(Reading time: 12 - 23 minutes)

னைவரும், சாப்பிட்டு முடித்திருக்க, வெய்ட்டர் எல்லோருக்கும், பாதாம் இல்லாத பாதாம் கீர் பரிமாறினார்.............

ஆண்கள் அனைவரும் பிசினஸ் பற்றி பேச ஆரம்பிக்க, பெண்கள் ஒன்றாக சேர்ந்து அரட்டை அடிக்க ஆரம்பித்தனர்.............

“வாவ் !!!!!!! சூப்பரா இருக்கு இந்த கீர்........ இதுவரை நம்ம ரெசார்ட் மெனுவில் இது இருந்தது இல்லையே, ஸ்ருதி, எங்க அம்மாவிற்கு இந்திய உணவுகள் ரொம்ப பிடிக்கும். இதோட ரெசிபியை கொஞ்சம் சொல்லேன் என நவைலா கேட்டாள்..........

ஸ்ருதியும் , ரொம்ப சிம்பிள் ,

100 gm மஞ்சள் பூசணி , 200 gm சர்க்கரை , 50 gm முந்தரி , பாதாம் எசன்ஸ் 3சொட்டு. ½ லிட்டர் பால்.  10 gm சார பருப்பு.

பூசணியை தோல் சீவி சுத்தம் செய்து வெட்டி, முந்தரியோடு சேர்த்து வேக வைக்கணும் . வெந்ததும் ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்து , அதனுடன் காய்ச்சிய பால் , சர்க்கரை, பாதாம் எசன்ஸ் , சார பருப்பு சேர்த்து ஃப்ரிட்ஜில் வைத்து,குளிர்ந்தவுடன் பரிமாற வேண்டியது தான்............. என கூறி முடித்தாள்.

அத்துடன் சாப்பாடு முடிய, இரவு அவரவர் அறைக்கு திரும்பினர்......... மணி 9 என பார்த்த பூர்வி சென்னையில் 9.30 என கணக்கிட்டு அம்மாவோட சீரியல் பார்க்கும் நேரம் என நினைத்து அக்கா சியாமளாவை வாட்ஸ்அப் வீடியோ  காலில் அழைத்தாள். பூர்விக்கு, அக்காவின்  பெண், ஜனனி பேபியை பார்க்க வேண்டும் போல் இருந்தது.........

போன் எடுத்த அக்கா, “ஜனனியை இப்போ தான் தூங்க வைத்தேன்”....... நீ நாளைக்கு பேசு என கூறினார்.......... சிறிது நேரம் அக்காவுடன் அரட்டை அடித்து விட்டு உறங்க சென்றாள் பூர்வி...........

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "சக்ர வியூகம்" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

று நாள் மதியம் உணவிற்கு பின் தனது அலுவலக அறையில் அமர்ந்து தனது வேலைகளை பார்த்து கொண்டு இருந்த பொழுது பூர்வியை , sports சென்டர்க்கு வருமாறு நவைலா அழைத்தாள்............

அங்கு சென்று பார்த்த பொழுது, ஸ்ருதியும் அங்கு இருந்தாள்..........

பூர்வி, நமக்கு ப்ரீ diving சான்ஸ் கிடைச்சிருக்கு என சந்தோசமாக ஸ்ருதி கூறினாள்.......... அப்படியே, ஷார்க் feeding என எக்சைட்டடா இருந்தாள்....... ஆனால் பூர்விக்கு அதில் விருப்பம் இருக்கவில்லை ..........

“நான் வரவில்லை ஸ்ருதி, நீ வேணுமானால் போய் வா.”.......... என தனது விருப்பமின்மையை பூர்வி தெரிவித்தாள்

“எனக்கு துணைக்கு நீ வரணும் “ என அப்பொழுதும் ஸ்ருதி அடம் பிடித்து கொண்டிருந்தாள்........

அதற்குள் நவைலா அங்கு வந்து “ பூர்வி , “உங்களுக்கு இது வேலையின் ஒரு பகுதி, நீங்க வந்து தான் ஆக வேண்டும்”. அப்போ தான் உங்களுக்கு விருந்தினர்களின் தேவைகளை அறிந்து கொள்ள முடியும்..

ஸ்ருதிக்கு தான் இது கிப்ட் packege. அவங்களால் தவிர்க்க இயலும்...... உங்களால் முடியாது என நவைலா, பூர்வியிடம் விவரித்தாள்.

வேலை என்றதால் வேறு வழி இல்லாமல் பூர்வியும் , diving சூட் மாற்ற உள்ளே சென்றாள் ஸ்ருதியுடன் சேர்ந்து.............

அதற்குள் மற்றவர்களும் வந்து உடை மாற்றி கிளம்பினார்கள்...........

அனைவரும் முதலில் ஒரு படகில் ஏறி, ஆழ் கடல் துவங்கும் இடத்திற்கு சென்று , அங்கிருக்கும்  மிதக்கும் மேடையில் இறங்கி, அங்கிருந்து  கடலுக்குள் முழ்க வேண்டும்.  இந்த கடல் பகுதி முழுவதும் வெள்ளை மணல் பரப்பால் ஆனது. அதனால் கடல் நீர் மிக தெளிவாக இருக்கும்........ அடியில் இருப்பது எல்லாம் நன்றாக தெரியும் ............

ஆழ் கடல் துவங்கும் இடத்தில் இருந்து பார்த்தால், கடலுக்கு அடியில், பெரிய மலையின் மீது நாம் நிற்ப்பது போல் தோன்றும்.......... அந்த மலை பகுதி முழுவதும் பவள பாறைகளால் ஆனது .........

பாசிகள் பச்சை நிறத்தில் இருப்பது போல், இங்கு கடலுக்கடியில் உள்ள தாவரங்கள் , ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் , அது அசைந்து ஆடும் அழகை காணவே, ஐரோப்பாவில் இருந்து அதிக பயணிகள் வருகின்றனர்.......

நீச்சல் தெரியாதவர்கள் , வயதானவர்கள் அனைவரும் இதனை கண்டு களிக்க கிளாஸ் பாட்டாம் போட்டை பயன் படுத்துவர்........ இப்படகின் அடி பகுதி கண்ணாடியால் ஆனதாக இருக்கும். அனைவரும் சுற்றி அமர்ந்து கொண்டால், கடலின் அடியில் இருப்பதை பார்த்து மகிழலாம்.......

இவர்களது படகு கிளம்பும் சமயம், இந்தரும், diving சூட்டில் இவர்களது படகில் வந்து ஏறினான்......... அவன் ஏறியதும் படகு கிளம்பி சற்று தூரத்தில் நடு கடலில் மிதந்து கொண்டு இருந்த மேடையில் சென்று இவர்களை இறக்கி விட்டது........

Hadwin அனைவருக்கும் விளக்கி சொல்லி கொண்டிருந்தாரன், கடலுக்கடியில் சென்றதும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று........ நாம் 50 அடி வரை உள்ளே செல்லலாம், அதிக பட்சமாக 80 நிமிடங்கள் வரை உள்ளே இருக்கலாம். அடியில் சென்றதும் வெறும் சைகை பாஷை தான், அதனால் கவனமாக இருக்குமாறு கூறினாரன்...........

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.