(Reading time: 15 - 29 minutes)

தை பற்றி பேச நானே உங்க வீட்டுக்கு கூப்பிடலாம்னு இருந்தேன் மைத்ரீ.  நாங்கெல்லாம் கல்யாண ஏற்பாட்ல கொஞ்ச பிஸி.  அதனால யஷ்விதா மட்டும்தா ஷாப்பிங் வருவாமா.  அவளே எங்க எல்லாருக்கும் செலெக்ட் பண்ணிடுவா”

“கிரேட் அத்தை! இங்கயும் அப்பாக்கு ஒரு அவசர வேல… அம்மா பத்திரிக்கை கொடுக்க கிளம்பிட்டாங்க.  ஸோ நானும் ஜெய்யும் ஷாப்பிங் வரலாம்னு”

“நோ ப்ராலம் மைத்ரீ! நான் யஷ்விதாவை எங்க வரசொல்லட்டும்?”

“நாங்களே இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வந்து அவங்களை பிக் பண்ணிக்கிறோம்” அழைப்பைத் துண்டித்தவள்

“எப்படிப்பா? உங்க பொண்ணோட திறமை?” என்று பெருமையாக சந்திரசேகரின் அருகில் அமர்ந்தாள் மைத்ரீ.

“தாங்க்ஸ்டா கண்ணா!” என்றவர் ஜெய்யிடம் திரும்பி, “பத்திரமா போயிட்டு வந்திருங்க” என்றுவிட்டு சமையல் ஆர்டர் பற்றி விசாரிக்க புறப்பட்டார்.

ஜெய் உடனடியாக சரயூக்கு மெஸ்ஸெஜ் அனுப்பி தான் இன்று காலேஜ் வரமுடியாது என்றும் இன்னும் ஒரு மணி நேரத்தில் அவளை அந்த கடைக்கு வந்துவிடுமாறும் தெரிவித்தான்.  சிறிது நேரத்தில் மைத்ரீ மற்றும் ஜெய் ப்ரியாவின் வீட்டை அடைந்தனர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வசுமதியின் "சர்வதோபத்ர... வியூகம்...!!!" - சாகசம் + கற்பனை + நகைச்சுவை கலந்த தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

ந்த க்ளாஸ் முடிந்து ஜெய்யின் மெஸ்ஸெஜை பார்த்தவள் வேதிக்கிடம் சொல்லிவிட்டு வெளியே வரவும் கிரண் மற்றும் கௌதம் அங்கு நின்றிருந்தனர்.

“ஹாய்!” இருவருக்கும் பொதுவாக சொன்னாள்.

“ஹாய் சரயூ!” கிரணின் முகமும் குரலும் சோர்ந்திருந்தன.

“என்னாடியிருச்சுனு இப்படி வயலின் வாசிக்கிற மச்சா? சரயூ உதவி செய்வானு நான் அவ்வளவு சொல்லியும் கேட்கமாட்டிங்கிற.  நீயே அவளை கேளு இப்பவே சரி-னு சொல்லுவா” திட்டத்தின்படி கௌதம் பேசினான்.

கிரணின் முகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தவள் கௌதமின் வார்த்தைகளில் குழம்பினாள்.

எங்கோ வெறித்து கொண்டிருந்த கிரணின் பார்வை இப்போது சரயூவை ஒரு முறை உரசி பழைய நிலைக்கே திரும்பியது.

“இன்னுமா என்னை நம்பலை…. மச்சா!”

“என்னாச்சு கிரண்? நீங்க ஏன் இப்படி இருக்கீங்க? கௌதம் என்ன சொல்றாங்க? எனக்கு ஒன்னும் புரியல”

இப்போதும் கிரணிடம் எந்த மாற்றமும் இல்லை.  எங்கோ வெறித்தபடி அவன் நின்றிருக்க கௌதம் பேசினான்.

மைத்ரீ மற்றும் ஜெய்யை உபசரித்த ப்ரியாவின் அம்மா, “யஷூ! சீக்கிரம் கிளம்பி வா… நேரமாச்சு”

தயாராகி மாடிப்படிகளில் இறங்கியவள், “எதுக்குமா இப்படி கூப்பிட்டிட்டே இருக்க?” அப்படியே பேச்சை நிறுத்திவிட்டாள்.

மைத்ரீ மற்றும் ஜெய்யை அங்கு அவள் சற்றும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை என்பது சட்டென நின்ற அவளின் பேச்சும் நடையும் தெரிவித்தன.

“இவங்க வந்துட்டாங்கனுதா உன்னை கூப்பிட்டேன்… கிளம்பு…”

“எனக்கு சொல்லியிருக்கலாம்…. இப்படி பண்ணிட்டியேமா” அம்மாவின் காதை கடித்தவள்

“சாரி! நீங்க வெய்ட் பண்றது எனக்கு தெரியாது” இவர்களிடம் மன்னிப்பு கேட்டாள் யஷ்விதா.

ஜெய்யின் சிறு புன்னகையுடனான தலையசைப்பு பரவாயில்லை என்று சொல்ல மைத்ரீயோ, “உங்களை கடை வரைக்கும் அலையவிட வேணாம்னுதா நாங்களே உங்களை கூப்பிட்டு போகலாம்னு இங்க வந்தோம்.  ஸோ உங்க சாரி எங்களுக்கு வேணா.  அதுக்கு பதிலா வேற ஏதாவது…..” இவள் இழுக்கவும் சிரித்தாள் யஷ்விதா.

“நீங்க என்ன கேட்டாலும் கண்டிப்பா கிடைக்கும் மைத்ரீ”

“எனக்கு மட்டும்தானா? அப்போ ஜெய் பாவம்”

“அவங்களுக்கும்தா!”

“மைதி எப்பவுமே இப்படிதா… வாங்க நாம கிளம்பலாம்” என்று ஜெய் எழுந்து கொள்ள மூவரும் ப்ரியாவின் அம்மாவிடம் விடைப்பெற்றனர்.

கடைக்கு வந்து இரண்டு மணி நேரம் கடந்திருக்க சரயூவை காணாது ஜெய் கவலையுற்றான்.  அவனின் மெஸ்ஸெஜ்களுக்கு அவளிடமிருந்து எந்த பதிலுமில்லை.  எத்தனை முறை ஃபோனில் அழைத்தும் பயனில்லை. 

நேரம் கரைய ஜெய்யின் மனதில் பாரம் அதிகரித்து கொண்டிருந்தது.  மேலும் காத்திராமல் வேதிக்கை அழைக்க முடிவெடுத்தான்.

“மைதி! நீங்க செலக்ட் பண்ணிட்டிருங்க… நான் வந்துடுறேன்” கடையிலிருந்து வெளியேறினான்.

“என்ன மச்சா? அதிசயமா எனக்கு ஃபோன் பண்ற…”

‘இவன் வேற நேரங்காலம் தெரியாம’ ஜெய் நொந்துகொள்ள

அவனே தொடர்ந்தான், “புரியுது… புரியுது… சரயூ ஃபோன்ல பேலன்ஸ் இருந்திருக்காது அதான் எங்கிட்ட பேச…. இந்த ப்ளானா? நீயெல்லா எனக்கு ஃபோன் பண்ணிட்டாலும்” வேதிக் இவனை முழுவதுமாய் டேமெஜ் செய்தான்.

‘சரூ காலேஜுல இல்லையா? இவன் சொல்றத பார்த்தா சரூ இங்க வர விஷயம் இவனுக்கு தெரிஞ்சிருக்கு… அப்போ சரூக்கு என்னாச்சு?’

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.