(Reading time: 14 - 27 minutes)

மை காட் யு ஆர் சான்ஸ்லெஸ் ஆன்ட்டி..என்று கூறி சிரிக்க கீதாவிற்கு சற்று நேரத்திற்கு முன் உள்நுழைந்த தன் மகனும் சஹானாவுமே மனக்கண்ணில் நின்றனர்..பேராசைதான் என்று தெரிந்தும் ஏனோ அந்த நினைவை அவரால் ஒதுக்க முடியவில்லை..

சேகர் வீட்டிற்கு வந்துமே கார்த்திக்கையும் அவன் குடும்பத்தை பற்றியுமே பேசி கொண்டிருந்தார்..சஹானாவோ என்னவோ நினைவில் இருந்தாள்..தன் அறைக்கு வந்தவளுக்கு காலை முதல் நடந்த அனைத்தையுமே தன்னுள் ரீவைண்ட் செய்து கொண்டிருந்தாள்..கார்த்திக் என்ற ஒருவனை முதன்முதல் சந்தித்ததிலிருந்து இன்று வரை அவனின் ஒவ்வொரு செயல்களையும் நினைத்து கொண்டாள்..பெரும்பாலான நேரம் அவனின் பதில் அந்த அழகான புன்னகையாகத்தான் இருக்கும்..இன்று காலை கூட யாரோ ஒருவருடன் பேசி கொண்டிருக்க அவர் ஏதோ கூறினார் போலும் தன் பற்கள் தெரிய சிரித்தவனின் கண்களுமே அந்த சிரிப்பை பங்கிட்டு கொண்டது..உணவு பரிமாறும் போது போன் பேசியபடியே அவளிடம் கண்ணாலேயே வேண்டுமா என்று கேட்டவிதம் அந்த நேரம் அவன் கண்ணை நேராக சந்திக்க பெரும் பாடுபட்டாள்..சற்று நேரத்தில் சுயநினைவிற்கு வந்தவள்..தன்னைதானே கடிந்து கொண்டு உறங்க சென்றாள்..

நாட்கள் இனிமையாய் கழிய ஷரவந்தியும் சஹானாவும் நல்ல நண்பர்களாகியிருந்தனர்..குறுஞ்செய்தி அனுப்புவதும்,எப்போதாவது பேசி கொள்வதும் என நன்கு பழகிவிட்டனர்..இதற்கிடையில் கார்த்திக்கை அந்த பங்ஷனில் பார்த்த பிறகு பார்க்கவேயில்லை..அவ்வப்போது தன்னையறியாமல் அவன் சிந்தனை எழுந்தாலும் கஷ்டப்பட்டு அடக்கி கொண்டாள்..அன்று ஏதோ காரணத்திற்காக ஷரவந்திக்கு பள்ளி விடுமுறையாய் இருக்க பேசும் போதே சஹானாவை வீட்டிற்கு அழைத்தாள்..சஹானாவிற்கும் ஏனோ மாறுதல் வேண்டியதாயிருந்தது..எப்படியும் கார்த்திக் இருக்க மாட்டான் எனவே போய் வரலாமென முடிவு செய்து துளசியிடம் கூறிவிட்டு காரை எடுத்து கொண்டு கிளம்பினாள்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

மதிய வேளை என்பதால் ட்ராபிக் கம்மியாக இருக்க சுலபமாய் வந்தடைந்தாள்..வந்தவள் காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருக்க அப்போதுதான் ஷரவந்தியிடம் அவள் வருவதை கூறவில்லை என்றுரைக்க சரி சர்ப்ரைஸ்ஸாக இருக்கட்டும் என காத்திருந்தாள்..கதவு திறப்பதற்கான அறிகுறியே இல்லாததால் மறுபடியும் காலிங் பெல்லை அழுத்திவிட்டு லேசாய் கதவில் சாய்ந்தவாறு நின்றாள்..ஐந்து நிமிடத்தில் கதவு திறக்கப்பட எதிர்பாராமல் நடந்ததில் சட்டென தடுமாறி உட்புறம் அவள் சாய இறுக பற்றி நிறுத்தியது ஒரு கரம்..தன்னை சமாளித்து நிமிர்ந்தவள்..தேங்க்…ஏதோ சொல்ல வாயெடுத்து வாயடைத்து நின்றாள்..தன் முன் வெற்று மார்போடு ஒரு புறம் மட்டும் துண்டை போட்டபடி  த்ரீ போர்த் பேண்ட்டோடு நின்ற கார்த்திக்கை கண்டு இமைகள் துடிக்க சட்டென நகர்ந்து நின்றாள்..அவனும் அவளை இங்கு  எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் விழியே உணர்த்த சட்டென துண்டை இருபுறமும் போட்டு கொண்டான்..

ஹலோ சஹானா என்ன ப்ளசண்ட் சர்ப்ரைஸ்..என இயல்பாய் கேட்க..அவளும் ஓரளவு சுதாரித்து கொண்டு ம்ம் நீங்க இப்படி மாடலிங் லா பண்றீங்கநு கேள்விபட்டு அத பாத்துட்டு போலாமேநு தான் வந்தேன் என சீரியஸாய் கூற அவன் கண்கள் குறும்பு சிரிப்பை சிந்தியது..அதை கண்டும் காணாமல் அவனை தாண்டி உள் நுழைந்தாள்..கதவை திறக்க போனவனை காணோமே என்று வந்த ஷரவந்தி சஹானாவை கண்டதும் உற்சாக குரல் கொடுத்தாள்..

ஹே சஹானா வாங்க வாங்க மார்னிங் பேசினப்ப கூட ஒண்ணும் சொல்லல..

ஏன் டீச்சர்கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டுதான் வரணுமா??

ஐயோ தெரியாம கேட்டுட்டேன் வாங்க..

பேச்சு சத்தத்தில் ஷரவனும் கீதாவோம் வெளியே வர இருவருக்குமாய் ஒரு ஹாய் கூறினாள்..அன்னைக்கே கேக்கனும்னு நெனச்சேன்..ஷரவன் நீங்க டுவின்ஸ்னு கேள்வி பட்டேன்..பட் நிறைய டிவ்ரெண்ஸ் இருக்கே எப்படி??

எல்லா டுவின்ஸும் ஒரே மாறி இருக்க மாட்டாங்க சஹானா..நாங்க நான் ஐடென்டிகல் டுவின்ஸ்..சோ ஈஸியா டிவ்ரண்ஷியேட் பண்ணிட முடியும்..

ஓ,.என்ன ஸ்வீட்டி ஆன்ட்டி வீட்டுக்கு வந்தவங்களுக்கு காபிலா கிடையாதா??

அதற்குள் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிவிட்டு வந்த கார்த்திக்கை தவிர அனைவரும் அவள் கூறியதற்கு சிரிப்பாய் பார்க்க..அவனோ கேள்வியாய் பார்த்தான்..ஷரவந்தி அதன் காரணத்தை விளக்க தலையை இடவலமாக ஆட்டியவாறு அங்கிருந்து நகர்ந்தான்..

அதன் பிறகு சிறியவர்கள் மூவரும் ஏதேதோ கதையடித்து கொண்டிருக்க கீதா கிட்சனில் ஏதோ வேலையாக இருந்தார்..கார்த்திக்கோ டீவி பார்ப்பதாய் காட்டி கொண்டு அவர்களின் உரையாடலிலேயே கவனம் பதித்தான்..அதிகபட்சம் பேசுவது யாரென்று கூறவா வேண்டும்..சஹானா திறந்த வாய் மூடாமல் அவள் பெங்களுரு சரித்திரத்தை விவரித்து கொண்டிருக்க மற்ற இருவரும் தலையாட்டி பொம்மைகளாய் மாறியிருந்தனர்..

அதை பார்த்தவனுக்கோ தன் தம்பி தங்கையை நினைத்து பாவமாயிருந்தது..என்ன பொண்ணுடா இது இப்படி பேசுறா வாய் வலிக்கவே வலிக்காதா..என தீவிர ஆராய்ச்சியில் இருந்த நேரம் மதிய தூக்கம் முடிந்து மோகன் கீழே வந்தார்..வாம்மா சஹானா எப்போ வந்த??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.