போட்டவுடனே எரியற குண்டு பல்பு.. நமக்கு கிடைச்சதோ சரியான tube லைட்.. ஆல் fate ..ஒன்னும் பண்ண முடியாது..” என்று நொந்தபடி சென்றனர்.

அர்ஜுன்க்கு என்னவோ சுபத்ராவிடம் தன் விருப்பத்தை சொல்ல எண்ணினாலும், அவளின் கபடு அறியாத மனம் பார்த்து அவளை ஒரு குழந்தை போலேவே தோன்றுவதால், அவளிடம் சொல்ல முடியவில்லை.

அதை பற்றிய சிந்தனையோடு தான் இருந்தான்.

றுநாள் காலையில் சுராவை பார்க்க வந்த வருண் அவளை தாளித்து எடுத்து விட்டான். அது எப்படி அவர்கள் சந்திக்க நீ துணை செல்லலாம், நிஷாவும் எப்படி உடனே சம்மதம் சொல்லலாம் என.. பொருமி தீர்த்து விட்டான்.

சுறா ராகுல் பற்றிய விளக்கம் கொடுத்த பின், போனால் போகுதுன்னு மன்னிச்சு விட்டான்.

“டேய்.. வால்டர் வெற்றிவேல்.. ரொம்ப பண்ற.. அப்புறம் நல்ல அனுபவிப்ப .. பார்த்துக்கோ..” என, அது எல்லாம் தூசியா தட்டி விட்டான்..

இரண்டு மூன்று நாட்கள் சென்று இருக்க, அன்றைக்கு சுராவின் பிறந்த நாள்.. சென்ற வருடம் அன்றுதான் ட்ரைனிங் முதல் நாள்.

அர்ஜுன் காலையில் பிறந்தநாள் மெசேஜ் அனுப்பினான்.. வீட்டிலும் நல்ல grand டிரஸ் எடுத்து கொடுத்து இருந்தனர். வருண், மகிமா இருவரும் வந்து இருக்க கல கல என்று இருந்தது. நிஷாவும் காலையிலேயே போன் பண்ணியிருந்தாள்..

ஒன்பது மணி அளவில் சுபத்ரா பெயருக்கு ஒரு பூங்கொத்து வந்து இருக்க, யார் என்று பார்த்தால் அர்ஜுன் பெயர் போட்டு இருந்தது .. மஞ்சள் பூங்கொத்து தான்.. பிறந்த நாள் வாழ்த்தோடு இருந்தது.. அதனால் யாரும் தவறாக எண்ணவில்லை.

கிருஷ்ணனும், ருக்மணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.. பிறகு இரவு டின்னெர்க்கு ஹோட்டல் செல்ல முடிவெடுத்த போது வருண் கூட்டி சென்றான்.

அவர்கள் சென்ற ஹோட்டல் மிதுனின் சித்தப்பாவிற்கு சொந்தமானது.. வருண் அங்கே அழைத்து சென்றதே அது வர்ஷா அப்பா ஹோட்டல் என்றுதான்.. ஆனால் வெளியே சொல்லவில்லை.

அந்த ஹோட்டல் பார்த்தவுடன் , மகிமா வர்ஷாவை வர சொல்லி சொன்னாள். இதுவரை சுபத்ரா, வர்ஷா அறிமுகம் ஆகவில்லை என்பதால் இருவரையும் அறிமுகபடுத்த எண்ணியிருந்தாள்.

இவர்களுக்கு முன் ஏற்கனவே அர்ஜுன், மிதுன், ராகுல் மூவரும் இருந்தனர். அர்ஜுன் ராகுலிடம் அப்போது தான்

“டேய்.. போன வருஷம் இதே நாளில் தான் அவளை சந்தித்தேன்.. இந்த வருஷம் அவளை பார்க்க கூட முடியவில்லை.. “

“ஏண்டா.. வீட்டில் பார்க்கலாம் தானே..”

“பொக்கே அனுப்பவே அவ்ளோ யோசிச்சேன்.. “

“அப்போ புலம்பாம இரு..”

“இல்லைடா.. இன்னிக்கு அவளை நேரில் பார்க்கனும்னு அவ்ளோ ஆசையா இருக்குடா..” என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.