(Reading time: 12 - 23 minutes)

புகழ் இல்லாமல் இரண்டு நாட்கள் இரண்டு யுகங்களாய் கடந்தன யாழினிக்கு. அவளின் மனமறிந்தவன் போல, புகழும் அவ்வப்போது அவளிடம் கைப்பேசியின் மூலம் பேசினான்தான்.

ஆனால், இப்போது பல மணி நேரங்கள் கடந்தும் அவனிடமிருந்து அழைப்பு வரவில்லை என்றதும் பதட்டமாக இருந்தது அவளுக்கு. வழக்கம் போல ஜீன்ஸ் ஷர்ட் அணியாமல், சுடிதார் அணிந்து கொண்டு காலேஜிற்கு சீக்கிரமாகவே கிளம்பியிருந்தாள் யாழினி.

“அப்பா”

“என்ன யாழினி? சீக்கிரம் கிளம்பிட்ட மாதிரி இருக்கு?”

“அதான்பா.. அதப்பத்தி தான் சொல்ல வந்தேன்..”

“ம்ம் சொல்லு”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

லேகாவின் "தவமின்றி கிடைத்த வரமே..." - காதல் கலந்த குடும்பத் தொடர்

படிக்க தவறாதீர்கள்..

“நான் கோவிலுக்கு போயிட்டு அப்படியே காலேஜ் போயிட்டு வரேன்பா”என்றாள் யாழினி.மகளின் முகத்தை சில நொடிகள் ஆராய்ந்த மோகன்,பிறகு மென்மையான குரலில், “ பத்திரமா போயிட்டு வா!” என்றார். புன்னகையுடன் புறப்பட்டாள் யாழினி.

மனதினில் புகழை வசைப்பாடிக் கொண்டிருந்தாள் அவள்.

“எரும.. பிசாசு… நீ என் பக்கத்துல இல்லாதது என்னை இந்த அளவுக்கு பாதிக்கும்னு எப்படிடா எனக்கு தெரியாமல் போணிச்சு.. உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா மேன்? எல்லாருக்கும்நல்லது பண்ணுற, என்னை மட்டும் புலம்ப விடுற! நீ திரும்பி வா..அதுக்கு அப்பறம் உன்னை போக விடவே மாட்டேன்”என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டாள் அவள். அறிந்திருக்கவில்லை அவள்! அடுத்து வரப்போகும் ஏழு நாட்களில் புகழ், யாழினி இருவரும் தத்தம் வாழ்வில் புதிதொரு அத்தியாயத்தை தொடங்க போகிறார்கள் என்று!

கோவிலில் அருள்முருகனின் முன் நின்று மனமுருகி வேண்டிக் கொண்டிருந்தாள் யாழினி. சில நிமிடங்களுக்குப் பின் கண் திறந்தவள், அப்போதுதான் தனது தோளில் பதிந்த கரம் ஒன்றை கவனித்தாள். கேள்வியுடன் திரும்பியவளை பார்த்து பெரிதாய் புன்னகைத்தார் அவர்.

“நீங்களா?”

“என்னம்மா பயந்துட்டியா?”

“..” பதில் ஏதும் சொல்லாமல் அவருக்கு பின்னால் எதையோ தேடிக் கொண்டிருந்தாள் யாழினி. அவள் விழி போகும் போக்கினை உணர்ந்து கொண்டார் அவர்.

“தமிழ் வரலம்மா..நான் மட்டும்தான் வந்தேன்!”என்று சொல்லி வசீகரமாய் புன்னகைத்தார் மனோன்மணி, தமிழின் அன்னை.

“ஐயையோ கண்டுபிடித்துவிட்டாரே”என்று மனதிற்குள் நாணியவளின் முகமும் லேசாய் சூடேறி சிவந்தது. தன்னிச்சையாய் விழிகளை தாழ்த்திக் கொண்டாள் யாழினி. அவளுக்கே தன் செயல் புதிதாய்தான் இருந்தது. “என்ன மாதிரியான அவஸ்தை இது? என்னவோ தமிழே தன்னெதிரில் கைக் கட்டி நின்று கண் சிமிட்டிய மாதிரி” குப்பென்று வியர்த்தது அவளுக்கு.

“ரொம்ப பதட்டமா இருக்கியே யாழினி!”என்றார் அவர்.

“அது.. அது ஒன்னுமில்ல..நீங்க எப்படி இருக்கீங்கம்மா?”

“எனக்கென்ன.. அமோகமாய் இருக்கேன்..”

“வீட்டுல?”

“வீட்டுல என் கணவர், நாய்குட்டி,பணியாள்ன்னு எல்லாருமே நல்லா இருக்காங்களே!” பரிகாசமாய் ஒலித்தது மனோன்மணியின் குரல்.

“அ..அவர்.. எப்படி இருக்காரு?” என்றாள் யாழினி. அவனை என்னவென்று அழைப்பதாம்? உங்கள் மகன் என்று சொல்வது அதிகம் உரிமை எடுத்துகொள்வது போல இருந்தது.தமிழ் என்று சொல்லும்போது, தன் குரலில் நேசம் உருகி, அதை அவனது அன்னையார் கண்டுகொண்டு விடுவாரா என்ற தயக்கம் மறுபுறம். எப்படி சொல்ல்லாமென்று அவள் ஆராய்ச்சி நடத்தி கொண்டிருக்கும்போதே,

“ எவரும்மா?”என்றார் மனோன்மணி, அவர் குரலில் நகைப்பு பிரதிபலித்தது. அதில் சட்டென சுதாரித்திருந்தாள் யாழினி. என்ன செய்து கொண்டிருக்கிறேன்? என்று தன்னையே கடிந்து கொண்டவள் இப்போது இயல்பாகிவிட்டவள் போல,

“டாக்டர் சார் தான் எப்படி இருக்கார்மா?”என்றாள். அவளது பாவனையை இதுவரை ரசித்த மனோன்மணிக்கு திடீரென என்னவோ போலாகிவிட்டது. இருப்பினும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,

“இப்போ நல்லாத்தான்மா இருக்கான்..நீ கவலைப்படாதே”என்றார். அவருக்கு உடனே விளக்கம் தந்துவிடும் நோக்கில்,

“நான் பொதுவாக யாருக்கும் சுமையாக இருக்கனும்னு நினைக்கிறது இல்லைம்மா..அதனாலத்தான் டாக்டர் சாரின் நிலைமையை நினைச்சுகொஞ்சம் வருத்தமா இருந்தது ..”என்றாள் அவள். அவளது விளக்கத்தை ஏற்றுக் கொண்டவர் போல,மனோவும் அவளிடம் இலகுவாக பேசி ஆரம்பித்தார்.

யாழினி, அவளின் வாழ்க்கை, அவளின் நண்பன் புகழ் என அனைத்தையும் தெரிந்து கொண்டவர் அவள்கையில் ரோஜா பூவொன்றை தந்து,

“ உன்னுடைய மென்மையான மனசுக்கு,நீ ஆசைப்பட்டது எல்லாமே வாய்திறந்து கேட்காமலேநடக்கும் யாழினி”என்றார். மேலும்,

“ரோஜா அழகான பூ, மென்மையானது. அதனுடைய குணமே அழகாய் பூத்து அனைவரையும் வசீகரிக்கிறதுதான். அப்படிப்பட்ட ரோஜாவுக்கு காவலன் முரட்டுத்தனமான முள் தான்! முள் ரோஜாவுக்கு அழகில்லைன்னு உலகமே சொன்னாலும், அது உண்மையில்லைன்னு அதோடு இருக்கும் பூவுக்குத்தான் தெரியும்!நீயும் உன்னோடு இருக்கும் உறவுகளை ரோஜாமாதிரி புரிஞ்சு நடந்துக்கோ!”என்று கூறி அவள் கன்னத்தை வருடிவிட்டு அங்கிருந்து சென்றார். அந்த ரோஜாப்பூவை அவள் உற்று நோக்கிட, அதில் ஒரு கடுவன் பூனையில் அழகு வதனம் தோன்றியது! அது யாருன்னு நான் சொல்லித்தான் தெரியனுமா?

தொடரும்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:994}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.