(Reading time: 14 - 27 minutes)

ங்க நம்ம குட்டிசாத்தான காணோம் என்று அவனறியாமலே மனம் அவளை தேட..உள்ளேன் ஐயா என சரியாக அங்கு வந்து சேர்ந்தாள் சஹானா..என்ன நடக்குது இங்க???காலைலேயே ஒரே பேச்சும் சிரிப்புமா இருக்கு ம்ம்ம் எனன்று வந்து அவனருகில் இருந்த இடத்தில் அமர்ந்தாள்..

ஹாய் சஹானா..வீட்டுல பங்ஷன் கண்டிப்பா வரணும் என குங்குமத்தை நீட்ட ..கண்டிப்பா வருவேன் ஷரவ் என்று கூறி சிரித்தாள்..அங்கிருந்த சில நிமிடங்களில் பெண்கள் இருவரும் நண்பர்களாகிவிட போன் நம்பர் எக்ஸ்சேண்ஞ்ச் வரை நடந்துவிட்டது..

அவர்கள் விடைபெற்று செல்ல,சேகர் துளசியிடம் நல்ல குடும்பம் துளசி பாரு ரெண்டு புள்ளைங்களும் எவ்ளோ பொறுப்பா இருக்காங்கநு..ஆமா சிவா நீயும் வரதான..வேணா எங்களோடேயே வந்துரேன்..

இல்ல சித்தப்பா அப்பா அம்மாவயும் கூட்டிட்டு நா நேராவே வந்துரேன்..சஹானா அவனை சின்னதே சின்னதாய் ஒரு சந்தேக பார்வை பார்க்க..ஐயோ குட்டிசாத்தான் ஸ்மெல் பண்ணிட்டாளே சிவா சிக்கிறாத கிளம்பு என்று தன்னை தானே எச்சரித்து கொண்டுஅங்கிருந்து நழுவி விட்டான்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதுவின் "மார்பில் ஊறும் உயிரே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

அந்த அழகான நாளும் வந்தது..உறவினர்களோடு கோவில் சடங்குகளை முடித்துவிட்டு மற்ற விருந்தினர்களை வரவேற்பதற்கான வேலைகளை கவனித்து கொண்டிருந்தான் கார்த்திக்..அவன் வேலை சம்பந்தபட்டவர்களெல்லாம் வருவார்களென்பதால் வாசலிலேயே நின்றிருந்தான்..சிறிது நேரத்தில் சிவா அவன் அப்பா அம்மாவோடு உள்ளே வர இவனுக்கோ ஆச்சரியம்..ஏனெனில்,இரண்டொருமுறை அவன் தந்தையிடம் பேசியிருக்கிறான் அவ்வளவே அப்படியிருக்க இவன் சிவாவை அழைத்ததை வைத்து குடும்பத்தோடு வந்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும் ஏனோ ஷரவந்தி தான் காரணமோ என்று தோன்றியது..சிந்தனை அனைத்தையும் ஒதுக்கி அவர்களை இன்முகத்தோடு வரவேற்றான்..தன் பெற்றோரிடம் அறிமுகப்படுத்தி விட்டுஅவர்களை கவனிக்க தொடங்க,சிவாவோ,கார்த்திக் நீங்க போய் மத்தவங்கள கவனிங்க நமக்குள்ள நோ பார்மாலிடீஸ்..

இருப்பினும் அவனால் அப்படி விட முடியவில்லை..யாரையோ கூப்பிட திரும்பியவனிடம் ஏதோ கேட்பதற்காக ஷரவந்தி வர,ஷரவந்திம்மா இவங்கள பாத்து கவனிச்சுக்கோ,சாப்ட கூட்டிட்டு போ..என்றான்..

சரிண்ணா நீ போய் மத்தவங்கள கவனி..நா பாத்துக்குறேன் என்றவாறு சிவாவையும் அவன் பெற்றோரையும் பார்த்து புன்னகைத்தாள்..அவர்களோ தங்களுக்குள் அர்த்தமுள்ள பார்வையை பரிமாறி கொண்டடனர்..

உன் பேர் என்னம்மா??என்ன பண்ணிட்டு இருக்க?-சிவாவின் அம்மா..

ஷரவந்தி ஆன்ட்டி..இப்போ தான் டீச்சர் ட்ரெய்ணிங் முடிச்சுட்டு பல்லாவரம் ஸ்கூல்ல டீச்சரா வொர்க் பண்ணிட்டு இருக்கேன்..வாங்க ஆன்ட்டி சாப்ட்டுடே பேசலாம்..என அவர்கள் பேசியபடி நடக்க சிவாவிற்கோ அவளை தவிர யாருமே கருத்தில் பதியவில்லை..

இங்கு நிலைமை இவ்வாறாக இருக்க அங்கு கார்த்திக் வாசலை அடைந்த நேரம் சேகரின் கார் உள்நுழைந்தது..சேகர் துளசியை தொடர்ந்து இறங்கியவளை பார்த்து ஒரு நிமிடம் இமைக்கவும் மறந்துதான் போனான்..அழகான கடல்நீல நிற காக்ரா சோலியில் ஒயிலாய் வந்தவளை பார்த்து பேச்சிழந்திருந்தான்..ஏனோ ஒவ்வொரு முறையும் அவனறியாமல் அவள் வசம் மனம் போவதை அவனால் தடுக்க முடியவில்லை..

வாங்க சார் ரொம்ப தேங்க்ஸ் நீங்க வந்ததுக்கு..வாங்க மேடம் வாங்க சஹானா..

என்னப்பா தேங்க்ஸ்லா சொல்லிட்டு..நாம அப்படியா பழகுறோம்..

ம்ம்,.என்ன கார்த்திக் அப்பா அம்மாக்கு மேரேஜ்ஜா இல்ல உங்களுக்கா??என்று அவனை ஏறயிறங்க பார்த்தாள்..

வழக்கமான புன்னகையோடு அவர்களை உள்ளே அழைத்து செல்ல சஹானாவிற்கோ மனம் அவனையே சுற்றியது..சிவப்பு வண்ண சில்க் காட்டன் சட்டையும் வேஷ்ட்டியுமாய் அம்சமாய் நின்றவனை பார்த்தவளுக்கு கண்களை நகர்த்துவது மிகவும் கஷ்டமாகதான் இருந்தது..அதன்பின் அவனது கவனிப்பும் அவன் குடும்ப சூழலும் அவளை வெகுவாய் கவர அவனையே நோட்டமிட்டு கொண்டிருந்தாள்..கீதா அவளிடம்,என்ன சஹானா எப்படியிருக்க??சென்னைலா செட் ஆய்டுச்சா??

எங்க ஆன்ட்டி ஏதோ பரவால்ல..பட் ப்ரெண்ட்ஸ் இல்லாம போர் அடிக்குது..

அதுக்கென்னம்மா இங்க வந்துரு ஷரவந்தியும் நாலு மணிக்குலா வந்துரா..உனக்கும் டைம் பாஸ் ஆன மாறியிருக்கும்ல..

ஹே ஆமா சஹானா நானும் ஈவ்னிங்ல வெட்டிதான்..நாம இங்க பக்கத்துல எங்கேயாவது கூட போய்ட்டு வரலாம்..

கண்டிப்பா வரேன் ஆன்ட்டி யு ஆர் சோ ஸ்வீட்..

அட அதனாலதான் அடிக்கடி என்ன எதாவது கடிச்சுட்டேயிருக்கா..

ப்பாப்பாபா செம கடி..நீங்க காலேஜ் பொண்ணு மாறி மொக்க போட்டுட்டு இருக்கீங்க உங்களுக்கு சஷ்டியப்த்தபூர்த்தினா நம்ப முடில போங்க..

ஹஸ்பண்ட்க்கு 60 வயசு ஆனா பண்றதுதான..சோ நா இன்னும் யெங் தான் என்ன சொல்ற..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.