(Reading time: 19 - 38 minutes)

"நானாக வந்து சொன்னதால தானே என்னோட காதல் உங்களுக்கு அலட்சியமா தெரியுது... போதும் ஒருதடவை அசிங்கப்பட்டதே போதும்.. ஸாரி உங்களை டிஸ்டர்ப் பண்ணதுக்கு.." என்று சொல்லிவிட்டு, விறுவிறுவென்று அங்கிருந்து சென்றுவிட்டாள்...

"டேய் எதுவா இருந்தாலும், இத்தனை பேர் முன்னாடியா சொல்வ..??" என்று அவனுடைய நண்பர்கள் கேட்பது இவள் காதில் விழுந்தது.. இவளின் தோழிகளோ.. ஏய் நாங்க ஏதோ சும்மா அந்த ரிஷப் கூட உன்னை வச்சு கிண்டல் பண்ணோம்.. நீ சீரியஸாகவே லவ் பண்ண ஆரம்பிச்சிட்டியா...?? சரி அதுக்காக இத்தனை பேர் முன்னாடியா லவ்வ சொல்லுவ... பாரு எப்படி அசிங்கப்படுத்திட்டான்னு.." என்று அவர்கள் சொல்லும்போது கூனி குறுகிப் போனாள்.

அதன்பின் தேர்வு முடியும் வரையிலுமே கல்லூரிக்கு செல்லும் போதெல்லாம் மற்றவர்கள் கேளியாக பார்ப்பது போல் தோன்றும்... அந்த ரிஷபை அதன்பின் அவள் சந்திக்கவே இல்லை.

இதன் நடுவில் இவள் தந்தைக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால், விடுமுறை எடுத்து வீட்டில் ஓய்வெடுத்தார்... திரும்ப அவர் விடுமுறை முடிந்து பள்ளிக்கு செல்லும்போது அவரை தனியாக விட இவள் அன்னை விரும்பவில்லை.. உடல்நிலை சரியில்லாத நேரத்தில், வெளிச்சாப்பாடு நல்லதில்லை என்பதால், இவர்களும் காஞ்சிபுரம் செல்ல முடிவெடுத்தனர்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஆதியின் "பார்த்தேன்... ரசித்தேன்..." - Some thing Some thing... உனக்கும் எனக்கும்...

படிக்க தவறாதீர்கள்..

இந்த கல்லூரியிலிருந்து விலகி, வேறொரு கல்லூரியில் சேரும்படி மல்லிகா சொன்னபோது, சாதாரணமாக இருந்திருந்தால் மறுத்திருப்பாள்... ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடந்ததால், திரும்ப அந்த கல்லூரிக்குப் போக விரும்பாமல், வேறொரு கல்லூரியில் சேர்ந்தாள்.

பின் பி.எட் படிக்கும்போது தான், குமாரசாமிக்கும் பணி மாற்றம் கிடைக்க, திரும்ப சென்னைக்கே வந்தார்கள்... அப்போதும் அந்த ரிஷபை பார்க்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டாள்.

பின் படிப்பு முடிந்து, வேலையில் சேர்ந்ததும் தான் யமுனாவின் நட்பும், இளங்கோவின் நட்பும் இவளுக்கு கிடைத்தது... அதுவும் யமுனாவோடு ஒரு ஆழமான நட்பு உருவானது..

படிப்பும் முடிந்து வேலைக்கு சேர்ந்ததால், இவள் திருமணம் குறித்து வீட்டில் பேச்சு வந்தது... என்னத்தான் அந்த ரிஷப், இவளின் காதலை உதாசீனப்படுத்தினாலும், இவள் உண்மையாக தானே அவனை காதலித்தாள்... அதனால் திருமணம் வேண்டாமென்று மறுத்தாள்... என்ன காரணம் என்று பெற்றோர்கள் கேட்ட போது, இவளால் சொல்ல முடியவில்லை..

ஒருவேளை தங்களிடம் சொல்ல தயங்குகிறாளோ..?? என்று நினைத்தவர்கள், யமுனாவிடம் சொல்லி இவளிடம் பேசச் சொன்னார்கள்...

அப்போது தான் ரிஷப் பற்றி யமுனாவிடம் நர்மதா கூறினாள். உன்னை அலட்சியப்படுத்தினவனை நினைச்சு, உங்க அம்மா, அப்பாவை கஷ்டப்படுத்தாத.. நல்ல முடிவா எடு.." என்று யமுனா சொன்னதும், இவளும் நன்றாக யோசித்து அதன்பின் தான் திருமணத்துக்கு சம்மதித்தாள்...

ஆனால் இவள் சம்மதம் சொன்னதும், அவசரமாக இந்த திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், உடனே அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் இவள் தவிக்க... இப்போதோ இந்த ரிஷப் வந்து நிற்கிறான்.

லைபேசியில் மணி அடித்ததும், பழைய நினைவுகளிலிருந்து மீண்டாள் நர்மதா.. யமுனா தான் அழைத்திருந்தாள்..

"ஹலோ சொல்லு யமுனா.."

"என்னடி மாப்பிள்ளை வீட்ல இருந்து வந்தாங்களா..?? துஷ்யந்த் வந்தாரா..??"

"இல்லை யமுனா... துஷ்யந்தோட அம்மா, அத்தை அப்புறம் அவரோட தம்பி தான் வந்தாங்க... பத்திரிக்கை அடிக்கிற விஷயமா பேசிட்டுப் போயிட்டாங்க.." என்றாள்.

"ஓ ஏதாவது இன்ட்ரஸ்ட்டா இருக்கும்.... பேசலாம்னு நினைச்சேன்.. சரி பரவாயில்ல நாளைக்கு ஸ்கூல்ல பார்க்கலாம்.." என்று அழைப்பை கட் செய்தாள் யமுனா..

இப்போது கூட அந்த துஷ்யந்த் வரலையே.. நர்மதாவை நேர்ல பார்க்க அவனுக்கு ஆர்வமில்லையா..?? இல்லை அம்மா பார்த்த பொண்ணு நல்லா தான் இருப்பா என்ற நம்பிக்கையா..?? என்று யோசித்தாள்.

இங்கு நர்மதாவோ... ரிஷப் தான் துஷ்யந்தின் தம்பி என்று யமுனாவிடம் சொல்லலாமா..?? என்று யோசித்தவள், இதனால் நாம குழம்பறது போதாதா..?? யமுனாவை வேற குழப்பனுமா..?? அதனால் இதைப்பற்றி அவளிடம் சொல்ல வேண்டாம்... நடப்பது நடக்கட்டும் என்று நினைத்தாள்.

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 07

Episode # 09

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.