(Reading time: 26 - 51 minutes)

'ம்.. தெரியும்......' மெல்ல சொன்ன அபர்ணாவுக்கு ஏதோ புரிவதைப்போல இருந்தது.

'இது... வந்து... நான் எதுக்கு வந்தேன்னா..,, மாமா உன்கிட்டே பணம் கொடுத்து வெச்சிருந்தாரமே அது கேட்டார் இப்போ... அதான்..'

'இரு தரேன்..' என்றபடி தனது வாலெட்டிலிருந்து அதை அவன் எடுக்க அதிலிருந்து கீழே விழுந்தது அந்த சின்ன காகித பொட்டலம். அது நேரே சென்று இந்துஜாவின் காலடியில் சென்று விழுந்தது.

பணத்தை வாங்கிக்கொண்டு 'தாலி கட்டப்போறாங்க விஷ்வா. வா... அவங்களையும் கூட்டிட்டு வா..' சொல்லிவிட்டு நகர்ந்தாள் அபர்ணா.

அந்த பொட்டலத்தை கையில் எடுத்து இந்துஜா அவனிடம் நீட்ட, மென்னகை வந்தது அவன் இதழ்களில். அது சேர வேண்டிய இடத்தில்தான் சேர்ந்திருக்கிறதோ???

'அதை பிரிச்சு பாரேன்... என்றான் விஷ்வா.

அதனுள்ளே மெட்டிகள். மிக அழகான நான்கு மெட்டிகள். ரசிப்புடன் விரிந்தன அவள் இமைகள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா" - சமூக அக்கறையுள்ள குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

'எனக்கு வரப்போற பொண்டாட்டிக்கு நான் வாங்கின முதல் கிஃப்ட் ' என்றான் அவளை பார்த்துக்கொண்டே.. அவள் மெல்ல மெல்ல இமைக்குடைகள் நிமிர்த்த

'அது என்னமோ அவ காலுக்குத்தான் நிறைய வாங்கிக்கொடுக்கணும் தோணுது. மெட்டி கொலுசு, சலங்கை இப்படி...' கண்களை தாழ்த்திக்கொண்டு சிரித்தாள் இந்துஜா.

'பார்க்கலாம்... எல்லாம் சரியா நடக்கட்டும் பார்க்கலாம்..' புன்னகையுடன் சொல்லிக்கொண்டே அந்த மெட்டிகளை வாங்கி உள்ளே வைத்து விட்டு அவளது சக்கர நாற்காலியை நகர்த்திக்கொண்டு நடந்தான் விஷ்வா.

அங்கே அம்மாவுக்கு அப்பா மாங்கல்யத்தை அணிவித்தார். அப்பா. மலர்களும் மங்கள வாத்தியங்களும், ஆனந்த புன்னகைகளும் அங்கே நிறைந்திருக்க பெரியவர்கள் எல்லாருக்கும் ஆசிகள் வழங்கிக்கொண்டிருக்க அழகாய் நிறைவுக்கு வந்தது சஷ்டியப்த பூர்த்தி.

பல வருடங்கள் கழித்து எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு முடித்திருந்தனர். அதன் பிறகு அருண் குடும்பம், அபர்ணாவின் அப்பா, அபர்ணா, விஷ்வா குடும்பம் என எல்லாரும் ஒன்றாக அமர்ந்து பேச ஆரம்பிக்க, மெதுவாக இயல்பாக அங்கிருந்து விலகி தனியே சென்று அமர்ந்தான் பரத்.

இது விஷ்வாவை கொஞ்சம் சுருக்கென தைக்கத்தான் செய்தது. அவன் எப்படி அருணுடன் சகஜமாக வந்து அமர்வானாம்??? தலையை இடம் வலமாக அசைத்துக்கொண்டான் அவன்.

அப்போது அபர்ணாவின் அப்பா மெல்ல துவக்கினார்.

'நம்ம விஷ்வாவுக்கு இந்துவை பிடிச்சிருக்கு போலிருக்கு..' அவர் துவங்கியவுடனேயே அவர் எங்கே வருகிறார் என தெளிவாக புரிந்தது விஷ்வாவுக்கு.

'எப்படியாம்??? எப்படியாம் அது??? பரத்தின் கண் முன்னாலேயே அருண் அபர்ணாவை மணந்துக்கொள்வானாம் நான் இந்துவை மணந்துக்கொள்ள வேண்டுமாம். என் அண்ணன்  உடைந்து போய் இப்போது போல் அப்போதும் தனியாக விலகி செல்ல வேண்டுமா??? நினைக்கும் போதே வலித்தது விஷ்வாவுக்கு. சுளீரென வலித்தது.

'அங்கிள் ப்ளீஸ்...' என்றான் விஷ்வா அவர் பேச்சை இடைமறித்து 'என்னோட கல்யாண பேச்சு இப்போதைக்கு வேண்டாமே..'

'ஏன் விஷ்வா???' பதறி வந்தது அம்மாவின் குரல். 'நான் நல்லா இருக்கும் போதே உனக்கு ஒரு நல்லது நடக்கணும்னு எனக்கு ஆசை... சீக்கிரமா  எனக்கு ஏதாவது ஆகறதுக்குள்ளே...'

'மா...' என்றான் விஷ்வா 'முதல்லே அண்ணன் கல்யாணம் முடியட்டும்..' சற்றே தூரத்தில் அமர்ந்திருந்த பரத்தின் காதுகளில் எல்லாம் விழுந்துக்கொண்டுதான் இருந்தது.

'முதல்லே அண்ணன் கல்யாணம் முடியட்டும்..' விஷ்வா சொல்ல விருட்டென எழுந்தான் அண்ணன். சட்டென அவர்கள் அருகில் வந்தான் அவன்.

'விஷ்வா... என்ன பேசறே நீ.. என் கல்யாணத்துக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்..'

'நீ கல்யாணம் பண்ணிக்காம நான் பண்ணிக்க மாட்டேன். நீதானே அண்ணன் உன் கல்யாணம்தான் முதல்லே நடக்கணும் .' உறுதியாக ஒலித்தது அவன் குரல்.

'விஷ்வா... நான் ரொம்ப நாள் இருக்க மாட்டேனே விஷ்வா... உன் கல்யாணத்தை பார்க்கணும்டா ..' கரைந்துக்கொண்டிருக்கும் குரலில் அம்மா சொல்ல... எல்லாரிடமும் கொஞ்சம் அதிர்ச்சி.

'விஷ்வா... காலையிலேயே கேட்கணும்னு நினைச்சேன் அம்மாக்கு என்ன???' கேட்டான் பரத்.

'ஒண்ணுமில்லை..'

'என்னடா ஒண்ணுமில்லை???' இது விஷ்வாவின் அப்பா. 'அவளுக்கு..'....

'நிஜமாவே ஒண்ணுமில்லை. நான் சொல்றேன் இல்ல. அம்மா ரொம்ப நாள் நல்லா இருப்பாங்க' விஷ்வா உறுதியாக  சொல்ல எதுவுமே புரியாமல் பார்த்தார்கள் பெற்றவர்கள். ஆனால் அதற்கு மேல் கேள்வி எதுவும் கேட்கவில்லை இருவரும்.

'நான் எல்லாருக்கும் சொல்றேன். நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் சொல்லலை. கண்டிப்பா பண்ணிகறேன். ஆனா பரத் கல்யாணம் முடிஞ்சப்புறம்...' இதை அவன் சொல்லும் போது அவன் பார்வை இந்துவின் மீதே இருந்தது. 'ப்ளீஸ்.. இப்போ கட்டாய படுத்தாதீங்க..'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.