(Reading time: 26 - 51 minutes)

சொல்லிவிட்டு இந்துவை பார்த்து தலை அசைத்துவிட்டு அறைக்குள் சென்று அமர்ந்தான் விஷ்வா. அதற்கு மேல் அந்த பேச்சை தொடர தோன்றவில்லை யாருக்கும்.

சில நிமிடங்கள் கடக்க ஒரு சந்தர்ப்பத்தில் அம்மா, அப்பா பரத் மூவரும் சேர்ந்து அறைக்குள் வர,

'அம்மா... ஒரு நிமிஷம்..' என்றான் விஷ்வா. அறையின் கதவை சாத்திவிட்டு அவர்கள் இருவரையும் நிற்க வைத்து அவர்கள் காலில் சாஷ்டங்கமாக விழுந்தான் விஷ்வா.

'என்னை மன்னிச்சிடுங்க ரெண்டு பேரும். நான் உங்ககிட்டே பெரிய பொய் சொல்லிட்டேன். அம்மாவுக்கு ஒண்ணுமில்லை..' ஒன்றுமே புரியாமல் நின்றிருந்தான் பரத்.

'என்னடா சொல்றே???' அப்பா திகைத்து கேட்க எழுந்தான் விஷ்வா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

'அம்மா தலைவலிக்கு காரணம் பெருசா ஒண்ணுமில்லை. சாதரண அனிமியா. அதோட பி.பி கொஞ்சம் ஜாஸ்தி ஆகிடுச்சு அவ்வளவுதான்'

'டேய்.. என்னடா விளையாடுறே... இந்த பத்து பதினைஞ்சு நாளா நிம்மதியே இல்லாம.. என்ன விஷ்வா நீ. நிஜமாவே சொல்றியா .' நம்பவே முடியாமல் அப்பா கேட்க

'அம்மா அண்ணனை ஏத்துக்கவைக்க அவங்களுக்கு வாழ்க்கைன்னா என்னன்னு புரிய வைக்க எனக்கு வேறே வழி தெரியலைபா.. அதனாலே தான் அவங்களுக்கு தலையிலே கட்டின்னு பொய் சொன்னேன். ரிபோர்ட் மாத்தி ரெடி பண்ணேன். தப்புதான் பெரிய தப்புதான். எனக்கு வேறே வழி தெரியலைபா..'

மா.... உன்னை ரொம்ப அழ வெச்சிட்டேன் என்னை மன்னிச்சிடு மா ப்ளீஸ்.மா  .' கெஞ்சலாக கேட்டான் விஷ்வா.

'டேய்... என்னடா பண்ணி வெச்சிருக்க..கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு. அம்மாவுக்கு எவ்வளவு பெரிய டார்ச்சர் தெரியுமா இது??? பரத் பாய சில நொடிகள் மௌனமாக இருந்த அம்மா மெல்ல சொன்னார்

'தேங்க்ஸ் விஷ்வா..'

'மா..  கோவமாமா... ஒவ்வொரு நாளும் நீ அழறதை பார்க்கும் போது நான் நிறைய தடவை நான் செத்து செத்து பிழைச்சிருக்கேன்..'

.கோவம் எல்லாம் இல்லைடா .அம்மாக்கு நிறைய உண்மைகளை புரிய வெச்சிருக்க நிஜமாவே மனசார சொல்றேன். ரொம்ப தேங்க்ஸ் விஷ்வா...' மனதார சொல்லியபடியே இரு மகன்களின் கையையும் பற்றிக்கொண்டார் அம்மா.

நேரம் மாலை நான்கரையை தொட்டிருந்தது!!!!

உறவினர்கள் எல்லாரும் விடைபெற்றுக்கொண்டிருக்க அப்போதுதான் நிகழந்தது அந்த சம்பவம்!!! பரத்தின் கண்ணெதிரே விரிந்தது அந்த காட்சி!!!

கொதித்தது!!!  இல்லை இல்லை பற்றி எரிந்தது!!! இல்லை இல்லை எரிமலையானது பரத்தின் உள்ளம். அங்கே நிகழ்ந்த அந்த காட்சிக்கு அவன் மட்டுமே சாட்சியாக நின்றிருந்தான்.. அதன் பின் அங்கே அடித்து ஓய்ந்தது ஒரு சுனாமி.

விறுவிறுவென அந்த வீட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தான் அருண். அதிர்ச்சியில் உறைந்து போய் தான் நின்றிருந்தாள் அபர்ணா. அருண் இப்படி ஒரு செயலை செய்வான் என கனவிலும் நினைக்கவில்லை அவள். இத்தனை கேவலமாக நடந்துக்கொள்வான் என நினைக்கவில்லை அவள்,

தன்னிலைக்கு வர பரத்துக்கு சில நிமடங்கள் பிடித்தன.

'சரி. கிளம்பு அபர்ணா. நாம உங்க வீட்டுக்கு போயிட்டு முகம் கழுவி, ட்ரெஸ் சேஞ் பண்ணிட்டு ஆடியோ ரிலீஸ் கிளம்பறோம்..'

'வேண்டாம் பரத். நான் இப்போ இருக்கிற மன நிலையிலே..'

'அப்பாகிட்டே சொல்லிட்டு கிளம்புன்னு சொன்னேன். ப்ளீஸ்... நான் எப்பவும் உனக்கு நல்லதை தான் செய்வேன்..' அவனது குரலில் இரும்பின் தன்மை.

அதற்கு மேல் மறுக்க தோன்றவில்லை அவளுக்கு. எதுவுமே நடவாதது போல் அப்பாவிடம் சென்று சொல்லிவிட்டு அவனுடன் காருக்குள் அமர்ந்தாள் அபர்ணா.

இதுவரை கட்டுப்படுத்தி கட்டுப்படுத்தி வைத்த கண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக அவள் கண்களை தாண்டி எட்டிப்பார்த்தது.

'பரத் நான் உங்க கையை கொஞ்ச நேரம் பிடிச்சுக்கலாமா பரத்.. 'எனக்கு ரொம்ப அழுகை வருது

'பிடிச்சுக்கோடா...' அவன் சட்டென சொல்ல அதை பற்றிக்கொண்டவளின் கண்களில் வெள்ளம்...'

அபர்ணாவின் கை அவன் கைகளுக்குள் இருக்க, தேம்பி தேம்பி அழுதுக்கொண்டிருந்தாள் அவள். அவளது ஒவ்வொரு துளி கண்ணீரும் அவனுக்குள் நெருப்பு துண்டங்களாக இறங்கிக்கொண்டிருக்க, அந்த நொடியில், சரியாக அந்த நொடியில் முடிவு செய்துக்கொண்டான் பரத்

'அருண் இனிமேல் அவள் வாழ்வில் வரப்போவதில்லை என!!!!'

கிட்டத்தட்ட கால் மணி நேரம் கடந்திருக்க சுதாரித்தாள் அவள். கண்களை துடைத்துக்கொண்டு நிமிர்ந்தாள் அவள்.

'பரத் அருண் செய்தது எங்க வீட்டிலே யாருக்கும் தெரியவேண்டாம். ப்ளீஸ்... .'

ஏன்??? ஏன் தெரிய வேண்டாம்??? என்ன செய்ய போகிறாளாம். மறக்க போகிறாளாமா எல்லாவற்றையும்??? அவனை மன்னிக்க போகிறாளாமா???' கொதித்தது அவனுக்குள்ளே.

'நீ மறக்கலாம் கண்ணம்மா. நீ மன்னிக்கலாம் அவனை. நான் மன்னிக்க மாட்டேன். என்னால் இதை மறக்க முடியாது. திஸ் இஸ் மை பிரேகிங் பாயின்ட் கண்ணம்மா... எல்லாம் முடிஞ்சு போச்சு. இனி நான் என்ன வேணும்னாலும் செய்வேன்.. எந்த நிலையிலும் உனக்கு தாலி கட்டப்போறது நான்தான் அவனில்லை...' அவளிடம் கத்த வேண்டும் போல் இருந்தது பரத்துக்கு.

'செய்யவில்லை அவன். எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளவில்லை!!!'

'அடித்த பத்திரிக்கைகள் அடித்ததாகவே இருக்கட்டும். கொடுத்த பத்திரிக்கைகள் கொடுத்ததாகவே இருக்கட்டும். ஆனால் இனி  நடக்க போவது வேறே கதை..' முடிவெடுத்துக்கொண்டான் பரத்.

தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அவளிடம் வெகு இயல்பாக கேட்டான் 'நாம கிளம்பலாமா அபர்ணா. ஃப்ங்ஷனுக்கு டைம் ஆச்சு..'

மை டியர் ஃபிரண்ட்ஸ்.

ஒரே நாளிலே படபடன்னு எழுதின எபிசோட். ஸ்பெல் செக் பண்ண டைம் இல்லை. ஏதாவது தப்பு இருந்தா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. waitng for your comments. Thanks thanks thanks.

Episode # 14

Episode # 16

தொடரும்......

{kunena_discuss:982}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.