(Reading time: 26 - 51 minutes)

'ல்லடா...  இப்போ சொல்லலைன்னா வேறே எப்பவுமே சொல்ல முடியாம போயிடும். உண்மையிலேயே அம்மா இன்னும் ரொம்ப நாள் இருக்க மாட்டேன்டா...

'மா... என்னம்மா??? என்ன செய்யுது உங்களுக்கு...' திடுக்கிட்டு போனவனாக அவன் கேட்க அப்போது உள்ளே நுழைந்தார் அப்பா. அவரை பார்த்ததும் அம்மா அவன் மடியிலிருந்து எழுந்துக்கொள்ள அப்பா அவனை தன்னோடு சேர்த்து அணைத்துக்கொண்டார்.

'உன்னை நாங்க ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கோம். உன் நிலையிலே நான் இருந்திருந்தா நானெல்லாம் இந்த வீட்டிலே இருக்கிற யார் முகத்திலும் முழிச்சு இருக்க கூட மாட்டேன். ஆனா நீ... அன்னைக்கு நான் பெங்களுர் வந்தப்போ கூட என்கிட்டே அவ்வளவு பாசமா..' என்னை மன்னிச்சிடுடா கண்ணா..'

'அப்பா... ஏன் நீங்களும் இப்படி எல்லாம் பேசறீங்க... முதல்லே அம்மாக்கு என்னாச்சு அதை சொல்லுங்க...' தாள மாட்டாமல் கேட்டான் பரத்.

'அது... வந்து... அது  அப்புறம் சொல்றேன்... முதல்லே நீ என்கூட வா...' கண்களில் கண்ணீர் மல்க அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு கூடத்துக்கு வந்தார் அப்பா.

அங்கே நிறைய உறவினர்களும் நண்பர்களும் வந்திருந்தனர். அபர்ணாவின் குடும்பத்தினர் உட்பட. அம்மாவுக்கு உடல் நலமில்லை என்பதை இன்னும் அவர்கள் யாரிடமும் சொல்லி இருக்கவில்லை விஷ்வா.

அப்பா, அம்மாவுடன் வந்து நின்ற பரத்தையே கேள்வியுடன் பார்த்திருந்தனர் அனைவரும். முகத்தில் புன்னகை தவழ அங்கே என்ன நடக்க போகிறது என ஆவலுடன் பார்த்திருந்தாள் அபர்ணா. அஸ்வினியின் முகத்தில் வியப்பான மகிழ்ச்சி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு கண்களில் மகிழ்ச்சியும், வெற்றியும் போராட நிறைவான புன்னகையுடன் அசையாமல், இமைக்காமல் பார்த்திருந்தான் விஷ்வா.

'வந்துவிட்டதே!!! அவன் இத்தனை நாட்கள் வர வேண்டும் வர வேண்டுமென தவம் கிடந்த நிமிடம் வந்துவிட்டதே!!! என்ன சொல்லப்போகிறார் அப்பா!!!

எல்லாரும் அவர்களையே பார்த்திருக்க 'இவன் என் பையன்!!! மூத்த பையன்!!! என்றார் அவர்.

தன்னாலே அந்த இடத்தில் ஒரு நிசப்தம் வந்து சில நொடிகள் குடிக்கொள்ள, அதை கிழித்துக்கொண்டு சொன்னார் அப்பா.

'உங்க யாருக்குமே இதெல்லாம் தெரியாது. நாங்க காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க எல்லாரையும் விட்டு தள்ளி வந்திட்டோம். எங்களுக்கு குழந்தை இல்லைன்னு நாங்க கஷ்டப்பட்டுட்டு இருந்தப்போ எங்க பையனா நினைச்சு இவனை நாங்க கூட்டிட்டு வந்தோம். அப்போ பெருசா பணம் இல்லைதான் எங்ககிட்டே. ஆனா மனசு பெருசா இருந்தது. உண்மையிலேயே இவன் வந்த நேரம் விஷ்வாவும் வந்தான் எங்களுக்கு. இவன் எங்களுக்கு ஒரு பெரிய வரம். ஆனா நாங்க....  ' அவர் படபடவென சொல்லிக்கொண்டே போக

'அப்பா....' என்றான் பரத் இடையில் புகுந்து. 'நீங்க முதல்லே போய் ஃப்ங்ஷனுக்கு ரெடி ஆகுங்க.. மத்ததை அப்புறம் பேசிக்கலாம்..'

'இல்லைடா... நான் எல்லாம் முழுசா சொல்லிடறேன்..'

'இன்னும் என்ன முழுசா சொல்லணும்.??? அதான் மூத்த பையன்னு சொல்லியாச்சில்ல அவ்வளவுதான். அது போதும்பா எனக்கு...' என்றான் அவர் கண்களுக்குள் அர்த்தத்துடன் பார்த்து. அவன் எண்ணங்கள் நன்றாக புரிந்தது அப்பாவுக்கும் அம்மாவுக்கும்.

அப்பாவும், அம்மாவும் மற்றவர்கள் முன்னால் தலை கவிழ்ந்து நிற்பதை கண்டிப்பாக விரும்பவில்லை பரத். இது விஷ்வா, அபர்ணா, ஏன் அஸ்வினிக்குமே கூட நன்றாக புரிந்தது.

மெல்ல நடந்து அவர்கள் அருகில் வந்து நின்றான் விஷ்வா. அவனை பார்த்த பரத் தனது அவனை தோளோடு அணைத்துக்கொண்டான்.

'எல்லாத்துக்கும் மேலே எனக்கு இப்படி ஒரு தம்பியை கொடுத்திருக்கீங்களேபா. நீங்க இல்லேன்னா இவன் எனக்கு கிடைச்சு இருக்கவே மாட்டானே!!! நீங்க சொன்ன மாதிரிதான். இவன் எனக்கு பெரிய பலம். பெரிய வரம். நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்பா. முதல்லே இந்த விசேஷம் நல்லபடியா முடிக்கலாம் வாங்க...'

அப்பா, அம்மா, விஷ்வா, ஏன் அபர்ணாவின் கண்களில் கூட கொஞ்சம் கண்ணீர் எட்டிப்பார்த்தது. அவளது அப்பாவுக்கு நிறையவே ஆச்சரியமும், மகிழ்வும்.

'நமது உறவுக்குள்ளேயே வந்துவிட்டானா பரத்!!!' மனதில் ஒரு நிறைவான இதம் பரவ ஒரு முறை பரத்தை தொட்ட அபர்ணாவின் அம்மாவின் பார்வை நேரே சென்று அபர்ணாவை தொட்டு வருடியது.

'ஆங்... போதும், போதும் எல்லாரும் என்னையே பார்த்திட்டு நின்னது. இனிமே இந்த வீட்டிலே நான் வெச்சதுதான் சட்டம். இப்போ முதல்லே எல்லாரும் போய் ரெடி ஆகுங்க போங்க...' அவனது செல்லமான அதட்டலில் எல்லாரும் புன்னகையுடன் கலைய,

'ஏன்டா இப்படி இருக்க???' விஷ்வா அவனை பெருமையுடன் பார்த்தபடியே கேட்க

'சரி சரி போதும் ப்ரதர். இதோட எல்லாத்தையும் முடிச்சுக்க. ஒழுங்கா குளிச்சிட்டு இன்னைலேர்ந்து இந்த வீட்டிலே சாப்பிடற வழியை பாரு..' என்று அவனையும் தள்ளி விட்டான் பரத்.

'வாவ்... கலக்கல்.. என்றபடி அஸ்வினி கைகுலுக்கினாள்.

அபர்ணாவின் அப்பா உட்பட மற்ற உறவுக்கார்களின் இனிமையான வாழ்த்துக்களையும், விசாரிப்புகளையும் வாங்கிக்கொண்டு அவன் நிற்க எல்லாரும் விலகிய பிறகு அவனருகில் வந்தாள் அவன் கண்ணம்மா!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.