(Reading time: 12 - 23 minutes)

Hadwin தலைமையில், ஹெலனாவின் உதவியுடன், மொத்தம் ஒன்பது பேரும், 40 அடி ஆழத்திற்கு உள்ளே இறங்கினர்........... அங்கு ஓர் மணல் திட்டு இருந்தது....... அங்கு முழுவதும் பவள பாறைகளால் நிறைந்திருந்தது. சிறு, சிறு  மீன்கள் அதன் உள்ளே புகுந்து வெளியே வந்து கொண்டிருந்தது. பார்பதற்கு சிறு குழந்தைகள் செடிகளுக்குள் புகுந்து விளையாடுவது போல் இருந்தது.......

இங்குள்ள தண்ணிர் மிக தெளிவாக இருப்பதால், இங்கு எழுபது அடி ஆழம் வரை அடியில் மிக நன்றாக பார்க்க இயலும். நீரின் வெட்பமும்      26 – 30 டிகிரியில் இருப்பதால் குளிராமல் நன்றா இருந்தது........

ஸ்ருதியும் , பூர்வியும் சேர்ந்து அங்குள்ள அழகை ரசித்து கொண்டிருந்தனர்........

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தீபாஸ்ன் "பெண்ணே என் மேல் பிழை" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

Hardwin னும் , ஹெலனாவும், பயணியர் தம்பதிகளுக்கு, ஒருவராக இருந்து, இரண்டு தம்பதிகளையும் பார்த்து கொண்டனர்.........

இந்தர் மட்டும் தனியாக நின்று கொண்டு சிறு சிறு மீன்களை ரசித்து கொண்டிருந்தான்........

அவர்கள் நின்றிருந்த இடம் சம தளமாக இருந்தது........... சிறிது நேரத்தில் இந்திரஜித் இவர்கள் இருவரையும் சைகை செய்து , அவர்களை தன்னுடன் வருமாறு அழைத்தான். அங்கிருந்து சிறிது தூரம் நீந்தியதும் , அங்கிருந்து மிக பெரிய பள்ளமாக தெரிந்தது............. அங்கிருந்து சுறா மீன்கள் வர ஆரம்பித்தன.......... மிக பெரியதும் இல்லாமல் , சிறியதும் இல்லாமல் மேலே புகை படத்தில் உள்ளது போன்ற சுறாக்கள் இவர்கள் அருகில் வந்தது நீந்தி சென்றன..........

அவைகளுக்கு Hadwin தன் கையிலிருந்த மூடி போட்ட வாளியிலிருந்து  சின்ன இறந்த சிறு மீன்களை எடுத்து கொடுக்க ஆரம்பித்தான். நான்கு சுறாக்கள் வந்தன. ஐரோப்பிய தம்பதிகளும், அவைகளுக்கு உணவளித்தனர்.

அவர்கள் அளித்ததை பார்த்து கொண்டிருந்த பூர்விக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை , ஆனால் அடுத்து இந்தர் சென்று மீனை, சுராவிற்கு கொடுத்த பொழுது மிக அச்சமாக , பட படப்பாக இருந்தது..........

அதை பார்க்க இயலாமல் பூர்வி மட்டும் திரும்பி பழைய இடத்திற்கே நீந்தி வந்தாள். அங்கு வந்து அங்கிருந்த ஆரஞ்சு நிற தாவரங்களை பார்த்து கொண்டிருந்தாள். அதில் ஒன்று மிக அழகாக ஆடி கொண்டிருந்தது.........  பூர்வியை பார்த்து வா என்று அழைப்பது போன்று இருந்ததால், அதனருகில் சென்று அதனை தொட்டு பார்த்தாள்.  அதன் முனை சிறிது கூராக இருந்ததால், அவளது கையை சிறிது கிழித்து விட்டது.......... கடலுக்கு அடியில் என்பதால் அவளுக்கு வலி கூட தெரியவில்லை.

அப்பொழுது, இந்தரும், அங்கு நீந்தி வருவதை பார்த்தாள். அந்நேரம் தனது விரலில் எதோ கருப்பு நிறமாக இருப்பதை கண்டு அதை துடைத்தாள்.  துடைத்த பின்பும், மறுபடி விரலில் அதே போல் இருந்தது கண்டு சிறிது குழப்பமடைந்தாள்............

இதனை பார்த்து கொண்டே பூர்வி ,அருகே வந்த இந்தர், அவளை மேலே செல்லும் படி சைகை செய்தான். இவன் சொல்லி நாம் ஏன் கேட்க வேண்டும்? என்ற எண்ணத்தில் அங்கேயே நின்று கொண்டிருந்தாள் பூர்வி.

அடுத்து இந்திரஜித் அவளது அருகில் வந்து அவசரமாக அவளது கையை பிடித்து இழுத்து கொண்டு வேகமாக மேல் நோக்கி நீந்த ஆரம்பித்தான்.......  பூர்விக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் அவனுடன் சேர்ந்து நீந்த ஆரம்பித்தாள்.

மேலே வந்ததும் அவன் கையை உதறி விட்டு கோபத்தில், “ஏன் இப்படி இழுத்துட்டு வர்றிங்க ? நான் என்ன செத்தா போய்ட்டேன்? என பூர்வி எரிந்து விழுந்தாள்.

“ஷட்அப் பூஜா, கோபத்தில் என்ன பேசறோம்ன்னு தெரியாதா? உன் கை விரலை  பார்” என இந்திரஜித்தும் கோபமாகவே கூறினான்.........

அப்பொழுது தான் தன் விரலை பார்த்தாள் பூர்வி..........அதில் ரத்தம் வந்து கொண்டிருந்தது............ கடலுக்கடியில் பார்த்த பொழுது எதோ கருப்பாக மட்டும் தெரிந்தது........

சே...... இதுக்காகவா , இதில் என்ன ஆக போகுது? ரொம்ப தான் அக்கரை இருப்பது போல் நடிக்காதிங்க....... என பூர்வி கோபமாக கூறினாள்......

அவள் விரலில்  ரத்தம் வருவதை பார்த்து தான் துடித்தது இவளுக்கு நடிப்பாக தெரிகிறதா? கோபத்தில் இந்திரஜித் கொந்தளித்தான்.........

“உன் மேல் ஒரு அக்கறையும் இல்லை, உன் ஒருத்தி ரத்த வாசத்திற்கு மத்த எல்லோரோட உயிரையும் சிக்கலில் வைக்க முடியாது....... இன்னும் கொஞ்ச நேரம் நீ அங்க இருந்திருந்தா, உன்னோட ரத்த வாசனைக்கு எல்லா சுறாவும், அங்கிருந்த நம்ம எல்லோரையும் நல்ல feed ஆக பார்த்திருக்கும்............. என கூறினான் இந்திரஜித் .

அப்போ என் மேல் இவனுக்கு அக்கறை இல்லையா? நான் அப்படி தான் சொல்லுவேன், அதற்காக இவன் இப்படியா சொல்லுவான் என பேதை மனம் கலங்கியது..........

சோ...... மத்தவங்களுக்கு ஆபத்து என்றதால் தான் என்னை காப்பாற்றுவானா? இல்லை என்றால் அப்படியே விட்டு விடுவானா , என நினைத்தவுடன், முதலில் கண்ணில் தான் வேர்த்தது. பின்ன இவன் முன்னால், அழறேன்னு என்று சொல்லிக்கவா  முடியும் சே............ 

அவள் கண்ணீரை பார்த்து, அவளது, வலிக்கு காரணமான அந்த தாவரத்தை திட்டி கொண்டே, கண்ணீருக்கு கரணம் தான் என்று  தெரியாமல்............

“கையை நீட்டு” என்று முதலுதவி பெட்டியுடன் வந்து இந்திரஜித் அமர்ந்து அவள் கையை பிடித்தான்.........

“ஒன்னும் தேவை இல்லை “ நானே பார்த்துகிறேன் என் கூறி கையை இழுத்து கொண்டாள் பூர்வி........

“சின்னபிள்ள தனமா நடந்துக்காத” அந்த கோரல்ஸ்ல கை வைக்க கூடாதுன்னு தெரியாதா? அது சில சமயம், கையை கீற மட்டும் செய்யாமல் சின்ன துணுக்குகள் போய் மாட்டிக்கும். அதனால காயம் சீக்கிரம் ஆறாது......... என இந்திரஜித் கூறுகையில் அவள் மேல் இருந்த அக்கறை தெரிந்தது........

அதற்குள் மற்றவர்களும் மேலே வந்து விட, அவர்களது ஷார்க் feeding பயணம் இனிதே முடிந்தது..........

NAU

நாமும் அங்கே அவர்களோடு......

 

Episode 02

Episode 04

{kunena_discuss:1103}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.