(Reading time: 19 - 38 minutes)

ருமுறை ரிஷபின் டிபார்ட்மென்ட்க்கு இவளோடு பள்ளியில் படித்த தோழியை பார்க்க நர்மதா சென்றிருந்தாள்... கூட இவளோடு படிக்கும் தோழிகளும் சென்றிருந்தனர்.. அந்த தோழியோடு பேசிவிட்டு, எல்லோரும் மாடி படியிறங்கும் போது... அந்த தோழி இவளிடம் ஏதோ கேட்க... படியில் இறங்கியப்படியே அந்த தோழியைப் பார்த்து ஏதோ பேச, கால் இடறி கீழே விழப் போனவளை தாங்கிப் பிடித்தான் ரிஷப்...

இவள் கீழே விழுந்த அதிர்ச்சியும், மிரட்சியுமாக அவனை பார்க்க... "பார்த்து நர்மதா.. எங்கேயோ பார்த்துக்கிட்டு இறங்குற.. இந்நேரம் கீழே விழுந்தா என்னாயிருக்கும்.." என்றான்.

"ஏதோ கவனிக்காம வந்துட்டேன் ஸாரி.." என்றவள், அவன் அடுத்து பேசும் முன்னரே வேகமாக கீழிறங்கி வந்துவிட்டாள்..

"ஹேய் என்னடி இது..?? சீனியர் உன்னோட பேரைச் சொல்லி கூப்ட்றாரு.. உனக்கு ஒன்னுன்னா.. உடனே காப்பாத்த வந்துட்றாரு... என்னடி நடக்குது..??" என்று தோழிகள் இவளை கிண்டல் செய்தனர்...

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

அதுபோல் அடிக்கடி ரிஷபை பார்க்கும் போதெல்லாம் இவளை அவனுடன் சேர்த்து வைத்து பேசி கிண்டல் செய்வர்... எதேச்சையாக ஒரே கலர்ல ட்ரஸ் போட்டுக்கிட்டு வந்தா.. ஹேய் மேட்சிங் மேட்சிங் என்பர்..

"போங்கடி உங்களுக்கு வேற வேலையில்லை.." என்று இவள் அதை பொருட்படுத்தவில்லையென்றாலும், மனதிற்குள் சந்தோஷ அலை அடிக்கும்...

ஒருமுறை கல்லூரியில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்... அதில் பங்கெடுப்பவர்கள் பெயர்களை குறித்துக் கொள்ளும் பொறுப்பை, இவர்கள் டிபார்ட்மென்ட் சீனியரிடம் ஒப்படைத்திருந்தனர்.. அப்போது அந்த பெண்ணிடம் ஏதோ சந்தேகம் கேட்க நர்மதா அங்கு செல்ல, யாராவது பேர் கொடுக்க வந்தா.. இந்த நோட்ல எழுதிக்கோ.. இதோ வரேன்.." என்று சொல்லிவிட்டு அந்த பெண் சென்றுவிட்டாள்...

அப்போது அங்கே ரிஷபின் நண்பர்கள் ஏதோ நாடகம் நடத்த, பேர் கொடுக்க வந்திருந்தனர்... எல்லோருடைய பெயர்களையும் சொன்னவர்கள்... ஹேய் ரிஷப் பேரையும் கொடுப்போமா..?? அவன் என்ன சொன்னான்.. என்று ஒருவன் கேட்க... நாமளே கொடுப்போம்... அப்புறம் அவன் வேண்டாம்னு சொன்னா, கேன்சல் பண்ணிக்கலாம்.. என்று ரிஷபின் முழுப்பெயரை கூறினார்கள்...

"ரிஷபசெல்வன்.. ஒருமுறை அந்த பெயரை உச்சரித்துப் பார்த்தாள்... நல்லா இருக்கே இந்த பேர்.. என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.. மனதிற்குள் ரசித்தப்படியே அந்த பெயரை எழுதினாள்.

இப்போதெல்லாம் அவனை அடிக்கடி பார்க்கும் சந்தர்ப்பங்கள் அவளுக்கு அமைந்தது... அந்த சமயங்களில் அவர்கள் எதுவும் பேசிக் கொண்டதில்லை... வெறும் பார்வை பரிமாற்றங்கள் தான்... ஆனால் அதுவே அவனுடன் ஆயிரம் கதைகள் பேசிய உணர்வை அவளுக்கு கொடுத்தது. அத்தோடு எப்போதாவது இவளை பார்த்து புன்னகைப்பான். ஏனோ மனசுக்குள் சாரல் மழை அடிக்கும்..

ஏன் எல்லோரிடமும் பேசுவது போல் இவனுடன் பேச தோன்றவில்லை என்று நினைப்பாள்... அவன் மத்தப் பொண்ணுங்கக்கிட்ட பேச மாட்டான் இல்ல.. அதான் எனக்கும் அவன் கூட பேச தோனல போல.. என்று நினைத்துக் கொள்வாள்... ஆனா அவனை பார்க்கும் போது ஒரு சந்தோஷம் தோனுதே... அது ஏன் என்று அவள் யோசித்ததில்லை... ஆனால் அதை யோசிக்கவும் ஒரு நாள் வந்தது.

இப்படியே அவனோடு மௌனமாய் கண்களால் பேசிக் கொண்டிருந்தவளுக்கு ஒரு செமஸ்டர் முடிந்து சில நாட்கள் விடுமுறையை கடத்துவதற்கு பெரும்பாடாய் இருந்தது... பின் இரண்டாவது செமஸ்டரில் அடியெடுத்து வைத்தபோதும் இதே தான் தொடர்ந்துக் கொண்டிருந்தது..

இரண்டாவது செமஸ்டரிலும் சில நாட்கள் இப்படியே போக... திடிரென்று இரண்டு மாதங்கள் அவன் கல்லூரிக்கு வரவில்லை... நேரடியாகவும் யாரிடமும் கேட்க முடியவில்லை... தோழிகள் பேசியதை வைத்து, அவன் குடும்பத்தில் ஏதோ பிரச்சனை, வீட்டிலிருந்தபடியே படித்துக் கொண்டிருக்கிறான்... நிலைமை கொஞ்சம் சரியானதும் வருவான் என்ற தகவல் கிடைத்தது...

ஏனோ அவனை பார்க்காமல் இருப்பது கஷ்டமாக இருந்ததது அவளுக்கு... அதை வெளியிலும் காட்டிக் கொள்ள முடியவில்லை... ஒருபக்கம் படிப்பு, தோழிகளோடு நேரத்தை செலவழிப்பது என்றிருந்தாலும், இன்னொரு பக்கம் அவன் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள்... அந்த நேரங்களில் ரிஷப் மேலே இவளுக்கு இருப்பது காதல் என்று உணர்ந்தாள்.

அந்த இரண்டு மாதம் கஷ்டத்திற்குப் பிறகு மீண்டும் அவன் கல்லூரிக்கு வந்த போது சொல்ல முடியாத ஆனந்தம் நர்மதாவிற்கு... ஆனால் திரும்ப வந்த ரிஷபோ முன்பு போல் அவள் பார்வையில் அடிக்கடி படுவதில்லை... இவளுக்கோ அவனை அடிக்கடி பார்க்க ஆவல் பிறக்கும்... இரண்டு மாத விடுப்புக்கு பின் வந்திருக்கிறான்... படிக்க நிறைய இருக்கும்... அதனால் தான் பார்க்க முடிவதில்லை என்று தன்னை சமாதானப்படுத்திக் கொள்வாள்.

ஆனால் இரண்டாவது செமஸ்டர் முடியும் தருவாயும் வந்தது... இவளுக்கு இது இரண்டாவது செமஸ்டர் என்றால், அவனுக்கு இறுதி செமஸ்டர்.. அதன்பின் அவனை இவளால் பார்க்கவே முடியாது... இதுவரையுமே அவனுடன் பேசும் சந்தர்ப்பமே கிடைத்ததில்லை... அப்படியிருக்க இந்த கல்லூரியை விட்டு அவன் சென்றதும் அவனை எப்படி தொடர்புக் கொள்ள என்று நினைத்தவள்... அவனிடம் காதலை சொல்ல முடிவெடுத்தாள்..

அன்று அவர்கள் கல்லூரியில் பிரிவு உபசார விழா... அதில் எல்லோரும் பங்கெடுத்திருந்தனர்... அதன்பின் ஸ்டடி ஹாலிடேஸ், எக்ஸாம் என்று ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதே கஷ்டம் என்பதால், அன்றே தன் காதலை சொல்ல முடிவெடுத்தவள், தைரியமாக ஒரு கீரிட்டிங் கார்டை வாங்கி, அதில் தன் மனதில் இருப்பதை எழுதி, ரிஷப் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த போது கொடுத்துவிட்டாள்.

ஒரு பெண் தன் மனதில் இருப்பதை சொல்லாமல் மறைத்து வைத்தாள் அழுத்தக்காரி என்பர், மனதில் இருப்பதை தைரியமாக சொன்னால், திமிர் பிடித்தவள் என்பர்... இவளுடைய காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது கட்டாயம் அல்ல... வேண்டாமென்று நிராகரித்தால், இவள் அவனை கட்டாயப்படுத்த போவதில்லை... ஆனால் அவன் வேண்டாமென்று மறுக்க மட்டுமில்லை. இவளாக சொன்னதாலோ என்னவோ இவள் காதலை அலட்சியப்படுத்தினான்.

"நாம ரெண்டுப்பேரும் பேசியிருக்கோமா..?? எப்படி என் மேல உனக்கு காதல் வந்துச்சு... அன்னைக்கு அந்த பையன் கிட்ட இருந்து காப்பத்தினினே அப்பவா... ??" என்றுக் கேட்டான்..

இவளுக்கு அவன் மேல் எப்போது காதல் வந்தது என்று எப்படி சொல்வது? என்று அவள் தடுமாற...

"அப்பவா இல்ல நான் பணக்காரன்னு தெரிஞ்சப்பவா..??" என்று அவன் கேட்டதும் அதிர்ந்தாள்...

அவன் நண்பர்கள் சூழ்ந்திருக்க, இவள் காதலை சொல்லப் போவது தெரிந்து, இவளின் தோழிகள் அங்கு வந்திருக்க... இன்னும் சிலபேர் அங்கிருக்க, எல்லோர் முன்னிலையிலும் அவன் அப்படி கேட்டான்... அதற்குள் அவன் நண்பன் ஒருவன்,

"டேய் என்னடா பேசற... உனக்கு இஷ்டம் இல்லன்னா... விட்று... அதுக்கு இப்படியா பேசுவ..??" என்றுக் கேட்டதும்,

"டேய் உனக்கு தெரியாதுடா.. நான் பணக்காரன்னு தெரிஞ்சதனால தான் என்னை லவ் பண்றேன்னு சொல்லி இவளாவே சொல்றா... இல்லன்னா பொண்ணுங்களே நேரா காதலிக்கிறேன்னு சொல்வாஙளா..?? நாம தானே பின்னாடி அலையனும்...

அப்படி தானே ஒருத்தன் இவ பின்னாடி அலைஞ்சான்.. அவனை லவ் பண்ணாளா..?? அலைய விட்டாள்ள.. என்கிட்ட மட்டும் காதலிக்கிறேன்னு இவளே சொல்றா.." என்றவன்...

"இங்கப்பாரு... நீ நினைக்கிற மாதிரி நான் பணக்காரன் இல்ல.. நீ வேற யாராவது பணக்காரனா பார்த்து லவ் பண்றது பெஸ்ட்..." என்றான் இவளைப் பார்த்து..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.