(Reading time: 12 - 23 minutes)

ந்த சுடிதார் நான் வாங்கும்போது கூட இவ்வளவு அழகில்லை சஹீ”என்றான் அவன்.

“ஆஹான்.. உனக்கு எதுக்கு சுடிதார்..? பொண்ணுங்க பசங்களை மாதிரி உடுத்தும்போது, பசங்களும் பொண்ணுங்களை மாதிரி உடுத்தலாம்னு சொல்லுறதுக்காக வாங்குனியோ?”என்று கேட்டவளை துரத்திக் கொண்டு ஓடினான் புகழ். தனது ஊருக்கு செல்லும் உற்சாகத்தில் இருந்தவளை ஒரு நொடி கூட விடாமல் ரசித்துக் கொண்டிருந்தான் புகழ்.

ஏற்கனவே, தனது தாய் சுப்ரஜாவிடம் சஹீயை பற்றி சொல்லிவிட்டிருந்தான் அவன். இப்போது காலேஜிற்கு சென்று லீவ் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புவதுதான் அவர்களது திட்டம்.

அதன்படி, சஹீபாவை அழைத்துக் கொண்டு தனது காலேஜுக்கு சென்றான் அவன்.

“சஹீ நீ கார்லயே இரு.. நான் வந்திடுறேன்” என்றவன் அலுவலக அறைக்கு சென்றான். காரில் அமர்ந்தபடியே அவன் வரும் பாதை நோக்கி காத்திருந்தாள் அவள். புகழுக்கு ஏற்கனவெ நல்ல பெயரும் அபிமானமும் இருந்ததால் அவனது அவசர விடுமுறை கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

காலேஜ் நிர்வாகத்தை கூட அசால்ட்டாக சமாளிப்பவன், தனது கூட்டனியை எப்படி சமாளிப்பது என்று யோசித்தான். பாட்ஷா படத்துல தலைவர் சொல்லுற மாதிரி, “உண்மைய சொல்லிடலாம்”என்று எண்ணியபடியே அவர்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு சென்றான்.

அந்த இடத்திற்கு நேரெதிராகத்தான் அவனது காரை பார்க் செய்திருந்தான் புகழ். அதனால் அம்மூவரையும் சஹீயால் தெளிவாகவே பார்க்க முடிந்தது. ரத்தின சுருக்கமாய், அதே நேரம் வெளிப்படையாய் நடந்ததை சொல்லியிருந்தான் புகழ்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா" - சமூக அக்கறையுள்ள குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

“பாவம் டா அந்த பொண்ணு”என்றான் குமரன்.

“உனக்கு செலவுக்கு கைல பணம் இருக்கா புகழ்?” என்று கேட்டாள் யாழினி.

“அதெல்லாம் இருக்கு யாழி.. நான்  இல்லாமல் குமரன் கூட சமாளிச்சிருவான்.. நீ பத்திரமா இருப்ப தானே?” என்று அக்கறையாய் கேட்டான் அவன்.

“லூசு, குமரன் என்னை பார்த்துப்பான்.. நான் பத்திரமா இருப்பேன்.. காலேஜ்ல எனக்கு என்ன ஆகபோகுது? வரவர உன் பாச மழையின் வேகத்தை தாங்க முடியல நண்பா… ” என்றவள் தன் பணப்பையை துலாவி பணத்தை அவனிடம் நீட்டினாள்.

“எதுக்கும் செலவுக்கு வெச்சுக்கோ புகழ்..”என்றாள்.

“ஹேய் டார்லிங், இதெல்லாம் வேணாம்டீ.. அப்பாவே உனக்கு கம்மியாகத்தான் பணம் தருவாரு.. அதையும் என்கிட்ட தந்துட்டு நீ என்ன பண்ணுவ? அதுமட்டுமில்ல, அதிரசம், பொறியுருண்டை வாங்கி தின்ன உனக்கு பணம் வேணாமா?” என்று நக்கலாய் கேட்டான் புகழ். லேசாய் அவன் மார்பில் குத்தினாள் யாழினி. “கழுதை! போடா!” என்றாள். அவள் தோளில் ஆதரவாய் கைபோட்டுக் கொண்டான் புகழ்.

“ இப்படி உம்முனு மூஞ்சிய வெச்சுக்கிட்டுத்தான் வழியனுப்புவியா அம்மு? உன் புகழ் பாவம்ல? சீக்கிரமா திரும்பி வந்திடுவேன்டீ.. “என்றான் அவன். அவனுக்காகவே ஈயென இளித்தாள் யாழினி.

“அப்பறம் இன்னொரு முக்கியமான விஷயம்!”

“என்னடா?”

“தமிழ்!!”

“..”

“சரி சரி.. மூஞ்சிய தூக்கி வெச்சுக்காத.. உன் வாழ்க்கை உன் கையில்.. ஆனா எது உனக்கு சரி வரும் வராதுன்னு யோசிச்சு முடிவெடு.. நான் திரும்பி வர்றதுக்குள்ள ரொம்ப மாறிடாதே..சரியா? பாய் பாய்” என்றுவிட்டு கிளம்பினான் புகழ். ( அவன் விளையாட்டாய் சொன்ன வார்த்தை நிஜமாகிப்போவதை அறியாமல் புன்னகைத்திருந்தனர் அம்மூவரும்)

காரில்..

புகழின் அருகில் வெகு இயல்பான முக பாவத்தில் இருந்தாள் சஹீபா. அவளுக்குள் பொறாமை உணர்வை தூண்டிவிட்டு காதலெனும் ஜோதியை ப்ரகாசமாய் எரியவைக்க நினைத்து தான் காரை யாழினியின் எதிரில் நிறுத்திவிட்டு பேசினான் அவன்.

குறைந்த பட்சம், “யார் அந்த பெண்” என்றாவது கேட்பாள், அப்படி அவள் கேட்கும்போது அவளது தொனியை வைத்து மனதினை கண்டுப்பிடிக்கலாம் என்று புகழ் நினைத்திருக்க அவன் கற்பனையெல்லாம், கற்பனையாகவே கரைந்து போனது.

“என்கிட்ட ஏதும் கேட்கனும்னு தோணுதா சஹீ?” என்று அவனே வாய்விட்டு கேட்டான். (ச்ச உன் நிலைமை இப்படியா புகழ் ஆகணும்? சோ சேட்!)

“ இல்லையே .. ஏன்?”

“இல்ல.. ஒண்ணுமில்ல.. நீ என்கிட்ட என்னவோ கேட்கவருவது போல இருந்துச்சு..” என்றவன்,

“பாட்டு கேட்கலாம்” என்றபடி வானொலியை உயிர்ப்பித்தான்.

எங்கே செல்லும் இந்த பாதை?

யாரோ யாரோ அறிவார்

இசைஞானியின் இனிய குரல் பாடல் ஒலித்திட புகழின் முகம் போன போக்கை பார்த்து கலகலவென சிரிக்க ஆரம்பித்திருந்தாள் சஹீபா.

“ஹா ஹா .. இதுக்குத்தான் சொல்லுறது, எல்லா நேரத்துலயும் சிட்டிவேஷன் சாங் எதிர்ப்பார்க்க கூடாதுன்னு” என்றவளை ஏதும் சொல்லாமல் செல்லமாய் முறைத்தான் புகழ்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.